circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
- எரேமியா 22:1சுமார் கி.மு. 598
யெகோவா கூறுவது இதுவே: “நீ யூதா அரசர்களின் அரண்மனைக்குப் போய் அங்கே இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து.
- எரேமியா 22:2சுமார் கி.மு. 598
தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கிற யூதாவின் அரசனே, ‘நீயும், உன் அதிகாரிகளும், இந்த வாசல்களுக்குள் வருகிற உன் மக்களும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
- எரேமியா 22:3சுமார் கி.மு. 598
யெகோவா கூறுவது இதுவே: நீதியையும், நியாயத்தையும் செய்யுங்கள். கொள்ளையிடப்பட்டவனை, ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து விடுவியுங்கள். நீங்கள் பிறநாட்டினனையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும் இருங்கள். குற்றமற்ற இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும் இருங்கள்.
- எரேமியா 22:4சுமார் கி.மு. 598
இக்கட்டளைகளைச் செய்வதற்கு நீங்கள் கவனமாயிருந்தால், அப்பொழுது தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள் இந்த அரண்மனையின் வாசல் வழியாக வருவார்கள். அவர்கள் தங்கள் அதிகாரிகளுடனும், மக்களுடனும் சேர்ந்து தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள்.
- எரேமியா 22:5சுமார் கி.மு. 598
ஆனால் இக்கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் விட்டால், இந்த அரண்மனை பாழாகிவிடும் என்று நான் என்மேல் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்” என்றார்.
- எரேமியா 22:6சுமார் கி.மு. 598
மேலும், யூதா அரசனின் அரண்மனையைக் குறித்து யெகோவா கூறுவது இதுவே: “நீ எனக்கு கீலேயாத்தைப்போலவும், லெபனோனின் மலை உச்சியைப்போலவும் இருந்தாலும், நான் நிச்சயமாக உன்னைப் பாலைவனத்தைப்போலவும், குடியிருக்காத பட்டணங்களைப்போலவும் ஆக்குவேன்.
- எரேமியா 22:7சுமார் கி.மு. 598
நான் உனக்கு எதிராக அழிக்கிறவர்களை அவனவனது ஆயுதங்களுடன் அனுப்புவேன். அவர்கள் உனது மிகச்சிறந்த கேதுருமர உத்திரங்களை வெட்டி அவைகளை நெருப்பிலே போடுவார்கள்.
- எரேமியா 22:8சுமார் கி.மு. 598
“அநேக நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்பட்டணத்தைக் கடந்து செல்லும்போது, ‘இப்பெரிய பட்டணத்துக்கு யெகோவா ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவரையொருவர் கேட்பார்கள்.
- எரேமியா 22:9சுமார் கி.மு. 598
அதற்கு, ‘அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களை வணங்கி, அவைகளுக்குப் பணிவிடை செய்தபடியால் இப்படியாயிற்று’ என்று பதில் சொல்லப்படும்.”
- எரேமியா 22:10சுமார் கி.மு. 598
இறந்துபோன அரசனுக்காக அழவேண்டாம். அவன் மறைவுக்காக துக்கிக்கவும் வேண்டாம். நாடுகடத்தப்பட்ட அரசனுக்காகவே மனங்கசந்து அழுங்கள். ஏனெனில் இனிமேல் அவன் திரும்பி வரமாட்டான். தன் சொந்த நாட்டைக் காணவும் மாட்டான்.
- எரேமியா 22:11சுமார் கி.மு. 598
யோசியாவின் மகனான சல்லூமைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: அவன் தன் தகப்பனுக்குப் பின் யூதாவுக்கு அரசனாக வந்தான். ஆனால் இந்த இடத்திலிருந்து போய்விட்டான். “அவன் ஒருபோதும் திரும்பி வரமாட்டான்.
- எரேமியா 22:12சுமார் கி.மு. 598
அவன் கைதியாகக் கொண்டுபோகப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டையோ மீண்டும் காணமாட்டான்” என்றார்.
- எரேமியா 22:13சுமார் கி.மு. 598
“அநியாயத்தினால் தன் அரண்மனையையும், அநீதியினால் தன் மேலறையையும் கட்டுகிறவனுக்கு ஐயோ கேடு! அவன் தன் நாட்டு மனிதரின் உழைப்புக்குக் கூலிகொடாமல் வேலை வாங்குகிறான்.
- எரேமியா 22:14சுமார் கி.மு. 598
அவன், ‘நான் விசாலமான மேலறைகளுடன் எனக்குப் பெரிய அரண்மனையைக் கட்டுவேன்’ என்கிறான். அவ்வாறே அவன் அதற்குப் பெரிய ஜன்னல்களை அமைத்து, கேதுரு மரப்பலகைகளால் தளவரிசைப்படுத்தி, அவைகளை சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கிறான்.
