உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “நான் வெகுகாலம் மவுனமாய் இருந்தேன், நான் அமைதியாய் இருந்து என்னையே அடக்கிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது, பிரசவிக்கும் பெண்ணைப்போல் கதறி அழுது, மூச்சுத் திணறுகிறேன்.

  2. நான் மலைகளையும், குன்றுகளையும் பாழாக்குவேன், அவைகளிலுள்ள தாவரங்களையும் வாடிப்போகப் பண்ணுவேன். ஆறுகளைத் தீவுகளாக மாற்றி, குளங்களையும் வற்றப்பண்ணுவேன்.

  3. நான் குருடரை அவர்கள் அறிந்திராத வழிகளில் வழிநடத்தி, அவர்களுக்குப் பழக்கமில்லாத பாதைகளில் அழைத்துச்செல்வேன்; நான் இருளை அவர்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கி, கரடுமுரடான இடங்களைச் செப்பனிடுவேன். நான் செய்யப்போகும் காரியங்கள் இவையே; நான் அவர்களை நான் கைவிடமாட்டேன்.

  4. எனது ஊழியனைவிடக் குருடன் யார்? நான் அனுப்பும் தூதுவனைவிடச் செவிடன் யார்? எனக்குத் தன்னை அர்ப்பணித்தவனைப்போல் குருடன் யார்? யெகோவாவின் ஊழியனைப்போல் குருடன் யார்?

  5. யெகோவா தன் நீதியின் நிமித்தம் தனது சட்டத்தைச் சிறப்பாகவும், மகிமையாகவும் செய்வதில் மகிழ்ச்சியடைந்தார்.

  6. யாக்கோபை சூறைப்பொருளாகக் கொடுத்தது யார்? இஸ்ரயேலை கொள்ளைக்காரருக்கு ஒப்படைத்தது யார்? யெகோவா அல்லவா இதைச் செய்தார், நாமோ அவருக்கு எதிராகப் பாவம் செய்தோமே. ஏனென்றால் அவர்கள் அவரின் வழிகளைப் பின்பற்றவில்லை, அவரது சட்டத்திற்குக் கீழ்ப்படியவுமில்லை.

  7. ஆகையால் அவர் தனது பற்றியெரியும் கோபத்தையும், போரின் வன்செயலையும் அவர்கள்மேல் ஊற்றினார். அது அவர்களை நெருப்புச் சுவாலைகளினால் சூழ்ந்துகொண்டும், அதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களைச் சுட்டெரித்தது, ஆனால் அதை அவர்கள் மனதில் கொள்ளவில்லை.

  8. இப்போது யெகோவா சொல்வது இதுவே: யாக்கோபே, உன்னைப் படைத்தவரும், இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவரும் சொல்வதாவது, “பயப்படாதே, நான் உன்னை மீட்டிருக்கிறேன்; நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்திருக்கிறேன்; நீ என்னுடையவன்.

  9. நீ தண்ணீரைக் கடக்கும்போது, நான் உன்னுடன் இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது, அவை உன்னை அள்ளிக்கொண்டு போகாது; நீ நெருப்பில் நடக்கும்போதும் எரிந்து போகமாட்டாய். நெருப்பு சுவாலை உன்னை எரித்துப்போடாது.

  10. ஏனெனில், நானே உங்கள் இறைவனாகிய யெகோவா, இஸ்ரயேலின் பரிசுத்தராகிய நானே உன் இரட்சகர்; நான் உன்னை மீட்கும் பொருளாக எகிப்தையும், உனக்குப் பதிலாக எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுக்கிறேன்.

  11. நீ என் பார்வையில் அருமையானவன், மதிப்பிற்குரியவன்; நான் உன்னில் அன்பாயிருக்கிறபடியினால், உனக்குப் பதிலாக மனிதரையும், உன் உயிருக்கு மாற்றீடாக நாடுகளையும் கொடுப்பேன்.

  12. பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் கிழக்கிலிருந்து உன் பிள்ளைகளைக் கொண்டுவருவேன், மேற்கிலிருந்து உங்களை ஒன்றுசேர்ப்பேன்.

  13. நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களை விட்டுவிடு!’ என்றும், தெற்கைப் பார்த்து, ‘அவர்களை பிடித்து வைத்துக்கொள்ளாதே’ என்றும் சொல்வேன். எனது மகன்களைத் தூரத்திலிருந்தும், எனது மகள்களைப் பூமியின் கடைசிகளிலிருந்தும் கொண்டுவாருங்கள்.

  14. என் பெயரால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொண்டுவாருங்கள். இவர்களை நானே என் மகிமைக்காகப் படைத்தேன். இவர்களை நானே உருவாக்கி உண்டாக்கினேன்.”

  15. “நீங்களே என் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீங்கள், நான் தெரிந்துகொண்ட என் ஊழியராய் இருக்கிறீர்கள். அதனால், நீங்கள் என்னை அறிந்து விசுவாசித்து, நானே அவரென்று விளங்கிக்கொள்ளுவீர்கள். எனக்குமுன் ஒரு தெய்வம் உருவாக்கப்படவும் இல்லை, எனக்குப்பின் எதுவும் இருக்கப்போவதுமில்லை.

  16. நான், நானே யெகோவா, என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை.

  17. நானே வெளிப்படுத்தினேன், இரட்சித்தேன், பிரசித்தப்படுத்தினேன்; உங்கள் மத்தியிலிருக்கும் எந்த அந்நிய தெய்வமுமல்ல. நானே இறைவன் என்பதற்கு நீங்களே எனது சாட்சிகள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  18. “ஆம், ஆதிநாட்களிலிருந்து நானே அவர். எனது கரத்திலிருந்து மக்களை விடுவித்துக்கொள்ள யாராலும் முடியாது. நான் செயலாற்றும்போது அதை மாற்ற யாரால் முடியும்?”

  19. உங்கள் மீட்பரும், இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய யெகோவா கூறுவது இதுவே: “உங்கள் நிமித்தம் பாபிலோனுக்கு நான் இராணுவத்தை அனுப்பி, பாபிலோனியர் அனைவரையும் அகதிகளாகக் கொண்டுவருவேன்; அவர்கள் பெருமைகொள்ளும் அவர்களுடைய கப்பல்களிலேயே அவர்களைக் கொண்டுவருவேன்.

  20. நானே யெகோவா, உங்கள் பரிசுத்தர்; இஸ்ரயேலைப் படைத்தவரும், உங்கள் அரசனும் நானே.”

  21. கடலிலே ஒரு வழியையும், பெரு வெள்ளத்திலே ஒரு பாதையையும் உண்டாக்கியவர் அவரே;

  22. இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்! அது இப்போதே உண்டாகிறது; அது உங்களுக்குத் தெரியவில்லையா? நான் பாலைவனத்தில் பாதையையும், பாழ்நிலத்தில் நீரூற்றுக்களையும் உண்டாக்குகிறேன்.

  23. நான் தெரிந்துகொண்ட என் மக்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு பாலைவனத்தில் தண்ணீரையும், பாழ்நிலத்தில் நீரோடைகளையும் நானே வழங்குகிறேன். அதனால், காட்டு மிருகங்களான குள்ளநரிகளும், நெருப்புக் கோழிகளும் என்னை கனம்பண்ணும்.

  24. இந்த மக்களை எனது துதியைப் பிரசித்தப்படுத்தும்படி, எனக்காக நானே உருவாக்கினேன்.

  25. “அப்படியிருந்தும், யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை. இஸ்ரயேலே, நீ எனக்காகப் பணிசெய்து களைக்கவுமில்லை.