Ammonites பற்றிய பைபிள் வசனங்கள்: Jews intermarry with
Jews intermarry with பற்றிய வசனங்கள்
அப்பொழுது ஆசாரியன் எஸ்றா எழுந்து நின்று அவர்களிடம், “நீங்கள் உண்மையற்றவர்களானீர்கள்; நீங்கள் அந்நிய பெண்களைத் திருமணம் செய்ததினால் இஸ்ரயேலின் குற்றத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தீர்கள்.
இப்பொழுது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பாவ அறிக்கைசெய்து, அவரது திட்டத்தைச் செய்யுங்கள். அத்துடன் உங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களிடமிருந்தும், உங்கள் அந்நிய மனைவிகளிடமிருந்தும் உங்களை விலக்குங்கள்” என்றான்.
அவ்வாறே முழுச் சபையும் உரத்த சத்தமாய் இதை ஏற்றுக்கொண்டு: “நீர் சொல்வது சரி! நீர் சொல்கிறபடி நாங்கள் செய்யவேண்டும்.
எனினும் இங்கு அநேக மக்கள் இருக்கிறார்கள்; இது மழை காலமாகவும் இருக்கிறது. ஆகவே எங்களால் வெளியே நிற்கமுடியாது; இது ஓரிரு நாட்களில் செய்து முடிக்கக்கூடிய காரியமும் அல்ல. ஏனெனில் இந்தக் காரியத்தில் எங்களில் அநேகர் பெரிதாய் பாவம்செய்தோம்.
எனவே இந்தக் காரியத்தில் எங்கள் அதிகாரிகள் முழுச் சபைக்காகவும் செயல்படட்டும். இதினிமித்தம் நம்முடைய இறைவனின் கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் அந்நிய பெண்ணைத் திருமணம் செய்த ஒவ்வொருவனும் அந்தந்தப் பட்டணத்தைச் சேர்ந்த முதியவர்களுடனும், நீதிபதிகளுடனும் குறிப்பிட்ட நேரத்தில் வரட்டும்” என்றார்கள்.
ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்வாவின் மகன் யக்சியாவும் மாத்திரமே இதை எதிர்த்தார்கள். அவர்களுக்கு உதவியாக மெசுல்லாமும், லேவியனான சபெதாயிவும் இருந்தார்கள்.
எனவே நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர்கள் தாங்கள் முன் தீர்மானித்த திட்டத்தின்படி செய்தார்கள். ஆசாரியன் எஸ்றா ஒவ்வொரு குடும்பப் பிரிவிலுமிருந்து குடும்பத் தலைவர்களைத் தெரிவு செய்தான். அவர்கள் எல்லோரின் பெயரும் குறிக்கப்பட்டது. பத்தாம் மாதம் முதலாம் தேதியிலே வழக்குகளை விசாரணை செய்ய அமர்ந்தார்கள்.
இவ்வாறு இவர்கள் அந்நிய பெண்களைத் திருமணம் செய்திருந்த மனிதர்களைப் பற்றிய விசாரணையை முதலாம் மாதம், முதலாம் தேதியளவில் முடித்தார்கள்.
ஆசாரியர்களின் வழித்தோன்றலிலிருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள்: யோசதாக்கின் மகன் யெசுவாவினுடைய மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
இவர்கள் எல்லோரும் தங்கள் மனைவியரை விலக்கிவிடுவதாக கையடித்து வாக்குக் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் குற்றத்திற்கென குற்றநிவாரண காணிக்கையாக மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தினார்கள்.
இம்மேரின் வழித்தோன்றலிலிருந்து அனானி, செபதியா.
ஆரீமின் வழித்தோன்றலிலிருந்து மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா.
பஸ்கூரின் வழித்தோன்றலிலிருந்து எலியோனாய், மாசெயா, இஸ்மயேல், நெதனெயேல், யோசபாத், எலாசா.
லேவியர்களிலிருந்து: யோசபாத், சிமெயி, கெலாயா எனப்பட்ட கெலித்தா, பெத்தகியா, யூதா, எலியேசர்.
பாடகர்களிலிருந்து: எலியாசீப்; ஆலய காவலர்களிலிருந்து: சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களுமாகும்.
மற்ற இஸ்ரயேலருக்குள் இருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள்: பாரோஷின் வழித்தோன்றலிலிருந்து ரமீயா, இசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கியா, பெனாயா.
ஏலாமின் வழித்தோன்றலிலிருந்து மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா.
சத்தூவின் வழித்தோன்றலிலிருந்து எலியோனாய், எலியாசீப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா.
பெபாயின் வழித்தோன்றலிலிருந்து யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி.
பானியின் வழித்தோன்றலிலிருந்து மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், யெரேமோத்.
பாகாத் மோவாபின் வழித்தோன்றலிலிருந்து அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே.
ஆரீமின் வழித்தோன்றலிலிருந்து எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிம்யோன்,
பென்யமீன், மல்லூக், ஷெமரியா.
ஆசூமின் வழித்தோன்றலிலிருந்து மதனாய், மத்தத்தா, சாபாத், எலிபேலேத், எரெமாயி, மனாசே, சிமெயி
பானியின் வழித்தோன்றலிலிருந்து மாதாயி, அம்ராம், ஊயேல்,