- எரேமியா 22:15சுமார் கி.மு. 598
“அதிகமதிகமாய் கேதுரு மரங்களை வைத்திருப்பதால், அது உன்னை அரசனாக்குமோ? உன்னுடைய தகப்பனிடம் உணவும், பானமும் இருக்கவில்லையோ? நியாயத்தையும், நீதியையும் அவன் செய்தபோது அவன் செய்த எல்லாம் அவனுக்கு நலமாயிருக்கவில்லையோ?
- எரேமியா 22:16சுமார் கி.மு. 598
அவன் ஏழை வறியோரின் வழக்கை விசாரித்தான். அதனால் அவனுக்கு எல்லாம் நன்றாய் நடைபெற்றன. என்னை அறிந்துகொள்வது என்பதன் அர்த்தம் இதுவல்லவோ?” என்று யெகோவா அறிவிக்கிறார்.
- எரேமியா 22:17சுமார் கி.மு. 598
“ஆனால் உன்னுடைய கண்களும், இருதயமும் நேர்மையற்ற இலாபத்திலும், குற்றமற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும், கப்பம் கேட்பதிலும் ஒடுக்குவதிலுமே நோக்கமாயிருக்கின்றன” என்று யெகோவா கூறுகிறார்.
- எரேமியா 22:18சுமார் கி.மு. 598
ஆதலால் யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமை பற்றி யெகோவா கூறுவது இதுவே: “அவனுக்காக அவர்கள்: ‘ஐயோ என் சகோதரனே! ஐயோ என் சகோதரியே!’ என்று துக்கங்கொண்டாட மாட்டார்கள். ‘ஐயோ என் தலைவனே! ஐயோ அவனுடைய மேன்மையே!’ என்றும் அவனுக்காக துக்கங்கொண்டாட மாட்டார்கள்.
- எரேமியா 22:19சுமார் கி.மு. 598
ஒரு செத்த கழுதைக்குச் செய்வதுபோலவே அவனை அடக்கம் செய்வார்கள். அவனை இழுத்துக்கொண்டுபோய் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே எறிந்துவிடுவார்கள்” என்கிறார்.
- எரேமியா 22:20சுமார் கி.மு. 598
லெபனோன்வரை சென்று சத்தமிட்டு அழு. பாசானில் உனது குரல் கேட்கட்டும். அபாரீமிலிருந்தும் அழு. ஏனென்றால் உன்னுடைய கூட்டாளிகள் நசுக்கப்பட்டார்கள்.
- எரேமியா 22:21சுமார் கி.மு. 598
பாதுகாப்புடன் இருக்கிறாய் என எண்ணிய உன்னை நான் எச்சரித்தேன். ஆனால், “நான் கேட்கமாட்டேன்” என்று நீ சொன்னாய். உன் வாலிப காலத்திலிருந்தே, இதுவே உனது வழக்கமாயிருந்தது. நீ எனக்குக் கீழ்ப்படியவில்லை.
- எரேமியா 22:22சுமார் கி.மு. 598
காற்று உன்னுடைய மேய்ப்பர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போய்விடும். உன் கூட்டாளிகள் யாவரும் நாடுகடத்தப்படுவார்கள். அப்பொழுது உனது எல்லாக் கொடுமையின் நிமித்தமும் நீ வெட்கமடைந்து அவமானப்படுவாய்.
- எரேமியா 22:23சுமார் கி.மு. 598
லெபனோனில் வாழ்பவளே! கேதுரு மரங்களாலான கட்டிடங்களில் பாதுகாப்பாய் இருப்பவளே! பிரசவ வேதனைப்படும் பெண்ணின் வலியைப் போன்ற வலி உன்மேல் வரும்போது, நீ எவ்வளவாய் வேதனையில் அழுவாய்.
- எரேமியா 22:24சுமார் கி.மு. 598
யெகோவா அறிவிப்பது இதுவே: “நான் வாழ்வது நிச்சயம்போல, யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் கோனியாவே! நீ என்னுடைய வலதுகையில் ஒரு முத்திரை மோதிரமாய் இருந்தாலுங்கூட, நான் உன்னை கழற்றி எறிந்துவிடுவேன் என்பதும் நிச்சயம்.
- எரேமியா 22:25சுமார் கி.மு. 598
நீ பயப்படுகிறவர்களான, உன்னை கொலைசெய்ய தேடுகிறவர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன். பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடத்திலும் பாபிலோனியர்களிடத்திலும்