உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எண்ணாகமம் 17:11சுமார் கி.மு. 1471

    யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.

  2. எண்ணாகமம் 17:12சுமார் கி.மு. 1471

    அப்பொழுது இஸ்ரயேலர் மோசேயிடம், “நாங்கள் செத்தோம்! நாங்கள் தொலைந்தோம்! நாங்கள் எல்லோருமே தொலைந்தோம்!

  3. எண்ணாகமம் 17:13சுமார் கி.மு. 1471

    யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்கு அருகே வருபவன் எவனும் சாவான். நாங்கள் எல்லோரும் சாகப்போகிறோம்” என்றார்கள்.

  4. எண்ணாகமம் 18:1சுமார் கி.மு. 1471

    யெகோவா ஆரோனிடம் சொன்னதாவது, “நீயும், உன் மகன்களும் உன் தகப்பனின் குடும்பமும் பரிசுத்த இடத்திற்கு விரோதமாகச் செய்யப்படும் குற்றங்களுக்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆசாரியத்துவப்பணியின் குற்றங்களுக்கான பொறுப்பை நீயும், உன் மகன்களும் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  5. எண்ணாகமம் 18:2சுமார் கி.மு. 1471

    நீயும், உன் மகன்களும் சாட்சிபகரும் கூடாரத்திற்கு முன்பாகப் பணிசெய்யும்போது, உங்களுடன் சேர்ந்து உங்களுக்கு உதவிசெய்வதற்கு உங்கள் முற்பிதாக்களின் கோத்திரத்திலிருந்து, உங்கள் உடன் ஒத்த லேவியரை கொண்டுவர வேண்டும்.

  6. எண்ணாகமம் 18:3சுமார் கி.மு. 1471

    அவர்கள் கூடாரத்தின் கடமைகள் எல்லாவற்றையும் செய்வதில் உனக்கு உத்தரவாதமாயிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பரிசுத்த இடத்தின் பணிப்பொருட்களுக்கோ, பலிபீடத்துக்கோ அருகில் போகக்கூடாது. மீறினால், அவர்களும் நீயும் சாவீர்கள்.

  7. எண்ணாகமம் 18:4சுமார் கி.மு. 1471

    அவர்கள் உன்னுடன் சேர்ந்து கூடாரத்தின் எல்லா வேலைகளையும் செய்து, சபைக் கூடாரத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருக்க வேண்டும். நீ இருக்கும் இடத்திற்கு எவனும் வரக்கூடாது.

  8. எண்ணாகமம் 18:5சுமார் கி.மு. 1471

    “பரிசுத்த இடத்தினுடைய பலிபீடத்தினுடைய பராமரிப்புக்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும். அப்பொழுது என் கோபம் இஸ்ரயேலர்மேல் திரும்பவும் வராது.

  9. எண்ணாகமம் 18:6சுமார் கி.மு. 1471

    நான் நானே உன் உடன் ஒத்த லேவியரை இஸ்ரயேலருள் இருந்து தெரிந்தெடுத்து, உனக்குக் கொடையாகக் கொடுத்தேன். சபைக் கூடாரத்தின் வேலைகளைச் செய்வதற்காக அவர்கள் யெகோவாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

  10. எண்ணாகமம் 18:7சுமார் கி.மு. 1471

    பலிபீடத்திலும், திரைக்குள்ளும் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளிலும், நீயும் உன் மகன்களும் மட்டுமே ஆசாரியர்களாகப் பணிசெய்யலாம். நான் ஆசாரியப்பணியை உனக்கு ஒரு கொடையாகக் கொடுக்கிறேன். பரிசுத்த இடத்திற்குக் கிட்டவரும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்” என்றார்.

  11. எண்ணாகமம் 18:8சுமார் கி.மு. 1471

    பின்னும் யெகோவா ஆரோனிடம் சொன்னதாவது, “எனக்குக் கொடுக்கப்படும் காணிக்கைகளுக்குப் பொறுப்பாக நானே உன்னை வைத்திருக்கிறேன். இஸ்ரயேலர் எனக்காகக் கொடுக்கும் பரிசுத்த காணிக்கைகள் எல்லாவற்றையும் உனக்கும், உன் மகன்களுக்கும், உங்கள் பங்காகவும், நிரந்தர பாகமாகவும் கொடுக்கிறேன்.

  12. எண்ணாகமம் 18:9சுமார் கி.மு. 1471

    மகா பரிசுத்த காணிக்கைகளில் நெருப்பில் எரிக்கப்படாத அந்தப் பங்கு உனக்குச் சேரவேண்டும். தானிய காணிக்கை, பாவநிவாரண காணிக்கை, குற்றநிவாரண காணிக்கை எதுவானாலும் சரி, அவர்கள் மகா பரிசுத்தமான காணிக்கையாகக் கொண்டுவரும் எல்லா கொடைகளிலுமிருந்து எரிக்கப்படாத அப்பங்கு உனக்கும், உன் மகன்களுக்கும் சொந்தமாகும்.

  13. எண்ணாகமம் 18:10சுமார் கி.மு. 1471

    அதை மகாபரிசுத்தமானதாக எண்ணி; அவற்றைச் சாப்பிடவேண்டும். ஒவ்வொரு ஆணும் அதைச் சாப்பிடவேண்டும். நீ அதைப் பரிசுத்தமானதாக மதிக்கவேண்டும்.

