உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 வசனங்கள் · 14 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆமோஸ் 8:8சுமார் கி.மு. 787

    “இதனால் நாடு நடுங்காதோ, அதில் வாழும் அனைவரும் துக்கப்பட மாட்டார்களோ? நாடு முழுவதும் நைல் நதிபோல பொங்கும். அது குமுறிப் பொங்கி, பின் அது எகிப்து நதியைப்போல் தணிந்துபோகும்.”

  2. ஆமோஸ் 8:9சுமார் கி.மு. 787

    ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறதாவது: “அந்நாளில் நான் நண்பகலில் சூரியனை மறையச் செய்வேன், பட்டப்பகலில் பூமியை இருளடையச் செய்வேன்.

  3. ஆமோஸ் 8:10சுமார் கி.மு. 787

    உங்கள் மதக்கொண்டாட்டங்களை துக்கக்கொண்டாட்டமாகவும், உங்கள் பாடல்களை அழுகையாகவும் மாற்றுவேன். உங்கள் அனைவரையும் துக்கவுடை உடுத்தச் செய்வேன். உங்களை மொட்டையடிக்கப் பண்ணுவேன். நான் அந்த காலத்தை ஒரே மகனுக்காக துக்கங்கொண்டாடும் காலத்தைப்போல் மாற்றுவேன். அதன் முடிவை ஒரு கசப்பான நாளைப்போல் ஆக்குவேன் என்கிறார்.

  4. ஆமோஸ் 8:11சுமார் கி.மு. 787

    “மேலும் ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறதாவது: நாட்கள் வருகின்றன, நாடெங்கும் பஞ்சத்தை அனுப்புவேன். அது உணவு கிடைக்காத பஞ்சமோ, தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ அல்ல. மாறாக யெகோவாவினுடைய வார்த்தைகளைக் கேட்க முடியாத பஞ்சமே அது.

  5. ஆமோஸ் 8:12சுமார் கி.மு. 787

    அப்போது மனிதர், ஒரு கடல் தொடங்கி மறுகடல் வரையும் அலைந்து சென்று, வடதிசை தொடங்கி, கீழ்த்திசை வரையும் அலைந்து திரிந்து, யெகோவாவின் வார்த்தையைத் தேடுவார்கள். ஆனால் அதைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.

  6. ஆமோஸ் 8:13சுமார் கி.மு. 787

    “அந்த நாளில் “அழகிய இளம்பெண்களும், வலிமையுள்ள வாலிபர் எல்லோருமே தாகத்தால் சோர்ந்துபோவார்கள்.

  7. ஆமோஸ் 8:14சுமார் கி.மு. 787

    அக்காலத்தில் சமாரியாவின் வெட்கக்கேடான விக்கிரகங்களின்மேல் ஆணையிடுகிறவர்களோ, அல்லது ‘தாணே, உனது தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’ என்று சொல்லுகிறவர்களோ, அல்லது ‘பெயெர்செபாவின் தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’ என்று சொல்லுகிறவர்களோ எல்லோரும் விழுந்துபோவார்கள், அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள்.”

  8. ஆமோஸ் 9:1சுமார் கி.மு. 787

    யெகோவா பலிபீடத்தின் அருகே நிற்பதைக் கண்டேன்: அவர் சொன்னதாவது: தூண்களின் உச்சியை இடித்துப்போடுங்கள். தூண்களின் வாசல் நிலைகள் அசையட்டும். அவற்றை மக்கள் எல்லோரின் தலைகள்மேலும் விழப்பண்ணுங்கள். மீந்திருப்போரை நான் வாளினால் கொல்லுவேன். ஒருவனும் தப்பி ஓடமாட்டான், ஒருவனுமே தப்பமாட்டான்.

  9. ஆமோஸ் 9:2சுமார் கி.மு. 787

    பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன்.

  10. ஆமோஸ் 9:3சுமார் கி.மு. 787

    கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும், நான் அங்கேயும் அவர்களைத் தேடிப் பிடித்துக்கொள்வேன். என் பார்வைக்குத் தப்பி கடலின் அடியில் மறைந்துகொண்டாலும் அவர்களைக் கடிக்க பாம்பிற்குக் கட்டளையிடுவேன்.

  11. ஆமோஸ் 9:4சுமார் கி.மு. 787

    தங்கள் பகைவரால் நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டாலும், அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளையிடுவேன். “நன்மைக்காக அல்ல, தீமைக்காகவே அவர்கள்மேல் என் கண்களை வைப்பேன்.”

