உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எண்ணாகமம் 18:23சுமார் கி.மு. 1471

    சபைக் வேலைகளை லேவியர் மட்டுமே செய்யவேண்டும். அவ்வேலையில் ஏற்படும் குற்றங்களுக்கும் அவர்கள் பொறுப்பாளியாவார்கள். இது தலைமுறைதோறும் நிரந்தர நியமமாய் இருக்கும். இஸ்ரயேலருக்குள்ளும் லேவியர் உரிமைச்சொத்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.

  2. எண்ணாகமம் 18:24சுமார் கி.மு. 1471

    ஏனெனில், இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரும் பத்தில் ஒரு பங்கை, நான் லேவியரின் உரிமைச்சொத்தாக அவர்களுக்குக் கொடுப்பேன். அதனால்தான் நான் ‘இஸ்ரயேலர் மத்தியில் அவர்களுக்கு நிரந்தரமான உரிமைச்சொத்து இருக்காது என்று அவர்களைக் குறித்துச் சொன்னேன்’ ” என்றார்.

  3. எண்ணாகமம் 18:25சுமார் கி.மு. 1471

    பின்பு யெகோவா மோசேயிடம்,

  4. எண்ணாகமம் 18:26சுமார் கி.மு. 1471

    “நீ லேவியருடன் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் பத்தில் ஒரு பங்கை நீங்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெறும்போதெல்லாம் அந்த பத்தில் ஒரு பங்கில், பத்தில் ஒரு பங்கை, யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும்.

  5. எண்ணாகமம் 18:27சுமார் கி.மு. 1471

    நீங்கள் கொடுக்கும் காணிக்கை சூடடிக்கும் களத்தில் பெறப்படும் தானியம்போல் அல்லது திராட்சை ஆலையிலிருந்து வரும் திராட்சை இரசம்போல் உங்களுக்குக் கருதப்படும்.

  6. எண்ணாகமம் 18:28சுமார் கி.மு. 1471

    அவ்வாறு நீங்களும், இஸ்ரயேலரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் எல்லா பத்தில் ஒரு பங்கிலுமிருந்தும் யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொடுப்பீர்கள். அந்த பத்தில் ஒரு பங்கிலிருந்து நீங்கள் யெகோவாவின் பங்கை ஆசாரியன் ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.

  7. எண்ணாகமம் 18:29சுமார் கி.மு. 1471

    நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் எல்லாவற்றிலுமிருந்தும் மிகத் திறமையானதையும், மிகப் பரிசுத்தமானதையும் யெகோவாவின் பாகமாகக் கொடுக்கவேண்டும்.’

  8. எண்ணாகமம் 18:30சுமார் கி.மு. 1471

    “நீ லேவியருக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நீங்கள் திறமையான பங்கைக் கொடுக்கும்போது, அது சூடடிக்கும் களத்திலுள்ள விளைபொருள்போல் அல்லது திராட்சை ஆலையில் இருந்து பெறப்படும் திராட்சை இரசம்போல் உங்களுக்கு கருதப்படும்.

  9. எண்ணாகமம் 18:31சுமார் கி.மு. 1471

    அவற்றின் மிகுதியை நீங்களும், உங்கள் குடும்பமும் எந்த இடத்திலும் சாப்பிடலாம். ஏனெனில் அவை சபைக் கூடாரத்தில் உங்கள் பணிக்காக கொடுக்கப்படும் கூலியாகும்.

  10. எண்ணாகமம் 18:32சுமார் கி.மு. 1471

    இவ்வாறு மிகத் திறமையானவற்றை நீங்கள் கொடுப்பதால் காணிக்கைபற்றிய விஷயத்தில் குற்றமற்றவர்களாயிருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் இஸ்ரயேலரின் பரிசுத்த காணிக்கையை அசுத்தப்படுத்தவுமாட்டீர்கள்; நீங்கள் சாகவுமாட்டீர்கள் என்று சொல்’ ” என்றார்.

  11. எண்ணாகமம் 19:1சுமார் கி.மு. 1471

    பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது:

  12. எண்ணாகமம் 19:2சுமார் கி.மு. 1471

    “யெகோவா கட்டளையிட்டிருக்கிற சட்டத்தின் நியமம் இதுவே: குறைபாடற்றதும், ஊனமற்றதும், ஒருபோதும் நுகம் சுமக்காததுமான சிவப்புநிற கன்னிப்பசுவைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலரிடம் சொல்லுங்கள்.