  14. எண்ணாகமம் 18:11சுமார் கி.மு. 1471

    “இஸ்ரயேலருடைய காணிக்கைகளின் கொடைகள் எல்லாவற்றிலுமிருந்து பிரித்து வைக்கப்படும் எதுவும் உங்களுக்கே உரியது. நான் இதை உனக்கும், உன் மகன்களுக்கும், உன் மகள்களுக்கும், உன் வழக்கமான பங்காகக் கொடுக்கிறேன். உன் வீட்டில் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருக்கிற எவனும் அதைச் சாப்பிடலாம்.

  15. எண்ணாகமம் 18:12சுமார் கி.மு. 1471

    “இஸ்ரயேலர் தங்கள் அறுவடையின் முதற்பலனாக யெகோவாவுக்குக் கொடுக்கும் சிறந்த ஒலிவ எண்ணெயையும், சிறந்த திராட்சைரசத்தையும், தானியத்தையும் நான் உனக்குக் கொடுத்தேன்.

  16. எண்ணாகமம் 18:13சுமார் கி.மு. 1471

    அவர்கள் யெகோவாவுக்குக் கொண்டுவரும் நாட்டின் முதற்பலன் முழுவதும் உனக்குரியவை. உங்கள் குடும்பத்தில் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருக்கிற எவனும் அதைச் சாப்பிடலாம்.

  17. எண்ணாகமம் 18:14சுமார் கி.மு. 1471

    “இஸ்ரயேலின் யெகோவாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட எல்லாமே உன்னுடையவை.

  18. எண்ணாகமம் 18:15சுமார் கி.மு. 1471

    யெகோவாவுக்காக கொண்டுவரப்படும் கர்ப்பத்தின் முதற்பேறான பிள்ளையும், மிருகமும் உன்னுடையவைகளே. ஆனால் ஒவ்வொரு முதற்பேறான மகனையும், அசுத்தமான மிருகங்களின் ஆண் தலையீற்றையும் நீ மீட்கவேண்டும்.

  19. எண்ணாகமம் 18:16சுமார் கி.மு. 1471

    அவை ஒரு மாதமானவுடன், பரிசுத்த இடத்தின் சேக்கல் மதிப்பின்படி மீட்பின் கிரயமான ஐந்து சேக்கலைப் பெற்றுக்கொண்டு, நீ அவற்றை மீட்கவேண்டும். இருபது கேரா ஒரு சேக்கல்.

  20. எண்ணாகமம் 18:17சுமார் கி.மு. 1471

    “ஆனாலும், தலையீற்றான மாடுகள், செம்மறியாடு, வெள்ளாடு ஆகியவற்றை நீ மீட்கக்கூடாது. அவை பரிசுத்தமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தில் தெளித்து அவற்றின் கொழுப்பை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாய், நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக எரித்துவிடு.

  21. எண்ணாகமம் 18:18சுமார் கி.மு. 1471

    அசைவாட்டும் காணிக்கையான நெஞ்சுப்பகுதியும், வலதுதொடையும் உன்னுடையவையாய் இருப்பதுபோல், அவற்றின் இறைச்சியும் உனக்கே உரியது.

  22. எண்ணாகமம் 18:19சுமார் கி.மு. 1471

    இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் கொண்டுவரும் பரிசுத்த காணிக்கைகளிலிருந்து பிரித்து எடுக்கும் எதையும் நான் உனக்கும், உன் மகன்களுக்கும், மகள்களுக்கும், உங்களுடைய நிரந்தர பாகமாகக் கொடுக்கிறேன். இது யெகோவாவுக்கு முன்பாக உனக்காகவும், உன் சந்ததியினருக்காகவும் உப்பினால் செய்யப்படும் ஒரு நிரந்தர உடன்படிக்கையாய் இருக்கும்” என்றார்.

  23. எண்ணாகமம் 18:20சுமார் கி.மு. 1471

    பின்பு யெகோவா ஆரோனிடம் சொன்னதாவது, “உனக்கு அவர்கள் நாட்டில் உரிமைச்சொத்து இருக்காது. அவர்கள் மத்தியில் உனக்கு எந்தவித பங்கும் இருக்காது. இஸ்ரயேலர் மத்தியில் நானே உனது பங்கும், உரிமைச்சொத்துமாயிருக்கிறேன்.

  24. எண்ணாகமம் 18:21சுமார் கி.மு. 1471

    “லேவியர் சபைக் கூடாரத்தில் பணிசெய்கையில் அவர்கள் செய்யும் வேலைக்குக் கைமாறாக, இஸ்ரயேலிலுள்ள பத்தில் ஒன்றான காணிக்கைகளையெல்லாம் சொத்தாகக் கொடுக்கிறேன்.

  25. எண்ணாகமம் 18:22சுமார் கி.மு. 1471

    இஸ்ரயேலர் இனிமேல் சபைக் கூடாரத்திற்கு அருகே போகக்கூடாது. மீறினால், தங்கள் பாவத்தின் விளைவுகளைத் தாங்களே அனுபவித்துச் சாவார்கள்.