உள்ளடக்கத்திற்குச் செல்க

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 வசனங்கள் · 21 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. 1 தெசலோனிக்கேயர் 4:3சுமார் கி.பி. 54

    நீங்கள் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதே இறைவனின் சித்தம். நீங்கள் முறைகேடான பாலுறவுகளைத் தவிர்த்துக்கொண்டு,

  2. 1 தெசலோனிக்கேயர் 4:4சுமார் கி.பி. 54

    ஒவ்வொருவரும் தங்கள் உடலை பரிசுத்தமாயும் மதிப்புக்குரியதாயும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டும்.

  3. 1 தெசலோனிக்கேயர் 4:5சுமார் கி.பி. 54

    இறைவனை அறியாத, யூதரல்லாதவர்களைப்போல் காமவேட்கைகொள்ளாமல் இருக்கவேண்டும்;

  4. 1 தெசலோனிக்கேயர் 4:6சுமார் கி.பி. 54

    இந்தக் காரியத்தில், ஒருவன் தன் சகோதரனுக்கு பிழைசெய்யவோ, அவனை ஏமாற்றி பயன்பெறவோ கூடாது. நாங்கள் ஏற்கெனவே உங்களுக்கு சொல்லி எச்சரித்ததுபோல, இப்படிப்பட்ட பாவங்களைச் செய்யும் மனிதர்களைக் கர்த்தர் தண்டிப்பார்.

  5. 1 தெசலோனிக்கேயர் 4:7சுமார் கி.பி. 54

    ஏனெனில், இறைவன் நம்மை அசுத்தமாய் நடப்பதற்கு அழைக்கவில்லை. பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கே அழைத்திருக்கிறார்.

  6. 1 தெசலோனிக்கேயர் 4:8சுமார் கி.பி. 54

    ஆகையால் இந்த அறிவுரைகளைப் புறக்கணிக்கிறவன் மனிதனை அல்ல, உங்களுக்கு தம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கிற இறைவனையே புறக்கணிக்கிறான்.

  7. 1 தெசலோனிக்கேயர் 4:9சுமார் கி.பி. 54

    சகோதர அன்பைக்குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஏனெனில், நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி, இறைவனே உங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாரே.

  8. 1 தெசலோனிக்கேயர் 4:10சுமார் கி.பி. 54

    உண்மையிலேயே மக்கெதோனியா எங்கும் இருக்கிற எல்லா சகோதரர்மேலும், நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இன்னும் அதிகமாய் அப்படிச் செய்யவேண்டும் என்றே உங்களை வேண்டிக்கொள்கிறோம்.

  9. 1 தெசலோனிக்கேயர் 4:11சுமார் கி.பி. 54

    நாங்கள் உங்களுக்கு சொல்லியது போலவே, ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்வதும், உங்கள் சொந்த அலுவல்களையே பார்த்துக்கொள்வதும், உங்கள் கைகளினால் வேலைசெய்வதே உங்கள் முக்கியக் குறிக்கோளாய் இருக்கட்டும்.

  10. 1 தெசலோனிக்கேயர் 4:12சுமார் கி.பி. 54

    அப்பொழுது உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் புறம்பே இருக்கிறவர்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள். அத்துடன் நீங்கள் மற்றவர்களை சார்ந்து வாழவேண்டியதில்லை.

  11. 1 தெசலோனிக்கேயர் 4:13சுமார் கி.பி. 54

    பிரியமானவர்களே, மரண நித்திரை அடைகிறவர்களைக்குறித்து, நீங்கள் அறியாமல் இருப்பதை, நாங்கள் விரும்பவில்லை. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத மற்றவர்களைப்போல், நீங்கள் துக்கமடைவதையும் நாங்கள் விரும்பவில்லை.

  12. 1 தெசலோனிக்கேயர் 4:14சுமார் கி.பி. 54

    இயேசு இறந்து உயிருடன் எழுந்தார் என்று நாம் விசுவாசிக்கிறோமே. அப்படியே, இறைவனும் கிறிஸ்துவில் மரண நித்திரையடைந்தோரை இயேசுவுடனேகூட உயிருடன் கொண்டுவருவார் என்றும் விசுவாசிக்கிறோம்.

