Skip to content

Merari

38 வசனங்கள் · 7 குடும்ப உறுப்பினர்கள்

Merari பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. லேவியின் மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

  2. பதிவேட்டின்படி லேவியின் மகன்களின் பெயர்கள்: கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள் ஆவர். லேவி 137 வருடங்கள் வாழ்ந்தான்.

  3. மெராரியின் மகன்கள் மகேலி, மூஷி என்பவர்கள். அவர்களுடைய பதிவேட்டின்படி லேவியின் வம்சங்கள் இவையே.

  4. லேவியின் மகன்களின் பெயர்களாவன: கெர்சோன், கோகாத், மெராரி,

  5. மெராரி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மகேலி, மூஷி என்பவர்கள் ஆவர். தங்களுடைய குடும்பங்களின்படி லேவிய வம்சத்தினர் இவர்களே.

  6. மகேலிய வம்சமும், மூசிய வம்சமும் மெராரிக்கு உரியவர்கள். மெராரி வம்சத்தினர் இவர்களே.

  7. அபியாயேலின் மகன் சூரியேல், மெராரி வம்சங்களின் குடும்பங்களுக்குத் தலைவனாயிருந்தான். இறைசமுகக் கூடாரத்தின் வடபகுதியில் அவர்கள் முகாமிட வேண்டியிருந்தது.

  8. இறைசமுகக் கூடாரத்தின் சட்டப்பலகைகள், குறுக்குச் சட்டங்கள், கம்பங்கள், அடித்தளங்கள், அதற்குரிய எல்லா உபகரணங்களும், அதன் பயன்பாட்டோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றின் பராமரிப்புக்காக மெராரியர் நியமிக்கப்பட்டார்கள்.

  9. “மெராரியரை அவர்களின் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடு.

  10. ஆசாரியன் ஆரோனின் மகன் இத்தாமாரின் வழிகாட்டலில், மெராரி வம்சத்தார் சபைக் கூடாரத்தின் வேலையைச் செய்கையில், அவர்களுடைய பணி இதுவே” என்றார்.

  11. மெராரியர் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடப்பட்டார்கள்.

  12. மெராரிய வம்சங்களைச் சேர்ந்தவர்களின் மொத்தத்தொகை இதுவே. யெகோவா மோசே மூலம் கட்டளையிட்டபடியே மோசேயும், ஆரோனும் அவர்களைக் கணக்கிட்டார்கள்.

  13. மெராரியருக்கு அவர்களுடைய வேலைக்குத் தேவையானபடி நாலு வண்டிகளையும் இரண்டு எருதுகளையும் கொடுத்தான். அவர்கள் எல்லோரும் ஆசாரியனாகிய ஆரோனின் மகனாகிய இத்தாமாரின் வழிகாட்டலின் கீழ் இருந்தார்கள்.

  14. அப்பொழுது இறைசமுக கூடாரமும் கழற்றப்பட்டது. கெர்சோனியரும், மெராரியரும் அதைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.

  15. வம்சம் வம்சமாக எண்ணப்பட்ட லேவியர்கள் இவர்களே. கெர்சோனின் மூலமாக கெர்சோனிய வம்சமும், கோகாத்தின் மூலமாக கோகாத்திய வம்சமும், மெராரியின் மூலமாக மெராரிய வம்சமும் வந்தன.

  16. மெராரி சந்ததிகள் வம்சம் வம்சமாக ரூபன், காத், செபுலோன் ஆகிய கோத்திரங்களிலிருந்து பன்னிரண்டு பட்டணங்களைப் பெற்றார்கள்.

  17. மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னீம், கர்தா,

  18. லேவி கோத்திரத்தின் எஞ்சிய பகுதியினரான மெராரியர் வம்சங்களுக்கு வழங்கப்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்.

  19. லேவியின் மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.

  20. லேவியின் மகன்கள்: கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்கள்.

  21. மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. இவர்கள் தங்கள் முற்பிதாக்களின் வழித்தோன்றலின்படி உண்டான லேவிய வம்சங்கள்.

  22. மெராரியின் சந்ததிகள்: மகேலி, இவனது மகன் லிப்னி, இவனது மகன் சிமேயி, இவனது மகன் ஊசா;

  23. மெராரியராகிய இவர்களது சகோதரர்கள் அவர்களுடைய இடதுபக்கத்தில் நிற்பார்கள்: அவர்களில் ஏத்தான் கிஷியின் மகன், இவன் அப்தியின் மகன், இவன் மல்லூக்கின் மகன்,

  24. இவன் மகேலியின் மகன், இவன் மூஷியின் மகன், இவன் மெராரியின் மகன், இவன் லேவியின் மகன்.

  25. மெராரியின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கும் ஏற்ப ரூபன், காத், செபுலோன் கோத்திரங்களிலுமிருந்து பன்னிரண்டு பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.