- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
- எண்ணாகமம் 16:11சுமார் கி.மு. 1471
நீங்களும் உங்களைப் பின்பற்றுகிறவர்களும் யெகோவாவுக்கு எதிராகவே கூட்டம் கூடியிருக்கிறீர்கள். ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவன் யார்?” என்று கேட்டான்.
- எண்ணாகமம் 16:12சுமார் கி.மு. 1471
அதன்பின் மோசே, எலியாபின் பிள்ளைகளான தாத்தான், அபிராம் ஆகியோரை அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்!
- எண்ணாகமம் 16:13சுமார் கி.மு. 1471
பாலும் தேனும் ஓடுகிற ஒரு நாட்டிலிருந்து பாலைவனத்தில் சாகடிக்க நீ எங்களைக் கொண்டுவந்தது போதாதோ? இப்பொழுது நீ எங்கள்மேல் அதிகாரமும் செலுத்தப்பார்க்கிறாயோ?
- எண்ணாகமம் 16:14சுமார் கி.மு. 1471
மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற நாட்டிற்குக் கொண்டுவரவுமில்லை, திராட்சைத் தோட்டங்களை உரிமையாகத் தரவுமில்லை. நீ இந்த மனிதரை கண்ணில்லாத குருடராக்க நினைத்தாயோ? நாங்கள் வரவேமாட்டோம்” என்றார்கள்.
- எண்ணாகமம் 16:15சுமார் கி.மு. 1471
அப்பொழுது மோசே மிகவும் கோபமடைந்தான். அவன் யெகோவாவிடம், “நீர் அவர்களின் காணிக்கைகளை எற்றுக்கொள்ளவேண்டாம். நான் அவர்களிடமிருந்து கழுதையையேனும் எடுத்துக்கொள்ளவும் இல்லை. அவர்களில் ஒருவனுக்கும் அநியாயம் செய்ததுமில்லை” என்றான்.
- எண்ணாகமம் 16:16சுமார் கி.மு. 1471
பின்பு மோசே கோராகிடம், “நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நாளை யெகோவாவுக்கு முன்பாக வரவேண்டும். நீயும், அவர்களும், ஆரோனும் வரவேண்டும்.
- எண்ணாகமம் 16:17சுமார் கி.மு. 1471
ஒவ்வொருவரும் தன்தன் தூபகிண்ணத்தை எடுத்து, நறுமணத்தூளை அதற்குள்ளே போட்டு அதை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒவ்வொன்றாய் 250 தூபகிண்ணங்களுடன் வாருங்கள். நீயும், ஆரோனும், உங்கள் தூபகிண்ணங்களைக் கொண்டுவர வேண்டும்” என்றான்.
- எண்ணாகமம் 16:18சுமார் கி.மு. 1471
எனவே அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தூபகிண்ணங்களில் நெருப்பைப்போட்டு, அதில் நறுமணத்தூளையும் போட்டுக்கொண்டு சபைக்கூடார வாசலில் மோசேயுடனும், ஆரோனுடனும் நின்றார்கள்.
- எண்ணாகமம் 16:19சுமார் கி.மு. 1471
கோராகு அவர்களுக்கெதிராக சபைக்கூடார வாசலில் தன்னைப் பின்பற்றியவர்களைக் கூட்டிச் சேர்த்தபோது, யெகோவாவின் மகிமை சபையார் அனைவருக்கும் காணப்பட்டது.
- எண்ணாகமம் 16:20சுமார் கி.மு. 1471
அப்பொழுது யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும்,
- எண்ணாகமம் 16:21சுமார் கி.மு. 1471
“உடனடியாகவே நான் அவர்களை அழிக்கும்படி இந்தச் சபையாரிடமிருந்து உங்களை விலக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.
- எண்ணாகமம் 16:22சுமார் கி.மு. 1471
உடனே மோசேயும், ஆரோனும் முகங்குப்புற விழுந்து, “இறைவனே! எல்லா மனுக்குலத்தின் ஆவிகளுக்கும் இறைவனே! ஒருவன் மட்டும் பாவம்செய்கையில் நீர் சபையார் அனைவர்மேலும் கோபமாயிருப்பீரோ!” என்று கதறினார்கள்.
