Skip to content

Shem பற்றிய பைபிள் வசனங்கள்

81 வசனங்கள் · 4 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஏபேர், பேலேகு, ரெகூ,

  2. செரூகு, நாகோர், தேராகு,

  3. ஆபிராமாகிய ஆபிரகாம்.

  4. ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு, இஸ்மயேல் என்பவர்கள்.

  5. அவர்களின் சந்ததிகள் இதுவே: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்;

  6. மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

  7. யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள். இவர்கள் இஸ்மயேலின் மகன்கள்.

  8. ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா. யக்க்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.

  9. மீதியானின் மகன்கள்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.

  10. ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கின் மகன்கள்: ஏசா, இஸ்ரயேல்.

  11. ஏசாவின் மகன்கள்: எலிப்பாஸ், ரெகுயேல், எயூஷ், யாலாம், கோராகு.

  12. எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்; திம்னா என்பவளுக்கு அமலேக்கு பிறந்தான்.

  13. ரெகுயேலின் மகன்கள்: நாகாத், செராகு, சம்மா, மீசா.

  14. சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான்.

  15. லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி.

  16. சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம். சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு.

  17. ஆனாகின் மகன்: திஷோன். திஷோனுடைய மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.

  18. ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், யாக்கான். திஷானுடைய மகன்கள்: ஊத்ஸ், அரான்.

  19. இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: பேயோரின் மகன் பேலா; அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.

  20. பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.

  21. யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.

  22. உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.

  23. ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.

  24. சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.

  25. சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.