circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
- எரேமியா 43:8சுமார் கி.மு. 588
தக்பானேஸ் என்ற இடத்தில் யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: அவர் அவனிடம்,
- எரேமியா 43:9சுமார் கி.மு. 588
“யூதர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது சில பெரிய கற்களை எடுத்து, தக்பானேஸில் உள்ள பார்வோனின் அரண்மனை வாசலில் இருக்கும், செங்கல் நடைபாதையில் களிமண்ணில் புதைத்து வை.
- எரேமியா 43:10சுமார் கி.மு. 588
பின்பு அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது, இதுவே: என் ஊழியக்காரனாகிய பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரை நான் அழைப்பித்து, நான் புதைத்து வைத்த, இந்தக் கற்களின் மேலே அவனுடைய அரியணையை அமைப்பேன். அவன் தன்னுடைய ராஜகூடாரத்தை அதற்குமேல் விரிப்பான்.
- எரேமியா 43:11சுமார் கி.மு. 588
அத்துடன் அவன் வந்து எகிப்தைத் தாக்குவான். மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு மரணத்தையும், சிறையிருப்புக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு சிறையிருப்பையும், வாளுக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு வாளையும் அவன் கொண்டுவருவான்.
- எரேமியா 43:12சுமார் கி.மு. 588
மேலும் எகிப்தின் தெய்வங்களின் கோவில்களுக்கு நெருப்பு வைப்பான். அவன் அவர்களுடைய கோவில்களை எரித்து, அவர்களுடைய தெய்வங்களைச் சிறையாக்கிக் கொண்டுபோவான். ஒரு மேய்ப்பன் தனது ஆடைகளிலிருந்து பேன்களை எடுத்து சுத்தம் செய்வதுபோல அவர் எகிப்து தேசத்தை சுத்தம் செய்வான்; அங்கிருந்து நலமாய் புறப்பட்டுப் போவான்.
- எரேமியா 43:13சுமார் கி.மு. 588
எகிப்திலுள்ள பெத்ஷிமேஷின் புனிதத் தூண்களை உடைத்து, எகிப்திலுள்ள தெய்வங்களின் கோவில்களை நெருப்பினால் எரித்துப்போடுவான் என்றார்.”
- எரேமியா 44:1சுமார் கி.மு. 587
மிக்தோல், தக்பானேஸ், மெம்பிஸ் ஆகிய கீழ் எகிப்திலும், பத்ரோசிலும் வாழ்ந்த யூதர்களைக் குறித்து எரேமியாவுக்கு இந்த வார்த்தை வந்தது:
- எரேமியா 44:2சுமார் கி.மு. 587
“இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: எருசலேமின்மேலும், யூதாவின் பட்டணங்களிலும் நான் கொண்டுவந்த பேரழிவை நீங்கள் கண்டீர்கள். இன்று அவை குடியிருப்பாரின்றி பாழாக்கப்பட்டு கிடக்கின்றன.
- எரேமியா 44:3சுமார் கி.மு. 587
அவர்கள் செய்த தீமையினாலே இப்படி நடந்தது. அவர்களோ நீங்களோ உங்கள் முற்பிதாக்களோ, ஒருபோதும் அறிந்திராத வேறு தெய்வங்களை அவர்கள் வணங்கி, அவைகளுக்குத் தூபம் எரித்து எனக்குக் கோபமூட்டினார்கள்.
- எரேமியா 44:4சுமார் கி.மு. 587
நான் திரும்பத்திரும்ப என் ஊழியர்களான இறைவாக்கினரை அனுப்பினேன். அவர்கள், ‘நான் வெறுக்கிற இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்யவேண்டாம்’ என்று சொன்னார்கள்.
- எரேமியா 44:5சுமார் கி.மு. 587
ஆனாலும் என் மக்கள் அதைக் கேட்கவோ, கவனிக்கவோ இல்லை. தங்களுடைய கொடுமையிலிருந்து திரும்பவுமில்லை. வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவதை நிறுத்தவும் இல்லை.
- எரேமியா 44:6சுமார் கி.மு. 587
ஆகையால் என்னுடைய கடுங்கோபம் ஊற்றப்பட்டது. அது யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்து, அவைகளை இன்று இருப்பதுபோல் வெறும் பாழிடமாய் ஆக்கியிருக்கிறது.
- எரேமியா 44:7சுமார் கி.மு. 587
“இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுகிறதாவது: ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் யூதாவிலிருந்து அகற்றி, ஒருவரும் உங்களுக்கென மீதியாயிருக்கவிடாமல், இப்படியான பெரும் பேராபத்தை ஏன் உங்கள்மேல் கொண்டுவருகிறீர்கள்?
- எரேமியா 44:8சுமார் கி.மு. 587
நீங்கள் குடியிருக்கும்படி வந்து சேர்ந்திருக்கும் எகிப்து நாட்டில் வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டி, உங்கள் கைகளின் செயல்களினால் ஏன் என்னைக் கோபமடையச் செய்கிறீர்கள்? உங்களையே நீங்கள் அழித்து, பூமியிலுள்ள எல்லா மக்கள் மத்தியிலும் நீங்கள் உங்களைச் சாபப்பொருளாகவும், பழிச்சொல்லாகவும் ஆக்குகிறீர்கள்.
