Tabernacle பற்றிய பைபிள் வசனங்கள்: The second, eleven curtains of goats' hair
The second, eleven curtains of goats' hair பற்றிய வசனங்கள்
இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகக் கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரினால் பதினோரு திரைகளைச் செய்யவேண்டும்.
அந்த பதினோரு திரைகளும் ஒரே அளவாய் இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும் நான்கு முழம் அகலமும் உடையதாய் இருக்கவேண்டும்.
இவற்றில் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளையும் இன்னொரு தொகுப்பாக ஒன்றிணைக்கவேண்டும். ஆறாவது திரையை கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடித்துப்போடவேண்டும்.
ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், ஐம்பது வளையங்கள் செய்யவேண்டும். மற்ற தொகுப்பு திரையின் கடைசி விளிம்பு நெடுகிலும் அப்படியே செய்யவேண்டும்.
அதன்பின் ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கூடாரத்தை ஒரே பகுதியாக இணைப்பதற்கு அந்த வளையங்களில் அந்தக் கொக்கிகளைப் போடு.
கூடாரத்திரைகளின் மீதமுள்ள கூடுதலான நீளத்தைப் பொறுத்தவரையில், விடப்பட்ட பாதி திரையை இறைசமுகக் கூடாரத்தின் பின்பக்கத்தில் தொங்கவிட வேண்டும்.
கூடாரத்திரைகளின் நீளம் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு முழம் கூடுதலாக இருக்கும். மீதமிருப்பது இறைசமுகக் கூடாரத்தை மூடும்படியாக இரண்டு பக்கங்களிலும் தொங்கும்.
இறைசமுகக் கூடாரத்தின் மேலாக ஒரு கூடாரத்தைப் போடுவதற்கு ஆட்டு உரோமத்தினால் பதினோரு திரைகளைச் செய்தார்கள்.
அந்த பதினொரு திரைகளும், ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன.
அவர்கள் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளை இன்னொரு தொகுப்பாகவும் இணைத்தார்கள்.
பின்பு அவர்கள் ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும் ஐம்பது வளையங்களை அமைத்தார்கள். மற்ற தொகுப்பு கடைசி திரையின் ஒரு விளிம்பு நெடுகிலும் அவ்வாறே அமைத்தார்கள்.
அவர்கள் அந்தக் கூடாரத்தை ஒன்றாய் இணைப்பதற்காக ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்தார்கள்.