உள்ளடக்கத்திற்குச் செல்க

Psalms பற்றிய பைபிள் வசனங்கள்

896 வசனங்கள் · 16 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்; அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும்.

  2. யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக அனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்; ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியுடனும் மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார்.

  3. யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்; தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும்.

  4. மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன; நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார்.

  5. நெருப்பு அவருக்கு முன்சென்று, சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.

  6. அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது; பூமி அதைக்கண்டு நடுங்குகிறது.

  7. யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.

  8. வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது; எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.

  9. உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும், விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்; தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள்.

  10. யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால் சீயோன் கேட்டுக் களிகூருகிறது; யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன.

  11. யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர்.

  12. யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி, கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்.

  13. நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது.

  14. நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.

  15. யெகோவா ஆட்சி செய்கிறார், நாடுகள் நடுங்கட்டும்; அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; பூமி அதிரட்டும்.

  16. சீயோனிலே யெகோவா பெரியவர்; அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.

  17. பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; அவர் பரிசுத்தமானவர்.

  18. அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்; நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்; நீர் யாக்கோபில் நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர்.

  19. நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி, அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்; அவர் பரிசுத்தமானவர்.

  20. அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்; அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்; அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்குப் பதிலளித்தார்.

  21. அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர் அவர்களுக்குக் கொடுத்த அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள்.

  22. எங்கள் இறைவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்; இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும், நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர்.

  23. நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.

  24. தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; உமக்கே நான் துதி பாடுவேன்.

  25. நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்; நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்? நான் குற்றமற்ற இருதயத்துடன் என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன்.