- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1380–1050 BC
The Judges & Ruth
Israel cycles through rebellion, oppression, and rescue under charismatic leaders—culminating in Ruth's faithful love story.
- நியாயாதிபதிகள் 4:11சுமார் கி.மு. 1285
கேனியனான ஏபேர் மற்ற கேனியர்களை விட்டுப் பிரிந்திருந்தான், கேனியர் மோசேயின் மைத்துனனான ஒபாபின் சந்ததியில் வந்தவர்கள், அவன் கேதேசிற்கு அருகிலுள்ள சானாயிமில் இருக்கிற பெரிய மரத்தடியில் குடியிருந்தான்.
- நியாயாதிபதிகள் 4:12சுமார் கி.மு. 1285
அபினோமின் மகன் பாராக், தாபோர் மலைக்குமேல் போயிருக்கிறான் என்று சிசெராவுக்குச் சொல்லப்பட்டது.
- நியாயாதிபதிகள் 4:13சுமார் கி.மு. 1285
அப்பொழுது சிசெரா தன்னிடமிருந்த தொளாயிரம் இரும்பு ரதங்களையும், தன்னுடன் இருந்த எல்லா மனிதர்களையும் ஒன்றுசேர்த்துக்கொண்டு அரோஷேத் ஹகோயீமிலிருந்து கீசோன் ஆற்றருகே வந்தான்.
- நியாயாதிபதிகள் 4:14சுமார் கி.மு. 1285
தெபோராள் பாராக்கிடம், “நீ போ! இதுவே சிசெராவை யெகோவா உன் கையில் தரும் நாள், உனக்கு முன்னே யெகோவா போகவில்லையா?” என்றாள். எனவே பாராக்கும் அவனுடனிருந்த பத்தாயிரம் போர்வீரர்களும் தாபோர் மலையை விட்டு கீழே இறங்கினார்கள்.
- நியாயாதிபதிகள் 4:15சுமார் கி.மு. 1285
பாராக் முன்னேறுகையில் யெகோவா சிசெராவையும், அவனுடைய ரதங்களையும், அவனுடைய இராணுவத்தையும் வாளினால் முறியடித்தார். அப்பொழுது சிசெரா தன் தேரைக் கைவிட்டு ஓடித் தப்பினான்.
- நியாயாதிபதிகள் 4:16சுமார் கி.மு. 1285
ஆனால் பாராக் ரதங்களையும், இராணுவத்தையும் அரோஷேத் ஹகோயிம் வரைக்கும் துரத்திச்சென்றான். சிசெராவின் எல்லாப் படைகளும் வாளுக்கு இரையாகின. ஒருவனும் மிஞ்சவில்லை.
- நியாயாதிபதிகள் 4:17சுமார் கி.மு. 1285
ஆயினும் சிசெரா கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்குள் ஓடினான். ஏனெனில் ஆத்சோரின் அரசன் யாபீனுக்கும் கேனியனான ஏபேரின் வம்சத்துக்கும் சிநேகபூர்வமான உறவு இருந்தது.
- நியாயாதிபதிகள் 4:18சுமார் கி.மு. 1285
அப்பொழுது யாகேல் வெளியில் சென்று சிசெராவைச் சந்தித்து அவனிடம், “வாரும் ஐயா! என் கூடாரத்திற்குள் வாரும். பயப்படவேண்டாம்” என்றாள். எனவே அவன் கூடாரத்திற்குள் சென்றான். அப்பொழுது அவள் அவனை ஒரு போர்வையால் மூடிவிட்டாள்.
- நியாயாதிபதிகள் 4:19சுமார் கி.மு. 1285
அவன், “நான் தாகமாயிருக்கிறேன். தயவுசெய்து தண்ணீர் தா” என்றான். அவள் பாலுள்ள தோல் குடுவையைத் திறந்து அவனுக்குக் குடிக்கக்கொடுத்து அவனை மூடிவிட்டாள்.
- நியாயாதிபதிகள் 4:20சுமார் கி.மு. 1285
“அவ்வேளை சிசெரா அவளிடம், நீ கூடாரவாசலில் நின்றுகொள். யாராவது வந்து, ‘இங்கு யாரேனும் இருக்கிறார்களா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்று சொல் என்றான்.”