  13. எண்ணாகமம் 19:3சுமார் கி.மு. 1471

    அதை ஆசாரியன் எலெயாசாரிடம் கொடுங்கள். அது முகாமுக்கு வெளியே கொண்டுபோகப்பட்டு, அவன் முன்னிலையில் கொல்லப்படவேண்டும்.

  14. எண்ணாகமம் 19:4சுமார் கி.மு. 1471

    பின்பு ஆசாரியன் எலெயாசார் அதன் இரத்தத்தைத் தன் விரலினால் தொட்டு, அதை சபைக் கூடாரத்திற்கு முன்பக்கத்தை நோக்கி ஏழுமுறை தெளிக்கவேண்டும்.

  15. எண்ணாகமம் 19:5சுமார் கி.மு. 1471

    பின்பு, ஆசாரியன் பார்த்துக்கொண்டிருக்கையில் அதன் தோல், இறைச்சி, இரத்தம், குடல் உட்பட அந்தக் கன்னிப்பசு எரிக்கப்படவேண்டும்.

  16. எண்ணாகமம் 19:6சுமார் கி.மு. 1471

    ஆசாரியன் கேதுருமரக்கட்டை, ஈசோப்புக்குழை, கருஞ்சிவப்புக் கம்பளிநூல் ஆகியவற்றில் கொஞ்சத்தை எடுத்து, எரிந்துகொண்டிருக்கும் கன்னிப்பசுவின்மேல் போடவேண்டும்.

  17. எண்ணாகமம் 19:7சுமார் கி.மு. 1471

    அதன்பின், ஆசாரியன் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். பின்பு அவன் முகாமுக்குள் போகலாம். ஆனாலும் அவன் மாலைவரை சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருப்பான்.

  18. எண்ணாகமம் 19:8சுமார் கி.மு. 1471

    அந்தப் பசுவை எரித்த மனிதனும் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். அவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.

  19. எண்ணாகமம் 19:9சுமார் கி.மு. 1471

    “சுத்தமாயிருக்கும் ஒரு மனிதன் அந்தப் பசுவின் சாம்பலைச் சேர்த்து அள்ளி, முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமான ஒரு இடத்தில் கொட்டவேண்டும். இஸ்ரயேல் சமுதாயத்தினர் சுத்திகரிக்கும் தண்ணீரில் உபயோகிப்பதற்காக அந்தச் சாம்பலை வைத்துக்கொள்ள வேண்டும். பாவத்திலிருந்து சுத்திகரிப்பதற்கு அது பயன்படுத்தப்படும்.

  20. எண்ணாகமம் 19:10சுமார் கி.மு. 1471

    அந்தப் பசுவின் சாம்பலை அள்ளும் மனிதனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாயிருப்பான். இது இஸ்ரயேலருக்கும், அவர்களுடன் வாழும் அந்நியருக்கும் நிரந்தர நியமமாய் இருக்கும்.

  21. எண்ணாகமம் 19:11சுமார் கி.மு. 1471

    “ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.

  22. எண்ணாகமம் 19:12சுமார் கி.மு. 1471

    அம்மனிதன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரினால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான். ஆனால் அவன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் தன்னைச் சுத்திகரியாவிட்டால் அவன் சுத்தமாகமாட்டான்.

  23. எண்ணாகமம் 19:13சுமார் கி.மு. 1471

    ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் தன்னைச் சுத்திகரிக்கத் தவறினால், அவன் யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தை அசுத்தப்படுத்துகிறான். அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும். அந்தச் சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமாய் இருக்கிறான். அவனுடைய அசுத்தம் அவன் மேலேயே இருக்கிறது.

  24. எண்ணாகமம் 19:14சுமார் கி.மு. 1471

    “கூடாரம் ஒன்றில் ஒரு மனிதன் இறந்தால், அதற்குரிய சட்டம் இதுவே: கூடாரத்திற்குள் வரும் எவனும், கூடாரத்திற்குள் இருப்பவன் எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமாயிருப்பான்.

  25. எண்ணாகமம் 19:15சுமார் கி.மு. 1471

    மூடியினால் பூட்டப்படாமல் திறந்தபடியே இருக்கும் கொள்கலன்கள் யாவும் அசுத்தமாயிருக்கும்.