உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 வசனங்கள் · 14 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. மீகா 1:10சுமார் கி.மு. 750

    அதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்; கொஞ்சமும் அழவே வேண்டாம். பெத் அப்பிராவிலே புழுதியில் புரளுங்கள்.

  2. மீகா 1:11சுமார் கி.மு. 750

    சாப்பீரில் வாழ்கிறவர்களே, நிர்வாணத்துடனும் வெட்கத்துடனும் கடந்துபோங்கள். சாயனானில் வாழ்கிறவர்கள் வெளியே வரமாட்டார்கள். பெத் ஏசேல் துக்கங்கொண்டாடுகிறது. அதற்குரிய பாதுகாப்பு உன்னிடமிருந்து எடுபட்டுப் போயிற்று.

  3. மீகா 1:12சுமார் கி.மு. 750

    மாரோத்தில் வாழ்கிறவர்கள் வேதனையில் துடித்து, விடுதலைக்காகக் காத்திருக்கின்றனர். ஏனெனில், யெகோவாவிடமிருந்து பேராபத்து வந்திருக்கிறது. அது எருசலேமின் வாசலுக்கும் வந்திருக்கிறது.

  4. மீகா 1:13சுமார் கி.மு. 750

    லாகீசில் வாழ்கிறவர்களே, குதிரைகளை தேரில் பூட்டுங்கள்! நீங்களே சீயோன் மகளுடைய பாவத்தின் ஆரம்பம். ஏனெனில் இஸ்ரயேலின் மீறுதல்கள் உங்களிடத்திலேயும் காணப்பட்டன.

  5. மீகா 1:14சுமார் கி.மு. 750

    ஆதலால் யூதாவின் மக்களே, நீங்கள் மோர்ஷேத் காத்துக்கு பிரியாவிடை சொல்லி அனுப்பிவிடுவீர்கள். அக்சீப் பட்டணம் இஸ்ரயேலின் அரசர்களுக்கு ஏமாற்றமாகும்.

  6. மீகா 1:15சுமார் கி.மு. 750

    மரேஷாவில் வாழ்கிறவர்களே, உங்களுக்கெதிராக வெற்றி வீரனொருவனை யெகோவா கொண்டுவருவார். இஸ்ரயேலின் மேன்மையான தலைவர்கள் அதுல்லாம் குகையில் ஒளிந்துகொள்வார்கள்.

  7. மீகா 1:16சுமார் கி.மு. 750

    நீங்கள் மகிழ்ச்சிகொள்கிற பிள்ளைகளுக்காகத் துக்கங்கொண்டாடி, உங்கள் தலையை மொட்டையடியுங்கள்; அவர்கள் உங்களைவிட்டு நாடு கடத்தப்படப் போவதால், கழுகின் தலையைப்போல் உங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.

  8. மீகா 2:1சுமார் கி.மு. 730

    தங்கள் படுக்கைகளிலிருந்து எழும்புவதற்கு முன்பே தீமையான சூழ்ச்சிசெய்து, அநியாயத்தைத் திட்டமிடுகிறவர்களுக்கு ஐயோ கேடு, அதைச் செய்யத்தக்க பலம் அவர்களில் இருப்பதனால் விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்துகிறார்கள்.

  9. மீகா 2:2சுமார் கி.மு. 730

    வயல்களை ஆசைப்பட்டு, அவற்றைப் பறித்துக்கொள்கிறார்கள். வீடுகளையும் அநீதியாய் எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவனுடைய வீட்டையும், அவனுடைய சொத்தையும் ஏமாற்றிப் பறிக்கிறார்கள்.

  10. மீகா 2:3சுமார் கி.மு. 730

    ஆகையால் யெகோவா சொல்கிறதாவது: “இந்த மக்களுக்கு எதிராக ஒரு பேராபத்தைத் திட்டமிட்டிருக்கிறேன், அதிலிருந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாது. இனிமேல் நீங்கள் பெருமையாய் நடக்கவும் முடியாது. ஏனெனில் அது பேரழிவின் காலமாயிருக்கும்.

  11. மீகா 2:4சுமார் கி.மு. 730

    அந்த நாள் வரும்போது மனிதர் உங்களை இழிவாகப் பேசுவார்கள்; அவர்கள் உங்கள்மீது புலம்பல் பாடுவார்கள். இந்த விதமாய் நீங்கள் பாடுவதுபோல் பாடி கேலி செய்வார்கள்: ‘நாம் முற்றிலும் பாழானோம்; நமது மக்களின் உடைமைகள் பிரித்துக்கொடுக்கப்பட்டன. யெகோவா நம்மிடமிருந்து அதை எடுத்துக்கொள்கிறார்! நம் வயல்வெளிகளையோ அவர் நமது எதிரிகளுக்குக் கொடுக்கிறார்’ ” என்று புலம்புவார்கள்.

  12. மீகா 2:5சுமார் கி.மு. 730

    ஆதலால் நிலத்தைச் சீட்டுப்போட்டு பாகம் பிரித்து யெகோவாவின் சபையில் உள்ளவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது, அதைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களில் ஒருவனும் இருக்கமாட்டான்.

  13. மீகா 2:6சுமார் கி.மு. 730

    மக்களின் தீர்க்கதரிசிகளே, “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள், இவற்றைக் குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள். அவமானம் எங்கள்மேல் வரமாட்டாது” என்று எனக்குச் சொல்கிறீர்கள்.

