circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
- 1 தெசலோனிக்கேயர் 5:10சுமார் கி.பி. 54
நாம் உயிருடன் இருந்தாலும், மரண நித்திரை அடைந்தாலும் கிறிஸ்துவுடன் ஒன்றாய் வாழும்படியாக, அவர் நமக்காக இறந்தார்.
- 1 தெசலோனிக்கேயர் 5:11சுமார் கி.பி. 54
ஆகையால் நீங்கள் இப்பொழுது செய்கிறதுபோலவே, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, ஒருவருக்கொருவர் மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:12சுமார் கி.பி. 54
பிரியமானவர்களே, இப்பொழுதும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது, உங்களிடையே கஷ்டப்பட்டு வேலை செய்கிறவர்களாக, கர்த்தரில் உங்கள் மேற்பார்வையாளராய் இருந்து, உங்களுக்குப் புத்திமதி சொல்கிறவர்களை மதித்து நடவுங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:13சுமார் கி.பி. 54
அவர்களுடைய வேலையின் நிமித்தம் அவர்களில் அன்பு செலுத்தி, அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாய் வாழுங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:14சுமார் கி.பி. 54
பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது, சோம்பலாய் இருக்கிறவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள். எல்லோருடனும் பொறுமையோடு நடந்துகொள்ளுங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:15சுமார் கி.பி. 54
ஒருவரும் தீமையான செயலுக்குப் பதிலாக இன்னொரு தீமையான செயலை செய்யாதபடி கவனமாயிருங்கள். ஆனால் எப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் மற்ற எல்லோருக்கும் நன்மை செய்யவே முயற்சி செய்யுங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:16சுமார் கி.பி. 54
எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:17சுமார் கி.பி. 54
இடைவிடாது மன்றாடுங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:18சுமார் கி.பி. 54
எல்லாவித சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கான இறைவனின் சித்தம்.
- 1 தெசலோனிக்கேயர் 5:19சுமார் கி.பி. 54
ஆவியானவரின் அனலை அணைத்துப் போடாதிருங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:20சுமார் கி.பி. 54
சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யவேண்டாம்.
- 1 தெசலோனிக்கேயர் 5:21சுமார் கி.பி. 54
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:22சுமார் கி.பி. 54
எல்லா விதமான தீயசெயல்களையும் விட்டு விலகியிருங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:23சுமார் கி.பி. 54
சமாதானத்தின் இறைவன் தாமே முற்றிலுமாய் உங்களைப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றமற்றதாய் காக்கப்படுவதாக.
- 1 தெசலோனிக்கேயர் 5:24சுமார் கி.பி. 54
உங்களை அழைத்த இறைவன் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
- 1 தெசலோனிக்கேயர் 5:25சுமார் கி.பி. 54
பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:26சுமார் கி.பி. 54
எல்லா சகோதரரையும் பரிசுத்த முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள்.
- 1 தெசலோனிக்கேயர் 5:27சுமார் கி.பி. 54
இந்தக் கடிதத்தை எல்லா சகோதரருக்கும் வாசித்துக் காண்பிக்கும்படி, கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
- 1 தெசலோனிக்கேயர் 5:28சுமார் கி.பி. 54
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
- 2 தெசலோனிக்கேயர் 1:1சுமார் கி.பி. 54
பவுல், சில்வான், தீமோத்தேயு, நம்முடைய பிதாவாகிய இறைவனிலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலும் இருக்கிற தெசலோனிக்கேயரின் திருச்சபைக்கு எழுதுகிறதாவது:
- 2 தெசலோனிக்கேயர் 1:2சுமார் கி.பி. 54
பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
- 2 தெசலோனிக்கேயர் 1:3சுமார் கி.பி. 54
பிரியமானவர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆம் அது சரியானதே. ஏனெனில், உங்கள் விசுவாசம் மென்மேலும் வளர்ச்சியடைகிறது. அத்துடன், நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் பாராட்டுகிற அன்பும் பெருகுகிறது.
- 2 தெசலோனிக்கேயர் 1:4சுமார் கி.பி. 54
ஆகவே, உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற துன்புறுத்தல்கள் வேதனைகளின் மத்தியிலும், உங்களுடைய மன உறுதியையும், விசுவாசத்தையும்குறித்து, இறைவனுடைய திருச்சபைகள் மத்தியிலே, நாங்கள் பெருமிதமாய் பேசிக்கொள்கிறோம்.
- 2 தெசலோனிக்கேயர் 1:5சுமார் கி.பி. 54
இறைவனுடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்பதற்கு, இவையெல்லாம் சாட்சியாயிருக்கிறது. இதன் விளைவாக நீங்கள் இறைவனுடைய அரசுக்குத் தகுதிவுள்ளவர்களாக எண்ணப்படுவீர்கள்; அதற்காகவே இந்த வேதனையை அனுபவிக்கிறீர்கள்.
- 2 தெசலோனிக்கேயர் 1:6சுமார் கி.பி. 54
இறைவன் நீதியுள்ளவர்: உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறவர்களுக்கு, அவர் துன்பத்தைக் கொடுப்பார்.