- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
- எண்ணாகமம் 15:27சுமார் கி.மு. 1490
“ ‘ஆனால் ஒருவன் மட்டும் தற்செயலாகப் பாவம்செய்தால், பாவநிவாரண காணிக்கையாக அவன் ஒரு வயதுடைய பெண் வெள்ளாட்டுக்குட்டியைக் கொண்டுவர வேண்டும்.
- எண்ணாகமம் 15:28சுமார் கி.மு. 1490
ஆசாரியன், தற்செயலாகப் பாவம் செய்ததினால் தவறுசெய்த ஒருவனுக்காக, யெகோவாவுக்கு முன்பாகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபின் அவன் மன்னிக்கப்படுவான்.
- எண்ணாகமம் 15:29சுமார் கி.மு. 1490
ஊரில் பிறந்த இஸ்ரயேலனோ அல்லது அந்நியனோ தற்செயலாகப் பாவம் செய்கிற எவனுக்கும் இந்த ஒரேவிதமான சட்டத்தின்படியே செய்யப்படவேண்டும்.
- எண்ணாகமம் 15:30சுமார் கி.மு. 1490
“ ‘ஆனால் ஊரில் பிறந்தவனோ அல்லது அந்நியனோ யாராயிருந்தாலும், ஒருவன் அறிந்து துணிகரமாகப் பாவம்செய்தால் அவன் யெகோவாவை நிந்திக்கிறான். ஆகையால் அம்மனிதன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
- எண்ணாகமம் 15:31சுமார் கி.மு. 1490
அவன் யெகோவாவின் வார்த்தையை அற்பமாய் எண்ணி, அவருடைய கட்டளைகளை மீறினபடியால், அம்மனிதன் நிச்சயமாக அகற்றப்படவேண்டும். அவன் குற்றம் அவன் மேலேயே இருக்கும் என்றார்.’ ”
- எண்ணாகமம் 15:32சுமார் கி.மு. 1490
இஸ்ரயேலர் பாலைவனத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் ஒரு மனிதன் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தான்.
- எண்ணாகமம் 15:33சுமார் கி.மு. 1490
அவன் விறகு பொறுக்குவதைக் கண்டவர்கள் அவனை மோசேயிடமும், ஆரோனிடமும், சபையார் அனைவரிடமும் கொண்டுவந்தார்கள்.
- எண்ணாகமம் 15:34சுமார் கி.மு. 1490
அவனுக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்பது தெளிவாய் இல்லாதிருந்ததால், அவனைத் தடுப்புக் காவலில் வைத்தார்கள்.
- எண்ணாகமம் 15:35சுமார் கி.மு. 1490
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இந்த மனிதன் சாகவேண்டும். அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய் முழுசபையும் அவன்மேல் கல்லெறிய வேண்டும்” என்றார்.
- எண்ணாகமம் 15:36சுமார் கி.மு. 1490
எனவே, கூடியிருந்த சபையார் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுவந்து யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
- எண்ணாகமம் 15:37சுமார் கி.மு. 1490
பின்பு யெகோவா மோசேயிடம்,
- எண்ணாகமம் 15:38சுமார் கி.மு. 1490
“நீ இஸ்ரயேலரிடம் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நீங்கள் தொங்கல்களைச் செய்து, அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நீல நாடாவினால் கட்டி, உங்கள் உடைகளின் ஓரங்களில் தொங்கவிட வேண்டும். இதை தலைமுறைதோறும் நீங்கள் செய்யவேண்டும்.
- எண்ணாகமம் 15:39சுமார் கி.மு. 1490
நீங்கள் இந்தக் தொங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் யெகோவாவின் கட்டளைகளை நினைவுபடுத்திக் கொள்வீர்கள். அதனால் நீங்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிவீர்கள். உங்களுடைய சொந்த இருதய ஆசைகளின்படியும், கண்களின் ஆசையின்படியும் போய் இறைவனை வழிபடாமல் உங்களை வேசித்தனத்திற்கு உள்ளாக்காதிருப்பீர்கள்.
