உள்ளடக்கத்திற்குச் செல்க

Jerusalem

753 verses · 2 known names

இவ்வாறும் அறியப்படுகிறார்: Jerusalem's

31.7700, 35.2300 கூகுள் வரைபடத்தில் காண்க

Jerusalem பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவன் யெகோவாவின் ஆலயத்தையும், அரண்மனையையும், எருசலேமிலிருந்த வீடுகள் அனைத்தையும் சுட்டெரித்தான். முக்கியமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் அவன் எரித்துப்போட்டான்.

  2. பேரரசின் மெய்க்காவல் தளபதியின் தலைமையில் முழு பாபிலோனியப் படையும், எருசலேமைச் சுற்றியிருந்த மதிலை உடைத்து வீழ்த்தியது.

  3. இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான். தாவீது எருசலேமில் முப்பத்துமூன்று வருடம் ஆட்சிசெய்தான்.

  4. எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்: சிமீயா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்; இவர்கள் நால்வரும், அம்மியேலின் மகள் பத்சேபாளுக்குப் பிறந்தார்கள்.

  5. யோகனான் அசரியாவின் தகப்பன். எருசலேமில் சாலொமோன் கட்டிய ஆலயத்தில் ஆசாரியனாக இருந்தவன் இவனே.

  6. யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதாவையும், எருசலேமையும் நாடுகடத்தியபோது, யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டான்.

  7. இவர்களே சாலொமோன் எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்வரை, சபைக் கூடாரமான ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னிலையில் சங்கீத சேவையுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தங்கள் கடமைகளைச் செய்துவந்தனர்.

  8. இவர்கள் எல்லோரும் வம்சங்களுக்கேற்ப பதிவு செய்யப்பட்டபடி குடும்பங்களின் தலைவர்களாகவும், முதன்மையானவர்களாகவும் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

  9. மிக்லோத் என்பவர்கள். மிக்லோத் சிமியாவின் தகப்பன். இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

  10. யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே கோத்திரங்களிலிருந்து வந்து எருசலேமில் வாழ்ந்தவர்களின் பெயர்களாவன:

  11. இவர்கள் எல்லோரும் லேவியக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் தங்கள் வம்சங்களின்படி பதிவு செய்யப்பட்ட தலைவர்கள். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.

  12. மிக்லோத் சிமியாமின் தகப்பன்; இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

  13. தாவீதும் இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் எபூசு எனப்பட்ட எருசலேமுக்கு அணிவகுத்துப் போனார்கள்.

  14. எருசலேமிலே தாவீது இன்னும் பல பெண்களைத் திருமணம் செய்து, பல மகன்களுக்கும் மகள்களுக்கும் தகப்பனானான்.

  15. எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்மூவா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்,

  16. தாவீது யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தான் ஆயத்தப்படுத்தியிருந்த இடத்திற்கு கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலர் எல்லோரையும் எருசலேமில் ஒன்றுகூட்டினான்.

  17. ஆதாதேசரின் அதிகாரிகளிடமிருந்து தனது தங்கக் கேடயங்களை தாவீது எடுத்து எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.

  18. சீரியர் தப்பியோடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் யோவாப்பின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாக தப்பியோடி பட்டணத்திற்குள் நுழைந்தார்கள். எனவே யோவாப் எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.

  19. அரசர்கள் போருக்குச் செல்லும் வசந்தகாலத்தில் யோவாப் தனது ஆயுதம் தாங்கிய படைக்குத் தலைமை தாங்கிச் சென்றான். அவன் அம்மோனியரின் நாட்டை பாழாக்கி ரப்பாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான். ஆனால் தாவீது எருசலேமில் இருந்து விட்டான். யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைப் பாழிடமாக்கினான்.

  20. அவன் அங்கிருந்த மக்களை வெளியே கொண்டுவந்து, அவர்களை வாள்கள், இரும்பு ஆயுதங்கள், கோடரிகள் முதலியவற்றால் வேலைசெய்வதற்கு நியமித்தான். இவ்வாறே தாவீது அம்மோனியரின் எல்லா பட்டணங்களுக்கும் செய்தான். பின்பு தாவீதும் அவனுடைய எல்லாப் படைவீரர்களும் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

  21. ஆனால் அரசனின் வார்த்தையோ யோவாப்பை மேற்கொண்டது. எனவே யோவாப் அவ்விடத்தை விட்டுப்போய் இஸ்ரயேல் முழுவதும் சுற்றித்திரிந்து எருசலேமுக்குத் திரும்பிவந்தான்.

  22. அதோடு எருசலேமையும் அழிப்பதற்கு இறைவன் ஒரு தூதனை அனுப்பினார். ஆனாலும் தூதன் அழிக்கத் தொடங்கினவுடனேயே அவர்களுக்கேற்பட்ட அந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே யெகோவா அழிக்கும் தூதனிடம், “போதும்! உன் கையை எடு” என்று சொன்னார். அப்பொழுது யெகோவாவினுடைய தூதன் எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் நின்றான்.

  23. தாவீது மேலே பார்த்தபோது, யெகோவாவின் தூதன் தனது உருவிய வாளை எருசலேமுக்கு மேலாக நீட்டியபடி, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நிற்கக் கண்டான். அப்பொழுது தாவீதும், முதியவர்களும் துக்கவுடை உடுத்தி, யெகோவாவுக்குமுன் தரையில் முகங்குப்புற விழுந்தனர்.

  24. அப்பொழுது தாவீது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தனது மக்களுக்கு அமைதியைக் கொடுத்து எருசலேமில் என்றென்றைக்கும் வசிக்க வந்திருக்கிறார்.

  25. தாவீது இஸ்ரயேலின் அதிகாரிகள் எல்லோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தான். கோத்திரங்களின்மேல் அதிகாரிகளாய் இருந்தவர்களையும், அரச இராணுவப் பிரிவுகளின் தளபதிகளையும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளையும் கூடிவரச் செய்தான். அத்துடன் நூறுபேருக்குத் தளபதிகளையும், அரசனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் உண்டான உடைமைகளுக்கும், வளர்ப்பு மிருகங்களுக்கும் பொறுப்பதிகாரிகளையும், அரண்மனைக்குப் பொறுப்பதிகாரிகளையும் வலிமைமிக்க மனிதர்களையும், தைரியமான வீரர்களையும் கூடிவரச் செய்தான்.