  13. 1 தெசலோனிக்கேயர் 4:15சுமார் கி.பி. 54

    கர்த்தருடைய சொந்த வார்த்தையின்படியே நாங்கள் உங்களுக்குச் சொல்கிறதாவது, கர்த்தருடைய வருகைவரைக்கும் இன்னும் உயிருடனிருக்கும் நாமும், நிச்சயமாகவே மரண நித்திரை அடைந்தவர்களுக்கு முந்தி எடுத்துக்கொள்ளப்படமாட்டோம்.

  14. 1 தெசலோனிக்கேயர் 4:16சுமார் கி.பி. 54

    ஏனெனில் கர்த்தர்தாமே பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அவர் பிரதான தூதனுடைய குரல் ஒலிக்க, சத்தமான கட்டளை முழங்க, இறைவனுடைய எக்காள அழைப்புடன் வருவார். அப்பொழுது கிறிஸ்துவில் இறந்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள்.

  15. 1 தெசலோனிக்கேயர் 4:17சுமார் கி.பி. 54

    அதற்குப் பின்பு, இன்னும் உயிருடனிருக்கும் நாமும், ஆகாயத்திலே கர்த்தரைச் சந்திக்கும்படி, அவர்களுடனேகூட மேகங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாக, நாம் என்றென்றைக்கும் கர்த்தருடனேயே இருப்போம்.

  16. 1 தெசலோனிக்கேயர் 4:18சுமார் கி.பி. 54

    ஆகையால், இந்த வார்த்தைகளினாலே ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்.

  17. 1 தெசலோனிக்கேயர் 5:1சுமார் கி.பி. 54

    இப்பொழுதும் பிரியமானவர்களே, இவை நிகழும் காலங்களையும் வேளைகளையும் குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.

  18. 1 தெசலோனிக்கேயர் 5:2சுமார் கி.பி. 54

    ஏனெனில் கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறதைப்போலவே வரும் என்று நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்களே.

  19. 1 தெசலோனிக்கேயர் 5:3சுமார் கி.பி. 54

    “சமாதானமும் பாதுகாப்பும்” உண்டு என்று மக்கள் சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு கர்ப்பவதியான பெண்ணுக்கு பிரசவவேதனை வருவதுபோல, திடீரென அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.

  20. 1 தெசலோனிக்கேயர் 5:4சுமார் கி.பி. 54

    ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருக்கிறவர்கள் இல்லை. ஆதலால், அந்நாள் ஒரு திருடனைப்போல் வந்து உங்களை வியப்பிற்குள்ளாக்காது.

  21. 1 தெசலோனிக்கேயர் 5:5சுமார் கி.பி. 54

    நீங்கள் எல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாய் இருக்கிறீர்கள். நாம் இரவுக்கோ, இருளுக்கோ உரியவர்களல்ல.

  22. 1 தெசலோனிக்கேயர் 5:6சுமார் கி.பி. 54

    ஆகவே நாம் தூங்குகிற மற்றவர்களைப்போல் இருக்காமல், விழிப்புடனும் தன்னடக்கத்துடனும் இருப்போமாக.

  23. 1 தெசலோனிக்கேயர் 5:7சுமார் கி.பி. 54

    ஏனெனில் நித்திரை செய்கிறவர்கள் இரவில் நித்திரை செய்கிறார்கள். மதுவெறி கொள்கிறவர்கள் இரவிலே வெறிகொள்கிறார்கள்.

  24. 1 தெசலோனிக்கேயர் 5:8சுமார் கி.பி. 54

    ஆனால் நாமோ பகலுக்குரியவர்களாய் இருக்கிறபடியால் தன்னடக்கத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக்கவசமாக அணிந்துகொள்வோம். இரட்சிப்பைப் பற்றிய எதிர்பார்ப்பை தலைக்கவசமாய் அணிந்துகொள்வோம்.

  25. 1 தெசலோனிக்கேயர் 5:9சுமார் கி.பி. 54

    ஏனெனில் இறைவன் நம்மை தமது கோபத்தின் தண்டனையைப் பெறுவதற்காக நியமிக்கவில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக இரட்சிப்பைப் பெறவே நியமித்திருக்கிறார்.