உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 வசனங்கள் · 14 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எரேமியா 52:29சுமார் கி.மு. 589

    நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருடத்தில் எருசலேமிலிருந்து 832 பேரும் கொண்டுசெல்லப்பட்டனர்.

  2. எரேமியா 52:30சுமார் கி.மு. 589

    நேபுகாத்நேச்சாரின் இருபத்தி மூன்றாம் வருடத்தில், 745 யூதர்கள் காவல் தளபதியான நேபுசராதானால் நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் மொத்தமாக 4,600 பேர்.

  3. எரேமியா 52:31சுமார் கி.மு. 562

    யூதா அரசன் யோயாக்கீன் நாடுகடத்தப்பட்ட முப்பத்தேழாம் வருடத்தில், ஏவில் மெரொதாக் பாபிலோனுக்கு அரசனானான், அவன் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதி, யூதாவின் அரசன் யோயாக்கீனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான்.

  4. எரேமியா 52:32சுமார் கி.மு. 562

    அவன் யோயாக்கீனுடன் அன்பாகப் பேசி, பாபிலோனில் தன்னோடிருந்த மற்ற அரசர்களைப் பார்க்கிலும் மேன்மையான இருக்கையை அவனுக்குக் கொடுத்தான்.

  5. எரேமியா 52:33சுமார் கி.மு. 562

    அப்பொழுது யோயாக்கீன் தன் சிறைச்சாலை உடைகளை மாற்றி, மீதியான தன் வாழ்நாளெல்லாம் அரசனுடைய பந்தியிலே தினமும் சாப்பிட்டான்.

  6. எரேமியா 52:34சுமார் கி.மு. 562

    யோயாக்கீனின் மரண நாள்வரை, உயிர்வாழ்ந்த நாளெல்லாம், பாபிலோன் அரசனால் அவனுக்கு நாள்தோறும் உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.

  7. ஓசியா 1:1சுமார் கி.மு. 785

    யூதாவில் உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகிய அரசர்கள் ஆட்சி செய்த காலங்களில், பெயேரியின் மகன் ஓசியாவிற்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அக்காலத்தில் இஸ்ரயேலில் யோவாசின் மகன் யெரொபெயாம் அரசன் ஆட்சிசெய்தான்.

  8. ஓசியா 1:2சுமார் கி.மு. 785

    ஓசியாவின்மூலம் யெகோவா பேசத் தொடங்கியபோது, யெகோவா அவனிடம், “நீ போய் ஒரு வேசியை மனைவியாகக்கொண்டு, வேசிப் பிள்ளைகளையும் பெற்றுக்கொள். ஏனெனில் நாடு யெகோவாவுக்கு விரோதமாக, மிகக் கேவலமான விபசாரக் குற்றத்தைச் செய்திருக்கிறது என்றார்.”

  9. ஓசியா 1:3சுமார் கி.மு. 785

    அவ்வாறே அவன் போய் திப்லாயிமின் மகள் கோமேர் என்பவளைத் திருமணம் செய்துகொண்டான். அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள்.

  10. ஓசியா 1:4சுமார் கி.மு. 785

    யெகோவா ஓசியாவிடம், “இவனுக்கு யெஸ்ரயேல் என்று பெயரிடு. ஏனெனில் நான் வெகு சீக்கிரமாய் யெஸ்ரயேலில் நடந்த படுகொலைக்காக, யெகூவின் குடும்பத்தைத் தண்டிப்பேன். இஸ்ரயேல் அரசுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.

  11. ஓசியா 1:5சுமார் கி.மு. 785

    அந்த நாளில், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறிப்பேன் என்றார்.”

  12. ஓசியா 1:6சுமார் கி.மு. 785

    மீண்டும் கோமேர் கருவுற்று பெண் குழந்தையொன்றைப் பெற்றாள். அப்பொழுது இறைவன் ஓசியாவிடம், “இவளுக்கு, லோருகாமா எனப் பெயரிடு. ஏனெனில் நான் திரும்பவும் ஒருபோதும் இஸ்ரயேல் குடும்பத்தை மன்னிக்கும்படி அவர்களுக்கு அன்புகாட்டமாட்டேன்.

  13. ஓசியா 1:7சுமார் கி.மு. 785

    ஆனால் யூதா குடும்பத்திற்கு நான் அன்புகாட்டுவேன்; நான் அவர்களைக் காப்பாற்றுவேன். ஆயினும், வில்லினாலோ, வாளினாலோ, யுத்தத்தினாலோ, குதிரைகளினாலோ, குதிரைவீரர்களினாலோ அல்ல. அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவினாலேயே அவர்களைக் காப்பாற்றுவேன் என்றார்.”

  14. ஓசியா 1:8சுமார் கி.மு. 785

    லோருகாமா பால்குடி மறந்தபின், கோமேர் இன்னொரு ஆண்குழந்தையைப் பெற்றாள்.

