- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
Creation Era
Creation & The Fall
God creates the heavens and earth, forming humanity in his image before sin enters the world.
- ஆதியாகமம் 4:21சுமார் கி.மு. 4003
அவனுடைய சகோதரனின் பெயர் யூபால்; அவன் முதன்முதலில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைத்தவன் ஆனான்.
- ஆதியாகமம் 4:22சுமார் கி.மு. 4003
சில்லாளும், தூபால்காயீன் என்னும் ஒரு மகனைப் பெற்றாள்; அவன் வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் கருவிகளைச் செய்யும் தொழிலாளி ஆனான். தூபால்காயீனுடைய சகோதரி நாமாள்.
- ஆதியாகமம் 4:23சுமார் கி.மு. 4003
லாமேக் தன் இரு மனைவிகளிடம் சொன்னதாவது: “ஆதாளே, சில்லாளே, எனக்குச் செவிகொடுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள். என்னைக் காயப்படுத்தியபடியால் ஒரு மனிதனைக் கொன்றேன், எனக்குத் தீங்கு செய்தபடியாலேயே அந்த வாலிபனைக் கொன்றேன்.
- ஆதியாகமம் 4:24சுமார் கி.மு. 4003
காயீனைக் கொல்பவனிடம் ஏழுமடங்கு பழிவாங்கப்படும் என்றால், லாமேக்கிற்காக எழுபத்தேழு மடங்கு பழிவாங்கப்படும்.”
- ஆதியாகமம் 4:25சுமார் கி.மு. 4003
ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் உறவுகொண்டான், அவள் ஒரு மகனைப் பெற்றாள், “காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக இறைவன் வேறொரு பிள்ளையைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.
- ஆதியாகமம் 4:26சுமார் கி.மு. 3769
சேத்தும் ஒரு மகனைப் பெற்றான்; அவன் தன் மகனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான். அக்காலத்தில் மக்கள் யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு அவரை ஆராதிக்க ஆரம்பித்தார்கள்.
ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார்.
அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார்.
- ஆதியாகமம் 5:3சுமார் கி.மு. 3874
ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான்.
- ஆதியாகமம் 5:4சுமார் கி.மு. 3874
சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- ஆதியாகமம் 5:5சுமார் கி.மு. 3074
ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- ஆதியாகமம் 5:6சுமார் கி.மு. 3769
சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான்.
- ஆதியாகமம் 5:7சுமார் கி.மு. 3769
சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- ஆதியாகமம் 5:8சுமார் கி.மு. 2962
சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- ஆதியாகமம் 5:9சுமார் கி.மு. 3679
ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.
- ஆதியாகமம் 5:10சுமார் கி.மு. 3679
கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- ஆதியாகமம் 5:11சுமார் கி.மு. 2864
ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- ஆதியாகமம் 5:12சுமார் கி.மு. 3609
கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.
- ஆதியாகமம் 5:13சுமார் கி.மு. 3609
மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- ஆதியாகமம் 5:14சுமார் கி.மு. 2769
கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- ஆதியாகமம் 5:15சுமார் கி.மு. 3544
மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.
- ஆதியாகமம் 5:16சுமார் கி.மு. 3544
யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- ஆதியாகமம் 5:17சுமார் கி.மு. 2714
மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- ஆதியாகமம் 5:18சுமார் கி.மு. 3382
யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.
- ஆதியாகமம் 5:19சுமார் கி.மு. 3382
ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.