Skip to content

Praise பற்றிய பைபிள் வசனங்கள்

490 வசனங்கள் · 106 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்; அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது.

  2. அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்; உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார்.

  3. அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்; அவருடைய பனியின் குளிர்காற்றை யாரால் தாங்கமுடியும்?

  4. அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; அவர் தமது தென்றல் காற்றுகளை வீசச்செய்ய, வெள்ளம் ஓடுகிறது.

  5. அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும், தமது சட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்ரயேலுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

  6. அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை; அவர்கள் அவருடைய சட்டங்களை அறியாதிருக்கிறார்கள். யெகோவாவைத் துதி.

  7. யெகோவாவைத் துதியுங்கள். வானங்களிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்; மேலே உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

  8. அவருடைய தூதர்களே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய பரலோக சேனைகளே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்.

  9. சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்; பிரகாசிக்கிற நட்சத்திரங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்.

  10. மிக உயர்ந்த வானங்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; ஆகாயங்களுக்கு மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

  11. அவர் கட்டளையிட அவை படைக்கப்பட்டதால் அவைகள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்.

  12. யெகோவா அவைகளை எப்பொழுதும் என்றென்றைக்கும் நிலைப்படுத்தினார்; அழிந்துபோகாத ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்.

  13. பூமியிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள், பெரிய கடல் உயிரினங்களே, கடலின் ஆழங்களே,

  14. நெருப்பே, பனிக்கட்டி மழையே, உறைபனியே, மேகங்களே, அவருடைய கட்டளையை நிறைவேற்றும் புயல்காற்றே,

  15. மலைகளே, குன்றுகளே, பழமரங்களே, அனைத்து கேதுரு மரங்களே,

  16. உயிரினங்களே, அனைத்து கால்நடைகளே, சிறிய உயிரினங்களே, பறக்கும் பறவைகளே,

  17. பூமியின் அரசர்களே, சகல நாடுகளே, இளவரசர்களே, பூமியிலுள்ள சகல ஆளுநர்களே,

  18. இளைஞர்களே, இளம்பெண்களே, முதியவர்களே, பிள்ளைகளே அவரைத் துதியுங்கள்.

  19. அவர்கள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்; ஏனெனில் அவருடைய பெயர் மட்டுமே புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது; அவருடைய சிறப்பு பூமிக்கும், வானங்களுக்கும் மேலாக இருக்கிறது.

  20. அவர் தம் உண்மையுள்ள பணியாளர்களாகிய, இருதயத்திற்கு உகந்த இஸ்ரயேல் மக்கள் துதிக்கும்படி, அவர் தம்முடைய மக்களுக்கென ஒரு வல்லமையுள்ள அரசனை உயர்த்தியிருக்கிறார்; அதற்காக அவரை எல்லா பரிசுத்தவான்களும் இஸ்ரயேலரும் துதிக்கிறார்கள். யெகோவாவைத் துதியுங்கள்.

  21. யெகோவாவைத் துதியுங்கள். யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள், பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள்.

  22. இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும்.

  23. அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும், தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும்.

  24. ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார்.

  25. பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.