  14. மீகா 2:7சுமார் கி.மு. 730

    மேலும் நீங்கள், யாக்கோபின் வீட்டாரே, “யெகோவாவின் ஆவியானவர் கோபம் கொண்டுள்ளாரோ? அவர் இப்படியானவற்றைச் செய்கிறவரோ?” “நீதியான வழியில் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மையைச் செய்யாதோ? என்று அவர் சொல்கிறார் அல்லவா” என்றும் சொல்கிறீர்கள்.

  15. மீகா 2:8சுமார் கி.மு. 730

    அதற்கு யெகோவா சொல்கிறதாவது, அண்மைக்காலமாக நீங்கள் என் மக்களுக்கெதிராக ஒரு பகைவனைப் போல் எழும்பியிருக்கிறீர்கள். நீங்கள் போரிலிருந்து திரும்பி வருகிறவர்களைப்போல் நடந்து, கவலையின்றி போகிறவனிடமிருந்து, விலையுயர்ந்த அங்கியை உரிந்து எடுக்கிறீர்கள்.

  16. மீகா 2:9சுமார் கி.மு. 730

    என் மக்களுள் இருக்கும் பெண்களை, அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்த வீடுகளிலிருந்து நீங்கள் துரத்திவிடுகிறீர்கள். அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்தும், என் ஆசீர்வாதங்களை என்றென்றுமாய் எடுத்துப் போடுகிறீர்கள்.

  17. மீகா 2:10சுமார் கி.மு. 730

    எழுந்து போய்விடுங்கள், இது உங்கள் இளைப்பாறுதலின் இடமல்ல, ஏனெனில் இது உங்கள் பாவங்களால் கறைப்பட்டு திருத்த முடியாத அளவு பாழாய்ப் போய்விட்டது.

  18. மீகா 2:11சுமார் கி.மு. 730

    என் மக்களே, பொய்யனும் வஞ்சகனுமான ஒருவன் உங்களிடம் வந்து, “உங்களுக்கு அதிக திராட்சை இரசமும், மதுபானமும் கிடைக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்” என்பானாயின் அவனே உங்களுக்கு ஒரு சரியான தீர்க்கதரிசி.

  19. மீகா 2:12சுமார் கி.மு. 730

    யாக்கோபே, ஒரு நாளில் உங்கள் எல்லோரையும் நிச்சயமாகவே நான் ஒன்றுசேர்ப்பேன், இஸ்ரயேலில் எஞ்சியோரை நிச்சயமாகவே நான் ஒன்றுகூட்டுவேன். நான் தொழுவத்தின் செம்மறியாடுகளைப் போலவும், மேய்ச்சல் நிலத்தின் மந்தைகளைப் போலவும் அவர்களை ஒன்றாய் கொண்டுவருவேன். அந்த இடம் மக்களால் நிறைந்திருக்கும்.

  20. மீகா 2:13சுமார் கி.மு. 730

    அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்துகிறவர் அவர்கள் முன்செல்வார்; அவர்கள் சிறையிருப்பின் வாசலை உடைத்து வெளியேறுவார்கள். அவர்களின் அரசன் அவர்களுக்கு முன்பாகக் கடந்துபோவான்; யெகோவாவே அவர்களை முன்நின்று வழிநடத்திச் செல்வார்.

  21. மீகா 3:1சுமார் கி.மு. 710

    அப்பொழுது நான் சொன்னதாவது: “யாக்கோபின் தலைவர்களே; இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே கேளுங்கள். நீதியை நிலைநாட்டுவது உங்கள் கடமையல்லவா,

  22. மீகா 3:2சுமார் கி.மு. 710

    ஆனால் நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையையே நேசிக்கிறீர்கள். என் மக்களின் தோலையும், அவர்கள் எலும்புகளிலிருந்து சதையையும் கிழித்து எடுக்கிறீர்கள்.

  23. மீகா 3:3சுமார் கி.மு. 710

    என் மக்களின் சதையைச் சாப்பிட்டு, அவர்களின் தோலையெல்லாம் உரித்து, எலும்புகளைத் துண்டுகளாக நொறுக்குகிறீர்கள். சட்டியில் போடும் இறைச்சியைப் போலவும், பானையில் போடும் சதையைப் போலவும் அவர்களை வெட்டுகிறீர்கள்.”

  24. மீகா 3:4சுமார் கி.மு. 710

    ஆனாலும், நாட்கள் வருகின்றன. அப்பொழுது நீங்கள் யெகோவாவிடம் கூக்குரலிடுவீர்கள். ஆனால் அவர் பதிலளிக்கவே மாட்டார். அக்காலத்தில் நீங்கள் செய்த தீமைக்காக அவர் தமது முகத்தை உங்களுக்கு மறைத்துக்கொள்வார்.

  25. மீகா 3:5சுமார் கி.மு. 710

    யெகோவா சொல்வது இதுவே: எனது மக்களைத் தவறான வழியில் நடத்துகிற “பொய்த் தீர்க்கதரிசிகளைக் குறித்துச் சொல்கிறதாவது, ஒருவன் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தால், ‘சமாதானம்’ என்று பிரசித்தப் படுத்துகிறார்கள். அப்படிக் கொடுக்காவிட்டால், அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆயத்தமாகிறார்கள்.