- நியாயாதிபதிகள் 4:21சுமார் கி.மு. 1285
ஆனால் ஏபேரின் மனைவி யாகேல் சிசெரா களைத்துப்போய் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, ஒரு கூடார முளையையும், சுத்தியலையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் சென்று அவனுடைய நெற்றியில் முளையை வைத்து அடித்தாள். அது அவனுடைய மூளையைத் துளைத்துக்கொண்டு தரைவரை சென்றது. எனவே அவன் இறந்தான்.
- நியாயாதிபதிகள் 4:22சுமார் கி.மு. 1285
சிசெராவை துரத்திவந்த பாராக் அப்போது அங்கு வந்துசேர்ந்ததும், யாகேல் சென்று அவனைச் சந்தித்தாள். “வாரும் நீர் தேடும் மனிதனை உமக்குக் காட்டுகிறேன்” என்றாள். எனவே அவன் அவளுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவனுடைய நெற்றியில் கூடார முளை அடிக்கப்பட்டு, இறந்திருக்கக் கண்டான்.
- நியாயாதிபதிகள் 4:23சுமார் கி.மு. 1285
அந்த நாளில் இறைவன் இஸ்ரயேலர் முன்பாக கானானிய அரசன் யாபீனை அடக்கினார்.
- நியாயாதிபதிகள் 4:24சுமார் கி.மு. 1285
அதோடு இஸ்ரயேலரின் கரம் கானானிய அரசன் யாபீனை அழிக்கும்வரை மென்மேலும் வலிமையடைந்தது.
அந்த நாளில் தெபோராளும், அபினோமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:
“யெகோவா இஸ்ரயேலுக்காக நீதியை நிலைநாட்டியதற்காகவும், மக்கள் தங்களை மனமுவர்ந்து ஒப்படைத்ததற்காகவும் யெகோவாவைத் துதியுங்கள்!
“அரசர்களே கேளுங்கள்! ஆளுநர்களே செவிகொடுங்கள்! யெகோவாவை பாடுவேன், நான் பாடுவேன். இஸ்ரயேலின், இறைவனாகிய யெகோவாவுக்கு, இசை மீட்டுவேன்.
“யெகோவாவே! நீர் சேயீரை விட்டு போனபோதும், ஏதோம் நாட்டைவிட்டு அணிவகுத்துச் சென்றபோதும் பூமி அதிர்ந்தது. வானங்கள் பொழிந்தன. மேகங்கள் தண்ணீரை கீழே பொழிந்தன.
சீனாயின் யெகோவாவான யெகோவாவுக்குமுன், மலைகளும் அதிர்ந்தன. இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு முன்பாக அவை அதிர்ந்தன.
“ஆனாத்தின் மகன் சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும் வீதிகள் கைவிடப்பட்டிருந்தன. பயணிகள் சுற்றுப்பாதையில் சென்றார்கள்.
இஸ்ரயேலின் கிராம வாழ்க்கை நின்றுபோயிற்று. தெபோராளாகிய நான் இஸ்ரயேலில் தாயாக எழும்பும்வரை அது நின்றுபோயிற்று.
எப்போது அவர்கள் புது தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்களோ, அப்போதே யுத்தமும் பட்டண வாசலில் வந்தது. இஸ்ரயேலில் உள்ள நாற்பதாயிரம் பேரிடம் கேடயமோ ஈட்டியோ காணப்படவில்லை.
எனது இருதயமோ இஸ்ரயேலின் தலைவர்களோடே இருக்கிறது. மக்களுக்குள்ளே விரும்பிவந்த தொண்டர்களுடனும் இருக்கிறது. யெகோவாவைத் துதியுங்கள்!
“வெள்ளைக் கழுதைமேல் சவாரி செய்கிறவர்களே, சேணத்தின் கம்பளத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களே, வீதி வழியாய் நடப்பவர்களே, யோசித்துப் பாருங்கள்.
தண்ணீர் குடிக்கும் இடங்களில் பாடகரின் குரலையும். அவர்கள் யெகோவாவின் நேர்மையான செயல்களைச் சொல்கிறார்கள். இஸ்ரயேலின் வீரர்களின் நேர்மையான செயல்களைச் சொல்கிறார்கள். “அப்பொழுது யெகோவாவிடம் மக்கள் பட்டண வாசலுக்கு சென்றார்கள்.