உள்ளடக்கத்திற்குச் செல்க

Tabernacle பற்றிய பைபிள் வசனங்கள்: Divided by a vail of blue, purple, suspended from four pillars of shittim

6 வசனங்கள் · 94 அம்சங்கள்

Divided by a vail of blue, purple, suspended from four pillars of shittim பற்றிய வசனங்கள்

  1. நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டினாலும் ஒரு திரைச்சீலையைச் செய்து, அதில் திறமையான கலைஞரைக்கொண்டு கேருபீன்களின் சித்திரவேலையைச் செய்யவேண்டும்.

  2. அந்தத் திரையைத் தங்கத்தகட்டால் மூடப்பட்ட சித்தீம் மரத்தாலான நான்கு கம்பங்களில், தங்கக் கொக்கிகளால் தொங்கவிட வேண்டும். அந்த நான்கு கம்பங்களும் நான்கு வெள்ளி அடித்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

  3. கொக்கிகளிலிருந்து திரையைத் தொங்கவிட்டுச் சாட்சிப்பெட்டியை திரைக்குப் பின்பாக வை. அத்திரை பரிசுத்த இடத்தையும், மகா பரிசுத்த இடத்தையும் பிரிக்கும்.

  4. நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டினாலும் ஒரு திரைச்சீலையைச் செய்து, அதில் திறமையான கலைஞர்கள் கேருபீன்களின் சித்திரவேலையைச் செய்தார்கள்.

  5. அந்தத் திரையைத் தொங்கவிடுவதற்கு சித்தீம் மரத்தினால் நான்கு கம்பங்களைச் செய்து, தங்கத்தகட்டால் அவற்றை மூடினார்கள். அவற்றுக்குத் தங்கத்தால் கொக்கிகளைச் செய்து, வெள்ளியினால் அதன் நான்கு அடித்தளங்களையும் வார்த்தார்கள்.

  6. இவ்வாறு மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, பெட்டியை இறைசமுகக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து, மூடுதிரையைத் தொங்கவிட்டு சாட்சிப்பெட்டியை மறைத்தான்.