- எண்ணாகமம் 15:40சுமார் கி.மு. 1490
நீங்கள் எனது எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய நினைவுகூர்ந்து உங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருப்பீர்கள்.
- எண்ணாகமம் 15:41சுமார் கி.மு. 1490
உங்கள் இறைவனாயிருக்கும்படி, எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. நானே உங்கள் இறைவனாகிய யெகோவா’ ” என்றார்.
- எண்ணாகமம் 16:1சுமார் கி.மு. 1471
லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத்தின் பேரனும், இத்சேயாரின் மகனுமான கோராகு என்பவனும், ரூபன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான எலியாபின் மக்களான தாத்தான், அபிராம் என்பவர்களும், பேலேத்தின் மகன் ஓன் என்பவனும்,
- எண்ணாகமம் 16:2சுமார் கி.மு. 1471
இஸ்ரயேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய 250 பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக துணிகரமாய் எழும்பினார்கள்.
- எண்ணாகமம் 16:3சுமார் கி.மு. 1471
அவர்கள் மோசேயையும் ஆரோனையும் எதிர்த்து ஒரு குழுவாகச் சேர்ந்துவந்து, அவர்களிடம், “நீங்கள் அளவுக்குமிஞ்சிப் போய்விட்டீர்கள். இந்த மக்கள் சமுதாயம் எல்லோரும், அதிலுள்ள ஒவ்வொருவரும் பரிசுத்தமாகவே இருக்கிறார்கள். யெகோவாவும் அவர்களுடன் இருக்கிறார். அப்படியிருக்க நீங்கள் யெகோவாவின் சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
- எண்ணாகமம் 16:4சுமார் கி.மு. 1471
மோசே அதைக் கேட்டதும் முகங்குப்புற விழுந்தான்.
- எண்ணாகமம் 16:5சுமார் கி.மு. 1471
அப்பொழுது மோசே, கோராகிடமும் அவனைப் பின்பற்றி வந்த எல்லோரிடமும் யார் அவருடையவன்? யார் பரிசுத்தமானவன்? என்பதை நாளை காலையில் யெகோவா உங்களுக்குக் காண்பிப்பார். அப்படிப்பட்டவனை அவர் தம் அருகே வரப்பண்ணுவார். தாம் தெரிந்துகொள்ளும் மனிதனைத் தம் அருகே வரச்செய்வார்.
- எண்ணாகமம் 16:6சுமார் கி.மு. 1471
கோராகே! நீயும் உன்னைப் பின்பற்றும் எல்லோரும் செய்யவேண்டியதாவது, தூபகிண்ணங்களை எடுத்து,
- எண்ணாகமம் 16:7சுமார் கி.மு. 1471
நாளைக்கு யெகோவா முன்னிலையில் அவற்றில் நெருப்புப் போட்டு, நறுமணத்தூளைப் போடுங்கள். அப்பொழுது யெகோவா தெரிந்துகொள்கிறவனே பரிசுத்தமானவனாய் இருப்பான். லேவியரே நீங்கள்தான் அளவுக்குமிஞ்சிப் போய்விட்டீர்கள்! என்றான்.
- எண்ணாகமம் 16:8சுமார் கி.மு. 1471
பின்பு மோசே கோராகிடம், “லேவியரே! நீங்கள் இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்.
- எண்ணாகமம் 16:9சுமார் கி.மு. 1471
இஸ்ரயேலின் இறைவன் மற்ற இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து உங்களை வேறுபிரித்து, யெகோவாவினுடைய இறைசமுக கூடாரத்தில் அவருடைய வேலையைச் செய்யவும், மக்கள் சமுதாயத்தின்முன் நிற்கவும், அவர்களுக்குப் பணிசெய்யவும், உங்களைத் தம் அருகே கொண்டுவந்தது உங்களுக்குப் போதாதோ?
- எண்ணாகமம் 16:10சுமார் கி.மு. 1471
அவர் உங்களையும் உங்கள் உடன்சகோதரர் லேவியரையும் தம் அருகே கொண்டுவந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது நீங்களோ ஆசாரியப்பட்டத்தையும் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறீர்கள்.