உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. யோசுவா 11:20சுமார் கி.மு. 1450

    யெகோவாவே இஸ்ரயேலருடன் போர்புரியும்படி அவர்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தினார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்களை இரக்கமின்றி அழிக்கும்படிக்கே இப்படிச் செய்தார்.

  2. யோசுவா 11:21சுமார் கி.மு. 1450

    அக்காலத்தில் யோசுவா போய் மலைநாட்டிலிருந்த ஏனாக்கியரை அழித்தான்: அவர்கள் எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய பகுதிகளிலும், யூதா மலைநாடுகளிலும், இஸ்ரயேல் மலைநாடுகளிலும் வாழ்ந்துவந்தனர். யோசுவா அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முற்றிலும் அழித்தான்.

  3. யோசுவா 11:22சுமார் கி.மு. 1450

    இஸ்ரயேலர் வாழ்ந்த நாட்டின் எல்லைக்குள் ஒரு ஏனாக்கியருமே தப்பியிருக்கவில்லை. ஆயினும் காசா, காத், அஸ்தோத் ஆகிய பகுதிகளில் மட்டும் சிலர் வசித்தனர்.

  4. யோசுவா 11:23சுமார் கி.மு. 1450

    இவ்வாறாக யெகோவா மோசேக்கு அறிவுறுத்தியிருந்தபடியே யோசுவா முழு நாட்டையும் கைப்பற்றி, இஸ்ரயேலருக்கு அவர்கள் கோத்திரப் பிரிவுகளின்படி அவற்றைச் சொத்துரிமை நிலமாகக் கொடுத்தான். அதன்பின் நாட்டில் போர் ஓய்ந்து அமைதி நிலவியது.

  5. யோசுவா 12:1சுமார் கி.மு. 1450

    இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்ட நாட்டின் அரசர்கள் இவர்களே: யோர்தானுக்குக் கிழக்கே, அர்னோன் கணவாய் தொடங்கி, அரபாவின் கிழக்குப்பகுதி உட்பட எர்மோன் மலைவரையுள்ள அரசர்களுடைய நிலப்பகுதியை இஸ்ரயேலர் கைப்பற்றினர்.

  6. யோசுவா 12:2சுமார் கி.மு. 1450

    எமோரிய அரசன் சீகோன் எஸ்போனில் ஆட்சிசெய்தான். அவனுடைய ஆட்சி அர்னோன் கணவாயின் ஓரத்தில் உள்ள அரோயேர் தொடங்கி, அர்னோன் கணவாயின் நடுப்பகுதி வழியாக யாப்போக் ஆறுவரை இருந்தது. யாப்போக் ஆறு அம்மோனியரின் எல்லையாயிருந்தது. இது கீலேயாத்தின் அரைப்பகுதியை உள்ளடக்கியிருந்தது.

  7. யோசுவா 12:3சுமார் கி.மு. 1450

    அதோடு கிழக்கு அரபாவையும் இவனே ஆட்சிசெய்தான். அந்த நாடு கலிலேயாக்கடலிலிருந்து உப்புக்கடல்வரை போய் பெத்யெசிமோத் பட்டணம் வரையும் இருந்தது. பின்பு அது தெற்கே பிஸ்கா மலைச்சரிவுகளையும் உள்ளடக்கியதாயிருந்தது.

  8. யோசுவா 12:4சுமார் கி.மு. 1450

    பாசானின் அரசனாகிய ஓகு ஆட்சி செய்த பகுதியையும் இஸ்ரயேலர் கைப்பற்றினர். அவன் அஸ்தரோத், எத்ரே ஆகிய நிலப்பகுதி எல்லைகளை ஆட்சி செய்த ரெப்பாயீமியரைச் சேர்ந்த கடைசி அரசர்களில் ஒருவன்.

  9. யோசுவா 12:5சுமார் கி.மு. 1450

    அவன் எர்மோன் மலைநாடு, சல்கா பிரதேசம், மற்றும் பாசான் நாடு முழுவதையும் ஆட்சிசெய்தான். கேசூரியர், மாகாத்தியர் ஆகியோரின் பிரதேசங்களை எல்லையாகக்கொண்ட இடங்களையும் ஆட்சிசெய்தான். அவனுடைய ஆட்சி கீலேயாத்தின் அரைப்பகுதியை உள்ளடக்கியதாயிருந்தது. தெற்கே எஸ்போனின் அரசனாகிய சீகோனின் எல்லைவரை இருந்தது. சீகோன் எஸ்போனின் அரசனாயிருந்தான்.