- எரேமியா 44:9சுமார் கி.மு. 587
நீங்கள் உங்கள் முற்பிதாக்களினாலும், யூதா நாட்டு அரசர்களினாலும், அரசிகளினாலும் செய்யப்பட்ட கொடுமைகளை மறந்துவிட்டீர்களா? நீங்களும், உங்கள் மனைவியரும் எருசலேமின் தெருக்களிலும், யூதா நாட்டிலும் செய்த கொடுமைகளை மறந்துவிட்டீர்களா?
- எரேமியா 44:10சுமார் கி.மு. 587
இன்றுவரை அவர்கள் தங்களைத் தாழ்த்தவோ, பயபக்தியை காட்டவோ இல்லை. நான் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் முன்வைத்த என் சட்டங்களையும், விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றவுமில்லை.”
- எரேமியா 44:11சுமார் கி.மு. 587
ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “உன்மீது பேராபத்தைக் கொண்டுவரும்படியும், யூதா உங்களில் ஒவ்வொருவனையும் அழிக்கும்படியும் நான் தீர்மானித்திருக்கிறேன்.
- எரேமியா 44:12சுமார் கி.மு. 587
எகிப்தில் குடியிருக்கும்படி, அங்குதான் போவோம் என முடிவெடுத்த யூதாவின் மீதியானோரை நான் அகற்றிவிடுவேன். அவர்கள் யாவரும் எகிப்தில் அழிந்துபோவார்கள். அவர்கள் வாளினால் விழுந்தோ, பஞ்சத்தினால் இறந்துபோவார்கள். அவர்கள் சிறியோரிலிருந்து பெரியோர்வரை வாளினால் அல்லது பஞ்சத்தினால் அழிவார்கள். அவர்கள் சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், கண்டனத்திற்கும், பழிச்சொல்லுக்கும் ஆளாவார்கள்.
- எரேமியா 44:13சுமார் கி.மு. 587
நான் எருசலேமை தண்டித்ததுபோல எகிப்தில் குடியிருப்பவர்களையும் வாளினாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன்.
- எரேமியா 44:14சுமார் கி.மு. 587
எகிப்தில் குடியிருக்கப்போன யூதாவில் மீதமுள்ளோர் யாரும் யூதா நாட்டுக்குத் திரும்பிவர தப்பியோ, பிழைத்தோ இருக்கமாட்டார்கள். அங்கு திரும்பிவந்து வாழவேண்டுமென்ற வாஞ்சை அவர்களுக்கு இருந்துங்கூட, ஒருசில அகதிகளைத்தவிர வேறு ஒருவரும் திரும்பமாட்டார்கள்.”
- எரேமியா 44:15சுமார் கி.மு. 587
அப்பொழுது தங்கள் மனைவியர் பிற தெய்வங்களுக்கு பலி செலுத்தியதை அறிந்திருந்த எல்லா மனிதரும், அவர்களோடு நின்ற எல்லாப் பெண்களுமான பெரும் கூட்டமும், மேல் எகிப்திலும் கீழ் எகிப்திலும் வாழ்ந்த எல்லா மக்களும் எரேமியாவிடம் கூறியதாவது:
- எரேமியா 44:16சுமார் கி.மு. 587
“யெகோவாவின் பெயரால் நீ எங்களுக்குக் கூறிய செய்தியை நாங்கள் கேட்கப்போவதில்லை.
- எரேமியா 44:17சுமார் கி.மு. 587
ஆனால் நாங்கள் எவைகளைச் செய்வோமெனக் கூறினோமோ, அவைகளையே நிச்சயமாகச் செய்வோம். எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் பட்டணங்களிலும் எங்கள் முற்பிதாக்களும், எங்களுடைய அரசர்களும், அதிகாரிகளும் செய்ததுபோலவே நாங்களும் வான அரசிக்குத் தூபங்காட்டி அவளுக்குப் பானபலிகளையும் வார்ப்போம். அந்த நாட்களில் எங்களுக்குப் போதிய உணவு இருந்தது. எல்லா செல்வாக்குடனும் நாங்கள் இருந்தோம். எந்தவித துன்பத்தையும் நாங்கள் காணவில்லை.
- எரேமியா 44:18சுமார் கி.மு. 587
ஆனால் வான அரசிக்கு நாங்கள் தூபம் செலுத்துவதையும் பானபலிகள் வார்ப்பதையும் நிறுத்தியதிலிருந்து, நாங்கள் எல்லாவற்றிலும் குறைவடைந்தோம். வாளினாலும், பஞ்சத்தினாலும் அழிந்துகொண்டிருக்கிறோம்” என்றார்கள்.
- எரேமியா 44:19சுமார் கி.மு. 587
மேலும் அங்கிருந்த பெண்கள், “நாங்கள் வான அரசிக்குத் தூபங்காட்டி, அவளுக்கு பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் அவளுடைய உருவமுள்ள அப்பங்களைச் சுட்டதையும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றியதையும் எங்கள் கணவன்மார் அறியாமலா இருந்தார்கள்?” என்று கேட்டார்கள்.