Skip to content

Levites பற்றிய பைபிள் வசனங்கள்

186 வசனங்கள் · 17 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவர்களை கசிப்பியா பட்டணத்திலுள்ள லேவிய தலைவனாகிய இத்தோவிடம் அனுப்பினேன்; எங்கள் இறைவனின் ஆலய வேலைக்கு பணிவிடைக்காரரை எங்களிடம் கொண்டுவரும்படி இத்தோவுக்கும், கசிப்பியாவிலுள்ள ஆலய பணியாட்களான அவனுடைய உறவினர்களுக்கும் சொல்லும்படி இவர்களிடம் சொல்லி அனுப்பினேன்.

  2. எங்கள் இறைவனின் அன்புக்கரம் எங்கள்மேல் இருந்ததால், அவர்கள் செரெபியாவையும், அவன் மகன்களும், சகோதரர்களுமான பதினெட்டு பேரையும் கொண்டுவந்தார்கள். செரெபியா ஒரு திறமைவாய்ந்த மனிதன். அவன் இஸ்ரயேல் கோத்திரத்தைச் சேர்ந்த லேவியின் மகனான மகேலியின் வழித்தோன்றலைச் சேர்ந்தவன்.

  3. அத்துடன் அஷபியாவையும், மெராரியின் வழிவந்த எஷாயாவையும், அவனுடைய சகோதரர்களும், பெறாமகன்களுமான இருபது பேரையும் கொண்டுவந்தார்கள்.

  4. இன்னும் அவர்கள் லேவியர்களுக்கு உதவிசெய்யும்படி, தாவீதும் அவனுடைய அலுவலர்களும் நியமித்திருந்த ஆலய பணியாட்களிலிருந்து இருநூற்று இருபது பேரையும் எம்மிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் எல்லோரும் தங்கள் பெயர்களின்படியே பதிவு செய்யப்பட்டார்கள்.

  5. இவை செய்யப்பட்டதன் பின் தலைவர்கள் என்னிடம் வந்து, “இஸ்ரயேல் மக்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகியோர் தங்கள் அயலவர்களிடமிருந்து பிரிந்திருக்கவில்லை. கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய அயலில் உள்ள மக்களின் அருவருப்பான செயல்களில் இவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

  6. இஸ்ரயேல் மனிதர் தங்களுக்கும், தங்கள் மகன்களுக்கும் அவர்களின் மகள்களில் சிலரை மனைவிகளாக எடுத்திருக்கின்றனர். இவ்வாறு பரிசுத்தமான ஜனம் சுற்றியுள்ள மக்களுடன் கலந்துகொண்டது. இந்த துரோகச் செயலில் மக்கள் தலைவர்களும், அதிகாரிகளுமே வழிகாட்டிகளாக இருந்தனர்” என்று சொன்னார்கள்.

  7. லேவியர்களிலிருந்து: யோசபாத், சிமெயி, கெலாயா எனப்பட்ட கெலித்தா, பெத்தகியா, யூதா, எலியேசர்.

  8. பாடகர்களிலிருந்து: எலியாசீப்; ஆலய காவலர்களிலிருந்து: சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களுமாகும்.

  9. லேவியர்கள்: ஒதாயாவின் வழியே கத்மியேலின் வழிவந்த யெசுவாவின் சந்ததி 74 பேர்.

  10. பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 148 பேர்.

  11. வாசல் காவலர்கள்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததி 138 பேர்.

  12. ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,

  13. கேரோசு, சீயா, பாதோன்,

  14. லெபானா, அகாபா, சல்மாயி,

  15. ஆனான், கித்தேல், காகார்,

  16. ரயாயா, ரேசீன், நெக்கோதா,

  17. காசாம், ஊசா, பாசெயா,

  18. பேசாய், மெயூனீம், நெபுசீம்,

  19. பக்பூக், அகுபா, அர்கூர்,

  20. பஸ்லுத், மெகிதா, அர்ஷா,

  21. பர்கோஸ், சிசெரா, தேமா,

  22. நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.

  23. சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெரிதா,

  24. யாலா, தர்கோன், கித்தேல்,

  25. செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமோன் ஆகியோரின் சந்ததிகள்.