உள்ளடக்கத்திற்குச் செல்க

Shimei பற்றிய பைபிள் வசனங்கள்

53 வசனங்கள் · 19 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. சீமேயி எருசலேமைவிட்டு காத் ஊருக்குப் போனதையும், திரும்பி வந்ததையும் சாலொமோன் கேள்விப்பட்டான்.

  2. அப்போது அரசன் சீமேயியை அழைத்து அவனிடம், “ ‘இவ்விடத்தை விட்டு வேறு எங்கே போனாலும் அன்றே சாவாய் என்று யெகோவாவின் பெயரில் ஆணையிடும்படி உன்னை நான் எச்சரிக்கவில்லையா’? அதற்கு நீயும், ‘நீர் சொல்வது நல்லது. நான் அதற்குக் கீழ்ப்படிவேன்’ என்று கூறினாயே.

  3. இப்போது ஏன் யெகோவாவுக்கு நீ கொடுத்த வாக்கை நிறைவேற்றாமலும், என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலும் விட்டாய்?” என்றான்.

  4. மேலும் அரசன் சீமேயியிடம், “என் தகப்பன் தாவீதுக்கு நீ செய்த எல்லாப் பிழைகளையும் உன் மனதில் நீ அறிவாய். இப்போது உனது பிழையான செயல்களுக்கு யெகோவா பதில் செய்வார்.

  5. ஆனால் சாலொமோன் அரசனோ ஆசீர்வதிக்கப்படுவான். அத்துடன் தாவீதின் அரியணை யெகோவாவுக்குமுன் என்றென்றும் உறுதியாக இருக்கும்” என்றான்.

  6. அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயாவுக்கு அரசன் கட்டளையிட்டபடி, அவன் போய் சீமேயியை வெட்டிக் கொலைசெய்தான். இதனால் அரசு சாலொமோனின் கைகளில், மேலும் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.

  7. ஏலாவின் மகன் சீமேயி, பென்யமீனின் ஆளுநர்.

  8. பெதாயாவின் மகன்கள்: செருபாபேல், சிமேயி. செருபாபேலின் மகன்கள்: மெசுல்லாம், அனனியா; இவர்களின் சகோதரி செலோமித்.

  9. மிஸ்மாவின் சந்ததிகள்: அவனுடைய மகன் அம்முயேல், இவனது மகன் சக்கூர், இவனது மகன் சீமேயி.

  10. சீமேயிக்கு பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர். ஆனால் இவனது சகோதரர்களுக்கு அநேகம் பிள்ளைகள் இருக்கவில்லை; அதனால் யூதா மக்களைப்போல் இவர்களது முழு வம்சமும் பெருகியிருக்கவில்லை.

  11. யோயேலின் சந்ததிகள்: யோயேலின் மகன் செமாயா, இவனது மகன் கோக், இவனது மகன் சிமேயீ;

  12. கெர்சோமின் மகன்கள்: லிப்னி, சீமேயி.

  13. மெராரியின் சந்ததிகள்: மகேலி, இவனது மகன் லிப்னி, இவனது மகன் சிமேயி, இவனது மகன் ஊசா;

  14. இவன் ஏத்தானின் மகன், இவன் சிம்மாவின் மகன், இவன் சீமேயின் மகன்,

  15. அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சீமேயியின் மகன்கள்.

  16. கெர்சோனியரில் லாதானும் சீமேயியும் இருந்தார்கள்.

  17. சீமேயியின் மகன்கள்: செலோமோத், ஆசியேல், ஆரான் ஆகிய மூன்றுபேர்; இவர்கள் லாதானின் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தார்கள்.

  18. சீமேயியின் மற்ற மகன்கள்: யாகாத், சீனா, எயூஷ், பெரீயா ஆகிய இவர்களும் சீமேயியின் நான்கு மகன்கள்.

  19. பத்தாவது சீட்டு சீமேயிவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.

  20. ராமாத்தியனான சீமேயி திராட்சைத் தோட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். திராட்சைத் தோட்டங்களின் விளைச்சலைத் திராட்சைத் தொட்டிகளுக்கு சேர்ப்பதற்கு சிப்மியனான சப்தி பொறுப்பாய் இருந்தான்.

  21. ஏமானின் சந்ததிகளிலிருந்து: யெகியேல், சிமேயி; எதுத்தூனின் சந்ததிகளிலிருந்து: செமாயா, ஊசியேல்.

  22. அப்பொழுது அவர்கள் காணிக்கைகளையும், பத்திலொரு பாகத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட நன்கொடைகளையும் உண்மையான மனதுடன் கொண்டுவந்தார்கள். இவற்றிற்கு லேவியனான கொனனியா பொறுப்பாக இருந்தான். அவனுடைய சகோதரன் சிமேயி பதவியில் அவனுக்கு அடுத்ததாக இருந்தான்.

  23. யெகியேல், அசசியா, நாகாத், ஆசகேல், எரிமோத், யோசபாத், எலியேல், இஸ்மகியா, மாகாத், பெனாயா ஆகியோர் எசேக்கியா அரசனால் நியமிக்கப்பட்டு, கொனனியாவுக்கும், அவன் சகோதரன் சிமேயிவுக்கும் கீழ் மேற்பார்வையாளர்களாக இருந்தார்கள். அசரியா இறைவனின் ஆலயத்திற்குப் பொறுப்பான அதிகாரியாயிருந்தான்.

  24. லேவியர்களிலிருந்து: யோசபாத், சிமெயி, கெலாயா எனப்பட்ட கெலித்தா, பெத்தகியா, யூதா, எலியேசர்.

  25. ஆசூமின் வழித்தோன்றலிலிருந்து மதனாய், மத்தத்தா, சாபாத், எலிபேலேத், எரெமாயி, மனாசே, சிமெயி