  15. ஓசியா 1:9சுமார் கி.மு. 785

    அப்பொழுது யெகோவா, “அவனுக்கு, லோகம்மீ என்று பெயரிடு; ஏனெனில் நீங்கள் எனது மக்களல்ல, நான் உங்கள் இறைவனுமல்ல.

  16. ஓசியா 1:10சுமார் கி.மு. 785

    “ஆயினும் ஒரு நாள் வரும்; அப்பொழுது இஸ்ரயேலர்கள் அளவிடவோ, எண்ணவோ முடியாத கடற்கரை மணலைப் போலிருப்பார்கள். ‘நீங்கள் என்னுடைய மக்களல்ல’ என்று சொல்லப்பட்ட அதே இடத்தில், அவர்கள், ‘ஜீவனுள்ள இறைவனின் பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவார்கள்.

  17. ஓசியா 1:11சுமார் கி.மு. 785

    யூதாவின் மக்களும், இஸ்ரயேல் மக்களும் திரும்பவும் ஒன்றிணைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுக்கு ஒரே தலைவனை நியமிப்பார்கள். அவர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கும் நாட்டைவிட்டு வெளியே வருவார்கள். ஏனெனில் யெஸ்ரயேலின் நாள் மேன்மையுள்ளதாயிருக்கும்.

  18. ஓசியா 2:1சுமார் கி.மு. 785

    “அந்நாளிலே உங்கள் சகோதரர்களைப் பார்த்து, ‘நீங்கள் என் மக்கள்’ என்றும், உங்கள் சகோதரிகளைப் பார்த்து, ‘என் அன்புக்குரியவள்’ என்றும் சொல்லுங்கள்.

  19. ஓசியா 2:2சுமார் கி.மு. 785

    “உங்கள் தாயைக் கண்டியுங்கள், அவளைக் கண்டியுங்கள், அவள் என் மனைவி அல்ல, நான் அவள் கணவனும் அல்ல. அவள் தன் விபசாரப் பார்வையை தன் முகத்தை விட்டகற்றட்டும்; தன் உண்மையற்ற தன்மையைத் தன் மார்பகங்களிடையே இருந்தும் விலக்கட்டும்.

  20. ஓசியா 2:3சுமார் கி.மு. 785

    இல்லாவிட்டால் நான் அவளை உரிந்து நிர்வாணமாக்கி, அவள் பிறந்த நாளில் இருந்ததுபோலவே அவளை வெறுமையாக வைப்பேன்; அவளைப் பாலைவனத்தைப் போலாக்குவேன், வறண்ட நிலமாக்கி, அவளைத் தாகத்தினால் சாகப்பண்ணுவேன்.

  21. ஓசியா 2:4சுமார் கி.மு. 785

    நான் அவளது பிள்ளைகளில் அன்புகாட்டமாட்டேன். ஏனெனில் அவர்கள் வேசிப்பிள்ளைகள்.

  22. ஓசியா 2:5சுமார் கி.மு. 785

    அவர்களின் தாய் எனக்கு உண்மையற்றவளாயிருந்தாள்; அவர்களை வெட்கக்கேடான முறையில் கர்ப்பந்தரித்தாள். அவளோ, ‘நான் காதலர்களுக்குப் பின்னே போவேன், அவர்கள் எனக்கு உணவும், தண்ணீரும், கம்பளி உடையும், மென்பட்டு உடையும், எண்ணெயும், பானமும் தருவார்கள்’ என்றாள்.

  23. ஓசியா 2:6சுமார் கி.மு. 785

    எனவே நான், அவளது பாதையை முட்புதர்களினால் அடைப்பேன்; அவள் தன் வழியை கண்டுபிடிக்க முடியாதபடி அவளைச்சுற்றி மதில் கட்டுவேன்.

  24. ஓசியா 2:7சுமார் கி.மு. 785

    அவள் தன் காதலர்கள் பின்னால் ஓடுவாள்; ஆயினும் அவர்களைக் கண்டுபிடிக்கமாட்டாள். அவள் அவர்களைத் தேடுவாள், ஆனாலும் கண்டுபிடிக்கமாட்டாள். அப்பொழுது அவள், ‘நான் முன்னிருந்ததுபோல என் கணவனிடம் திரும்பிப் போவேன்; ஏனெனில் அப்பொழுது நான் இதைவிட நலமாயிருந்தேன்’ என்பாள்.

  25. ஓசியா 2:8சுமார் கி.மு. 785

    நானே அவளுக்கு தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்றும், நானே அவளுக்கு வெள்ளியையும் தங்கத்தையும் ஏராளமாய்க் கொடுத்தேன் என்றும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை; ஆயினும் அவர்களோ அவற்றைப் பாகால் தெய்வத்துக்குப் பயன்படுத்தினார்கள்.