Skip to content

Shem பற்றிய பைபிள் வசனங்கள்

81 வசனங்கள் · 4 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. சேலா 30 வயதாய் இருக்கும்போது, ஏபேரைப் பெற்றான்.

  2. ஏபேர் பிறந்த பிறகு, சேலா 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  3. ஏபேர் 34 வயதாய் இருக்கும்போது, பேலேகைப் பெற்றான்.

  4. பேலேகு பிறந்த பிறகு, ஏபேர் 430 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  5. பேலேகு 30 வயதாய் இருக்கும்போது ரெகூவைப் பெற்றான்.

  6. ரெகூ பிறந்த பிறகு, பேலேகு 209 வருடங்கள் வாழ்ந்து இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  7. ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான்.

  8. செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  9. செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான்.

  10. நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  11. நாகோர் 29 வயதாய் இருக்கும்போது தேராகுவைப் பெற்றான்.

  12. தேராகு பிறந்த பிறகு நாகோர் 119 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  13. தேராகு 70 வயதாய் இருக்கும்போது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.

  14. தேராகின் வம்சவரலாறு இதுவே: ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோருக்குத் தேராகு தகப்பனானான். ஆரான் லோத்துக்குத் தகப்பனானான்.

  15. தன் தகப்பன் தேராகு உயிரோடிருக்கும்போதே, ஆரான் தனது பிறப்பிடமான கல்தேயர் நாட்டிலுள்ள ஊர் என்னும் இடத்தில் இறந்தான்.

  16. ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள். ஆபிராமின் மனைவி சாராய், நாகோரின் மனைவி மில்க்காள்; மில்க்காள் ஆரானின் மகள், ஆரான் மில்க்காள், இஸ்காள் ஆகிய இருவரின் தகப்பன்.

  17. நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.

  18. சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக்கு.

  19. அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.

  20. ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.

  21. யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,

  22. அதோராம், ஊசால், திக்லா,

  23. ஏபால், அபிமாயேல், சேபா,

  24. ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.

  25. சேம், அர்பக்சாத், சேலா;