- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
Psalms பற்றிய பைபிள் வசனங்கள்
முக்கிய பைபிள் வசனங்கள்
தீங்கான செயல்களை நான் என் கண்முன் வைக்கமாட்டேன். உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்; அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது.
வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்; நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன்.
தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை நான் தண்டிப்பேன்; கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை நான் சகிக்கமாட்டேன்.
நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; குற்றமற்றவனாய் நடப்பவர்களே எனக்கு ஊழியம் செய்வார்கள்.
வஞ்சனை செய்யும் யாரும் என் வீட்டில் வாழமாட்டார்கள்; பொய்ப் பேசுபவர் யாரும் என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.
நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும் காலைதோறும் தண்டிப்பேன்; தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும் யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.
தாவீதின் சங்கீதமாகிய பாடல். இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன்.
யாழே, வீணையே, விழித்தெழுங்கள், நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன்.
யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.
ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.
இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும்.
நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.
இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.
கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலைக்கவசம், யூதா என் செங்கோல்.
மோவாப் என் கழுவும் பாத்திரம், நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”
அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?
இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?
பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.
தாவீதின் சங்கீதம். யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; “நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”
உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், தாங்களாகவே முன்வருவார்கள்; அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல் உமது வாலிபர்கள் பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.
“மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்” என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்; அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.
அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.