  12. ஆமோஸ் 9:5சுமார் கி.மு. 787

    யெகோவா, சேனைகளின் யெகோவா பூமியைத் தொடுகிறார், அது உருகுகிறது, அதில் வாழும் அனைவரும் புலம்புகிறார்கள்; முழு நாடும் நைல் நதியைப்போல் பொங்கி எழுகிறது, பின்னர் எகிப்தின் நதியைப்போல் வற்றிப்போகிறது.

  13. ஆமோஸ் 9:6சுமார் கி.மு. 787

    யெகோவா வானங்களின் உயர்வில் தமது அரண்மனைகளைக் கட்டுகிறார், பூமியின்மேல் அஸ்திபாரத்தை அமைக்கிறார்; கடல்நீரை அழைத்து பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறார். யெகோவா என்பது அவர் பெயர்.

  14. ஆமோஸ் 9:7சுமார் கி.மு. 787

    இஸ்ரயேலின் மக்களே, நீங்களும் எனக்கு எத்தியோப்பியரைப்போல் அல்லவோ இருக்கிறீர்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கொண்டுவந்தேன். பெலிஸ்தியரை கப்தோரிலிருந்தும், சீரியரை கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?

  15. ஆமோஸ் 9:8சுமார் கி.மு. 787

    “நிச்சயமாக ஆண்டவராகிய யெகோவாவின் கண்கள் பாவமுள்ள அரசின்மேல் இருக்கின்றன. பூமியின்மேல் இராதபடி அந்த அரசை அழிப்பேன். எனினும் யாக்கோபின் குடும்பத்தை நான் முற்றிலும் அழிக்கமாட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  16. ஆமோஸ் 9:9சுமார் கி.மு. 787

    “நானே கட்டளையிட்டு, தானியத்தை அரிதட்டில் போட்டு அரித்தெடுப்பதுபோல, எல்லா நாடுகளுக்குள்ளேயும் இஸ்ரயேல் குடும்பத்தை அரித்தெடுப்பேன். ஒரு கூழாங்கல்லும் தரையில் விழாது.

  17. ஆமோஸ் 9:10சுமார் கி.மு. 787

    என் மக்களுள் வாழும் எல்லா பாவிகளும், பேராபத்து எங்களை மேற்கொள்ளவோ சந்திக்கவோ மாட்டாது என்று சொல்கின்ற எல்லோரும் வாளினால் சாவார்கள்.

  18. ஆமோஸ் 9:11சுமார் கி.மு. 787

    “அந்த நாளில் “நான் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் அமைப்பேன். நான் அதன் உடைந்த இடங்களை பழுதுபார்த்து, அதன் பாழிடங்களை சீரமைப்பேன். முன் இருந்ததுபோல அதைக் கட்டுவேன்,

  19. ஆமோஸ் 9:12சுமார் கி.மு. 787

    அப்பொழுது என் மக்கள் ஏதோமில் மீதியாக இருப்போரையும், என் பெயரைத் தரித்திருக்கும் எல்லா நாடுகளையும் உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இவற்றைச் செயற்படுத்தப்போகிற யெகோவா அறிவிக்கிறார்.

  20. ஆமோஸ் 9:13சுமார் கி.மு. 787

    “நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது அறுவடை செய்கிறவனை உழுகிறவன் முந்திக்கொள்வான்; நடுகிறவனை திராட்சைப் பழத்தைப் பிழிகிறவன் முந்திக்கொள்வான். மலைகளிலிருந்து புது திராட்சை இரசம் வடிந்து எல்லாக் குன்றுகளின்மேலும் ஓடும்,

  21. ஆமோஸ் 9:14சுமார் கி.மு. 787

    நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்நிலைக்குக் கொண்டுவருவேன். “அவர்கள் பாழடைந்த பட்டணங்களை திரும்பக் கட்டி, அவற்றில் குடியிருந்து, திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அதன் இரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.

  22. ஆமோஸ் 9:15சுமார் கி.மு. 787

    நான் இஸ்ரயேலை அவர்கள் சொந்த நாட்டிலே நாட்டுவேன். நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து, இனியொருபோதும் வேரோடு பிடுங்கப்படமாட்டார்கள் என்று” உங்கள் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்.

  23. ஒபதியா 1:1சுமார் கி.மு. 587

    ஒபதியாவின் தரிசனம். யெகோவாவாகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: “எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம் செய்ய வாருங்கள்” என்று ஜனங்களிடம் சொல்லுவதற்காக ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான், என்ற செய்தியை யெகோவா சொல்லக்கேட்டோம்.

  24. ஒபதியா 1:2சுமார் கி.மு. 587

    “இதோ, நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதாக்குவேன்; நீ முற்றிலும் அவமதிக்கப்படுவாய்.

  25. ஒபதியா 1:3சுமார் கி.மு. 587

    கற்பாறை பிளவுகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, ‘என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்?’ என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.