- எண்ணாகமம் 16:23சுமார் கி.மு. 1471
அப்பொழுது யெகோவா மோசேயிடம்,
- எண்ணாகமம் 16:24சுமார் கி.மு. 1471
“நீங்கள் கோராகு, தாத்தான், ‘அபிராம் ஆகியோரின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோங்கள் என்று நீ சபையாருக்குச் சொல்’ ” என்றார்.
- எண்ணாகமம் 16:25சுமார் கி.மு. 1471
மோசே எழுந்து தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவனைத் தொடர்ந்து இஸ்ரயேலின் சபைத்தலைவர்களும் போனார்கள்.
- எண்ணாகமம் 16:26சுமார் கி.மு. 1471
அவன் சபையாரைப் பார்த்து, “கொடுமையான இந்த மனிதர்களின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோங்கள். அவர்களுக்குரிய எதையும் தொடவேண்டாம். மீறினால் அவர்களுடைய பாவங்களினால் அவர்களுக்கு வரும் தண்டனையில் நீங்களும் அள்ளுண்டு போவீர்கள்” என்றான்.
- எண்ணாகமம் 16:27சுமார் கி.மு. 1471
எனவே அவர்கள் கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோனார்கள். அப்பொழுது தாத்தானும், அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவிகளுடனும், தங்கள் பிள்ளைகளுடனும், குழந்தைகளுடனும் அவர்களுடைய கூடாரங்களின் வாசலில் நின்றார்கள்.
- எண்ணாகமம் 16:28சுமார் கி.மு. 1471
மோசே அவர்களிடம், “இவற்றைச் செய்யும்படி யெகோவாவே என்னை அனுப்பியிருக்கிறார் என்பதையும், இது என்னுடைய சொந்த எண்ணம் அல்ல என்பதையும் இப்போது நடக்கப்போவதிலிருந்து நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
- எண்ணாகமம் 16:29சுமார் கி.மு. 1471
இந்த மனிதர் இயற்கை மரணத்தை அடைந்து, மனிதர்களுக்கு நேரிடுகிறதுபோல மட்டும் அனுபவிப்பார்களானால், யெகோவா என்னை அனுப்பவில்லை.
- எண்ணாகமம் 16:30சுமார் கி.மு. 1471
ஆனால் யெகோவா முற்றிலும் புதுமையான ஒன்றைச் செய்து, பூமி தன் வாயைத் திறந்து, அம்மனிதர்களையும் அவர்களுடைய எல்லாவற்றையும் விழுங்கினால், அவர்கள் உயிரோடு பாதாளத்திற்குள் இறங்கினால், இந்த மனிதர் யெகோவாவை அவமதிப்பாய் நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றான்.
- எண்ணாகமம் 16:31சுமார் கி.மு. 1471
அவன் இவற்றைச் சொல்லி முடித்ததுமே அவர்களுக்குக் கீழே இருந்த நிலம் இரண்டாகப் பிளந்தது.
- எண்ணாகமம் 16:32சுமார் கி.மு. 1471
பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும், கோராகின் ஆட்களையும், அவர்களின் உடைமைகளையும் விழுங்கிப்போட்டது.
- எண்ணாகமம் 16:33சுமார் கி.மு. 1471
அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்துடனும் உயிரோடு பாதாளத்திற்குள் போனார்கள். பூமி அவர்களின் மேலாக மூடிக்கொண்டது. அவர்கள் அழிந்து மக்கள் சமுதாயத்திலிருந்து இல்லாமற்போனார்கள்.
- எண்ணாகமம் 16:34சுமார் கி.மு. 1471
அவர்கள் கூக்குரலைக் கேட்ட, சுற்றி நின்ற இஸ்ரயேலர் எல்லோரும், “பூமி எங்களையும் விழுங்கப்போகிறது” என்று சத்தமிட்டுக்கொண்டு விரைந்து ஓடினார்கள்.
- எண்ணாகமம் 16:35சுமார் கி.மு. 1471
அத்துடன் யெகோவாவிடமிருந்து நெருப்பு புறப்பட்டுவந்து, தூபங்காட்டிக்கொண்டிருந்த அந்த 250 மனிதரையும் எரித்துப்போட்டது.