உள்ளடக்கத்திற்குச் செல்க

Tabernacle பற்றிய பைபிள் வசனங்கள்: The first or inner, ten curtains of blue, purple, &c joined with loops and golden taches

12 வசனங்கள் · 94 அம்சங்கள்

The first or inner, ten curtains of blue, purple, &c joined with loops and golden taches பற்றிய வசனங்கள்

  1. இறைசமுகக் கூடாரத்தைப் பத்து மூடுதிரைகளைக் கொண்டு செய்யவேண்டும். அத்திரைகள் தரமாகத் திரித்த மென்பட்டு, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றைக்கொண்டு நெய்யப்பட்டிருக்க வேண்டும். சிறந்த தொழில் வல்லுநரால் அதில் கேருபீன்களின் உருவம் சித்திர வேலையாய் செய்யப்படவேண்டும்.

  2. எல்லா திரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் அளவுள்ளதாய் இருக்கவேண்டும்.

  3. அதில் ஐந்து திரைகளை ஒன்றாக இணை, மற்ற ஐந்து திரைகளுக்கும் அப்படியே செய்யவேண்டும்.

  4. இணைக்கப்பட்ட ஒரு தொகுப்புத் திரையின் கடைசி விளிம்பில் நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்யவேண்டும். மற்ற தொகுப்புத் திரையின் கடைசி விளிம்பிலும் அப்படியே செய்யவேண்டும்.

  5. ஒரு திரையில் ஐம்பது வளையங்களைச் செய்; மற்றத் தொகுப்பு திரையின் கடைசியிலும் ஐம்பது வளையங்களைச் செய்யவேண்டும். அந்த வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிரெதிராய் இருக்கவேண்டும்.

  6. பின்பு தங்கத்தினால் ஐம்பது கொக்கிகளைச் செய், இந்த இறைசமுகக் கூடாரம் ஒரே இணைப்பாக இருக்கும்படி, இரண்டு தொகுப்பு திரைகளையும் ஒன்றாக இணைப்பதற்கு இக்கொக்கிகளைப் பயன்படுத்து.

  7. வேலையாட்களில் திறமையானவர்கள் எல்லோரும், தரமாய் திரித்த மென்பட்டு, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றைக்கொண்டு பத்து மூடுதிரைகளைச் செய்தார்கள். அதில் கேருபீன்களை சித்திரத் தையல்காரனுடைய வேலையால் அலங்கரித்து, அவற்றால் இறைசமுகக் கூடாரத்தை அமைத்தார்கள்.

  8. எல்லா திரைகளும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன.

  9. பின்பு ஐந்து திரைகளை ஒன்றாக இணைத்து, மற்ற ஐந்து திரைகளையும் அதேவிதமாகவே இணைத்தார்கள்.

  10. இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்தார்கள். அவ்விதமே இணைக்கப்பட்ட மற்றத்திரையின் தொகுப்பின் விளிம்பு நெடுகிலும் செய்தார்கள்.

  11. வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்கும்படி, ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும், மறு தொகுப்பு திரையின், ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும் அமைத்தார்கள்.

  12. பின் ஐம்பது தங்கக்கொக்கிகளைச் செய்து, இரண்டு தொகுப்புத் திரைகளையும் ஒன்றாய் இணைத்தார்கள். இவ்வாறு இறைசமுகக் கூடாரம் ஒரே அமைப்பாய் ஆக்கப்பட்டது.