உள்ளடக்கத்திற்குச் செல்க

Psalms பற்றிய பைபிள் வசனங்கள்

896 வசனங்கள் · 16 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்; என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன். இறைவனே, என் இறைவனே, யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன்.

  2. என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக இன்னும் அவரைத் துதிப்பேன்.

  3. கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்; மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள்.

  4. உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர்.

  5. அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார், மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்.

  6. இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை, தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார்.

  7. இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்; யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.

  8. இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்; நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்.

  9. ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்; அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள்.

  10. இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.

  11. மக்களின் தலைவர்கள், ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள். ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்; அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.

  12. தாவீது அகிமெலேக்கின் வீட்டிற்கு சென்றான் என்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு சொன்னபோது பாடிய மஸ்கீல் என்னும் சங்கீதம். பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்? இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு எந்நாளும் உள்ளது.

  13. வஞ்சகம் செய்கிறவனே, உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது; அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது.

  14. நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும் உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய்.

  15. வஞ்சக நாவே, நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்!

  16. இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்: அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி, வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார்.

  17. இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்; அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து,

  18. “இதோ பாருங்கள், இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்; தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து, தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!” என்பார்கள்.

  19. ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல் இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்; நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில் எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

  20. நீர் எனக்குச் செய்தவற்றிற்காக உமது பரிசுத்தவான்களுக்கு முன்பாக நான் உம்மை என்றென்றும் துதிப்பேன், உம்முடைய பெயரில் நான் எதிர்பார்ப்பை வைப்பேன்; இறைவனே உமது பெயர் நல்லது.

  21. மகலாத் என்னும் பாணியில் வாசிக்கப்படும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான். அவர்கள் சீர்கெட்டவர்கள்; அவர்களுடைய வழிகள் இழிவானவை; அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

  22. இறைவன் பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.

  23. எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை.

  24. தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை.

  25. பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே, அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள். உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்; இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.