Skip to content

Tabernacle பற்றிய பைபிள் வசனங்கள்

465 வசனங்கள் · 94 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.

  2. அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.

  3. அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.

  4. பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

  5. சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. ஓகிரானின் மகன் பாகியேலின் காணிக்கை இதுவே.

  6. பன்னிரண்டாம் நாள் நப்தலி கோத்திர மக்களின் தலைவன் ஏனானின் மகன் அகீரா தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.

  7. அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.

  8. அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.

  9. அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.

  10. பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்;

  11. சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. ஏனானின் மகன் அகீராவின் காணிக்கை இதுவே.

  12. பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்ட போது, அதன் அர்ப்பணிப்பிற்காகக் கொடுக்கப்பட்ட இஸ்ரயேல் தலைவர்களின் காணிக்கைகளாவன: பன்னிரண்டு வெள்ளி தட்டங்கள், பன்னிரண்டு தெளிக்கும் வெள்ளிக் கிண்ணங்கள், பன்னிரண்டு தங்கத் தட்டுகள்.

  13. ஒவ்வொரு வெள்ளித்தட்டங்களும் நூற்று முப்பது சேக்கல் எடையுள்ளதாயும், ஒவ்வொரு தெளிக்கும் கிண்ணமும் எழுபது சேக்கல் எடையுள்ளதாயும் இருந்தன. எல்லா வெள்ளித்தட்டுகளும் பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறையின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் எடையுள்ளதாயிருந்தன.

  14. நறுமணத்தூளினால் நிரப்பப்பட்ட பன்னிரண்டு தங்கத் தட்டுகளும், பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறையின்படி பத்து சேக்கல் நிறையுடையதாய் இருந்தன. தங்கத் தட்டுகள் எல்லாம் நூற்றியிருபது சேக்கல் நிறையுடையதாய் இருந்தன.

  15. தகன காணிக்கைக்கான மிருகங்களின் மொத்த எண்ணிக்கை பன்னிரண்டு இளம் காளைகளும், பன்னிரண்டு செம்மறியாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய பன்னிரண்டு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளுமாய் இருந்தன. அதோடு அவற்றுடன் தானிய காணிக்கையும் இருந்தது. பாவநிவாரண காணிக்கையாக பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்கள் செலுத்தப்பட்டன.

  16. மோசே யெகோவாவுடன் பேசுவதற்காகச் சபைக் கூடாரத்திற்குள் சென்றபோது, சாட்சிப்பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்திற்கு மேலாக இருக்கும், இரண்டு கேருபீன்களுக்கும் இடையில் இருந்து தன்னோடு பேசுகிற குரலைக் கேட்டான். இவ்விதமாக யெகோவா மோசேயோடு பேசினார்.

  17. “இது லேவியர்களுக்குரிய விதிமுறையாகும்: இருபத்தைந்து வயது உடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள், சபைக்கூடார வேலையில் பங்கெடுக்க வரவேண்டும்.

  18. சாட்சிபகரும் கூடாரமான இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட்ட நாளிலே மேகம் அதை மூடியது. மாலையிலிருந்து காலைவரை இரவு முழுவதும் அம்மேகம் இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாக நெருப்பைப்போல் காணப்பட்டது.

  19. அப்படியே அது தொடர்ந்து இருந்ததால் மேகத்தால் மூடப்பட்டு இரவில் நெருப்பைப்போல் காணப்பட்டது.

  20. அந்த இரண்டு எக்காளங்களும் ஊதப்படுகின்றபோது, எல்லா மக்களும் சபைக்கூடார வாசலில் உனக்கு முன்பாகக் கூடிவரவேண்டும்.

  21. இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியேறிய பிறகு இரண்டாம் வருடம், இரண்டாம் மாதம், இருபதாம் நாளில் சாட்சியின் கூடாரத்தின் மேலாக இருந்த மேகம் மேலெழுந்தது.

  22. அப்பொழுது இஸ்ரயேலர் சீனாய் பாலைவனத்தை விட்டுப் புறப்பட்டு, ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பயணம்பண்ணி, அந்த மேகம் பாரான் பாலைவனத்தில் தங்கும்வரை போய்க்கொண்டிருந்தார்கள்.

  23. அப்படியே அவர்கள் யெகோவாவினுடைய மலையை விட்டுப் புறப்பட்டு மூன்று நாட்கள் பயணம் செய்தார்கள். தங்கும் இடம் ஒன்றைக் கண்டுகொள்வதற்காக அந்த மூன்றுநாட்களும் யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு முன்னால் சென்றது.

  24. அவர்கள் முகாமைவிட்டுப் புறப்பட்டபோது, பகலில் யெகோவாவின் மேகம் அவர்களுக்கு மேலாக இருந்தது.

  25. உடன்படிக்கைப்பெட்டி புறப்பட்டபோதெல்லாம் மோசே சொன்னது: “யெகோவாவே, எழுந்தருளும்! உமது பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக; உமது எதிரிகள் உமக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக.”