Skip to content

Rivers பற்றிய பைபிள் வசனங்கள்

89 வசனங்கள் · 59 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.

  2. வாய்க்கால்கள் நாறும்; எகிப்தின் நீரோடைகள் வற்றி வறண்டுபோகும். கோரையும் நாணலும் வாடிவிடும்.

  3. ஆற்றின் முகத்துவாரத்தில், நைல் நதியின் ஓரத்தில் வளரும் தாவரங்களும் வாடிவிடும். நதியோரம் விதைக்கப்பட்ட உலர்ந்து, பறந்து இல்லாமல் போகும்.

  4. மீனவர்கள் புலம்புவார்கள், நைல் நதியில் தூண்டில்போடும் யாவரும் அழுவார்கள்; தண்ணீருள் வலை வீசுகிறவர்களும் கவலையால் வாடிப்போவார்கள்.

  5. சீகோரின் பெருவெள்ளத்தினால் விளையும் தானியமும், நைல் நதியின் அறுவடையுமே தீருவுக்கு வருமானமாயிருந்தது. தீரு நாடுகளின் சந்தைகூடும் இடமாகியது.

  6. தர்ஷீசின் மகளே, நைல் நதியைப்போல் உன் நாட்டின் வழியாகப் போ; ஏனெனில் இனி ஒருபோதும் உனக்குத் துறைமுகம் இருக்காது.

  7. பாருங்கள், யெகோவா பலமும் வல்லமையுமுள்ள ஒருவனை வைத்திருக்கிறார். அவன் கல்மழை போலவும் அழிக்கும் புயலைப் போலவும், பெருமழைபோலவும், வெள்ளப்பெருக்கு போலவும் அதைப் பலத்துடன் நிலத்தில் வீழ்த்துவான்.

  8. மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது. தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது, நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள்.

  9. ஒவ்வொரு மனிதனும் காற்றுக்கு ஒதுங்கும் ஒதுக்கிடம் போலவும், புயலுக்கு ஒதுங்கும் புகலிடம்போலவும், பாலைவனத்தில் நீரோடைகள் போலவும், தாகமுள்ள நிலத்துக்கு, பெருங்கன்மலையின் நிழல் போலவும் இருப்பான்.

  10. நீர்வளமுள்ள இடங்களில் விதை விதைத்து, சுதந்திரமாய் உங்கள் மந்தைகளையும் கழுதைகளையும் மேய்வதற்கு விடுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

  11. யெகோவாவே அங்கு நமது வல்லவராயிருப்பார். அது அகன்ற ஆறுகளும், நீரோடைகளும் உள்ள இடத்தைப் போலிருக்கும். துடுப்புகளால் வலித்து ஒட்டப்படும் மரக்கலங்களோ, பெரிய கப்பல்களோ அதில் செல்வதில்லை.

  12. நான் வறண்ட மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளில் நீரூற்றுக்களையும் உண்டாக்குவேன். பாலைவனத்தை நீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுவேன்.

  13. நீ தண்ணீரைக் கடக்கும்போது, நான் உன்னுடன் இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது, அவை உன்னை அள்ளிக்கொண்டு போகாது; நீ நெருப்பில் நடக்கும்போதும் எரிந்து போகமாட்டாய். நெருப்பு சுவாலை உன்னை எரித்துப்போடாது.

  14. இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்! அது இப்போதே உண்டாகிறது; அது உங்களுக்குத் தெரியவில்லையா? நான் பாலைவனத்தில் பாதையையும், பாழ்நிலத்தில் நீரூற்றுக்களையும் உண்டாக்குகிறேன்.

  15. நான் தெரிந்துகொண்ட என் மக்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு பாலைவனத்தில் தண்ணீரையும், பாழ்நிலத்தில் நீரோடைகளையும் நானே வழங்குகிறேன். அதனால், காட்டு மிருகங்களான குள்ளநரிகளும், நெருப்புக் கோழிகளும் என்னை கனம்பண்ணும்.