  10. யோசுவா 12:6சுமார் கி.மு. 1450

    யெகோவாவின் அடியானாகிய மோசேயும் இஸ்ரயேலரும் இவ்விரு அரசர்களையும் வெற்றிகொண்டிருந்தார்கள். அத்துடன் யெகோவாவின் அடியானாகிய மோசே, கைப்பற்றப்பட்ட அவர்களுடைய நாட்டை இஸ்ரயேலரின் கோத்திரத்தாராகிய ரூபனியர், காத்தியர், மனாசே கோத்திரத்தின் அரைப்பகுதியினர் ஆகியோருக்குச் சொத்துரிமை நிலமாகக் கொடுத்தான்.

  11. யோசுவா 12:7சுமார் கி.மு. 1450

    யோர்தானுக்கு மேற்கேயுள்ள பகுதியில் யோசுவாவும் இஸ்ரயேலரும் வெற்றிகொண்ட நாட்டின் அரசர்களான இவர்கள் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காத் முதல் சேயீரை நோக்கி உயர்ந்துசெல்லும் ஆலாக் மலைவரையுள்ள பகுதியில் ஆட்சிசெய்தார்கள். இவர்களது நாடுகளை யோசுவா கைப்பற்றி, இஸ்ரயேலரின் கோத்திரங்களுக்கு ஏற்ப அவற்றைப் பிரித்து சொத்துரிமை நாடாக ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் கொடுத்தான்.

  12. யோசுவா 12:8சுமார் கி.மு. 1450

    அப்பகுதிகள் நடுவிலுள்ள மலை நாடுகள், மேற்கு மலையடிவாரப்பகுதிகள், அரபா, மலைச்சரிவுகள், யூதாவின் வறண்ட நிலம், நெகேவ் வனாந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. அவை முன்னர் ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களது நாடுகளாயிருந்தன. இவர்களே யோசுவா வெற்றிகொண்ட அரசர்கள்:

  13. யோசுவா 12:9சுமார் கி.மு. 1450

    எரிகோவின் அரசன் ஒருவன், பெத்தேலுக்கு அருகேயிருந்த ஆயியின் அரசன் ஒருவன்,

  14. யோசுவா 12:10சுமார் கி.மு. 1450

    எருசலேமின் அரசன் ஒருவன், எப்ரோனின் அரசன் ஒருவன்,

  15. யோசுவா 12:11சுமார் கி.மு. 1450

    யர்மூத்தின் அரசன் ஒருவன், லாகீசின் அரசன் ஒருவன்,

  16. யோசுவா 12:12சுமார் கி.மு. 1450

    எக்லோனின் அரசன் ஒருவன், கேசேரின் அரசன் ஒருவன்,

  17. யோசுவா 12:13சுமார் கி.மு. 1450

    தெபீரின் அரசன் ஒருவன், கெதேரின் அரசன் ஒருவன்,

  18. யோசுவா 12:14சுமார் கி.மு. 1450

    ஓர்மாவின் அரசன் ஒருவன், ஆராதின் அரசன் ஒருவன்,

  19. யோசுவா 12:15சுமார் கி.மு. 1450

    லிப்னாவின் அரசன் ஒருவன், அதுல்லாமின் அரசன் ஒருவன்,

  20. யோசுவா 12:16சுமார் கி.மு. 1450

    மக்கெதாவின் அரசன் ஒருவன், பெத்தேலின் அரசன் ஒருவன்,

  21. யோசுவா 12:17சுமார் கி.மு. 1450

    தப்புவாவின் அரசன் ஒருவன், எப்பேரின் அரசன் ஒருவன்

  22. யோசுவா 12:18சுமார் கி.மு. 1450

    ஆப்பெக்கின் அரசன் ஒருவன், லசரோனின் அரசன் ஒருவன்,

  23. யோசுவா 12:19சுமார் கி.மு. 1450

    மாதோனின் அரசன் ஒருவன், ஆத்சோரின் அரசன் ஒருவன்,

  24. யோசுவா 12:20சுமார் கி.மு. 1450

    சிம்ரோன் மோரோனின் அரசன் ஒருவன், அக்சாபின் அரசன் ஒருவன்,

  25. யோசுவா 12:21சுமார் கி.மு. 1450

    தானாகின் அரசன் ஒருவன், மெகிதோவின் அரசன் ஒருவன்,