  16. நான் வந்தபோது ஒருவரும் இருக்கவில்லையே; அது ஏன்? நான் கூப்பிட்டபோது, ஒருவரும் பதில் கூறவில்லையே; அது ஏன்? உங்களை மீட்க முடியாதபடி என் கை மிகக் குறுகியதாயிருந்ததோ? அல்லது உங்களை விடுவிக்க எனக்கு வலிமையில்லையோ? நான் சிறு அதட்டலினால் கடலை வற்றப்பண்ணுகிறேன்; நான் ஆறுகளைப் பாலைவனமாக மாற்றுகிறேன். தண்ணீர் இல்லாததால், அவர்களுடைய மீன்கள் நாறுகின்றன; தாகத்தால் அவை சாகின்றன.

  17. ஏனெனில் யெகோவா சொல்வது இதுவே: “நான் அவளுக்கு நீடிய சமாதானத்தை நதியைப்போலவும், நாடுகளின் செல்வத்தை புரண்டோடும் நீரோடையைப்போல் நீடிக்கும்படி செய்வேன். நீங்கள் பாலூட்டப்பட்டு இடுப்பில் சுமக்கப்படுவீர்கள்; மடியில் தாலாட்டப்படுவீர்கள்.

  18. இப்போது நைல் நதியின் தண்ணீரைக் குடிக்க ஏன் எகிப்திற்குப் போகிறீர்கள்? ஐபிராத்து நதியின் தண்ணீரைக் குடிக்க ஏன் அசீரியாவுக்குப் போகிறீர்கள்?

  19. அவன் தண்ணீரின் ஓரத்தில் நடப்பட்டு நீரூற்றருகில் தனது வேர்களை விடும் மரத்தைப்போல இருப்பான். வெப்பம் வரும்போது அது பயப்படுவதில்லை. எப்போதும் அதன் இலைகள் பச்சையாயிருக்கும். வறட்சியான வருடத்தில் அதற்குக் கவலை இல்லை. அது பழங்கொடுக்கத் தவறுவதில்லை.”

  20. யெகோவா கூறுவது இதுவே: “பாருங்கள், வடக்கிலே வெள்ளம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது. அது கரைபுரண்டோடும் வெள்ளமாகும். அது நாட்டின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும் புரண்டோடும். பட்டணங்கள்மேலும், அதில் வாழும் யாவர்மேலும் புரண்டோடும். மக்கள் அலறி அழுவார்கள். நாட்டில் குடியிருப்போர் எல்லோரும் புலம்புவார்கள்.

  21. யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, ஏதோமை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். அதற்கென நான் நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? என்னைப் போன்றவன் யார்? என்னை எதிர்க்கக் கூடியவன் யார்? எந்த மேய்ப்பன் எனக்கெதிராக நிற்பான்?

  22. ஆகையால் யெகோவா கூறுவது இதுவே: “பார், நான் உனக்காக வழக்காடிப் பழிவாங்குவேன். அவளின் கடலை வற்றச்செய்து, ஊற்றுகளையும் வறண்டு போகப்பண்ணுவேன்.

  23. எனது முப்பதாம் வருடம் நான்காம் மாதத்தின் ஐந்தாம் நாளில் நான் கேபார் நதியருகே நாடுகடத்தப்பட்டோர் மத்தியில் இருந்தேன். அப்பொழுது வானம் திறக்கப்பட்டு இறைவனின் தரிசனங்களை அங்கு கண்டேன்.

  24. அப்பொழுது பாபிலோன் நாட்டிலுள்ள கேபார் நதியருகே இருந்த பூசியின் மகனும், ஆசாரியனுமான எசேக்கியேலாகிய எனக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அங்கே அவருடைய கரம் என்னுடன் இருந்தது.

  25. பின்பு கேருபீன்கள் மேலே எழும்பின. கேபார் நதியருகே நான் கண்ட உயிரினங்கள் இவையே.