உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 வசனங்கள் · 14 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஏசாயா 10:30சுமார் கி.மு. 713

    காலீம் மகளே, ஓலமிடு! லாயிஷாவே, கேள்! பரிதாபத்திற்குரிய ஆனதோத்தே!

  2. ஏசாயா 10:31சுமார் கி.மு. 713

    மத்மேனாவில் உள்ளவர்கள் தப்பி ஓடுகிறார்கள்; கேபீம் மக்கள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்.

  3. ஏசாயா 10:32சுமார் கி.மு. 713

    இந்த நாளிலே, அவர்கள் நோபிலே தங்குவார்கள்; எருசலேம் மலையிலுள்ள சீயோன் மகளின் மேட்டுக்கு விரோதமாய், கைநீட்டி மிரட்டுவார்கள்.

  4. ஏசாயா 10:33சுமார் கி.மு. 713

    பாருங்கள், யெகோவா, சேனைகளின் யெகோவா, மிக்க வல்லமையோடு பெரிய கிளைகளை வெட்டிவிடுவார். பெரு மரங்கள் வீழ்த்தப்படும், ஓங்கி வளர்ந்த மரங்கள் தாழ்த்தப்படும்.

  5. ஏசாயா 10:34சுமார் கி.மு. 713

    அவர் காட்டுப் புதர்களை கோடரியால் வெட்டி வீழ்த்துவார்; எல்லாம் வல்ல இறைவனின் முன்னே லெபனோன் வீழ்ந்துவிடும்.

  6. ஏசாயா 11:1சுமார் கி.மு. 713

    ஈசாயின் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் வரும்; அவனுடைய வேர்களிலிருந்து வரும் ஒரு கிளை கனிகொடுக்கும்.

  7. ஏசாயா 11:2சுமார் கி.மு. 713

    யெகோவாவின் ஆவியானவர் அவரில் தங்குவார். ஞானத்தையும், விளங்கும் ஆற்றலையும், ஆலோசனையையும், பெலனையும், அறிவையும், யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியானவரே அவரில் தங்குவார்.

  8. ஏசாயா 11:3சுமார் கி.மு. 713

    அவரும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் மகிழ்ச்சிகொள்வார். அவர் தம் கண்களால் காண்பதைக்கொண்டு மட்டும் நியாயந்தீர்க்கமாட்டார்; காதுகள் கேட்பதால் தீர்மானம் எடுக்கவுமாட்டார்.

  9. ஏசாயா 11:4சுமார் கி.மு. 713

    ஆனால் அவர் எளியவர்களை நீதியுடன் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஏழைகளுக்காக நியாயத்துடன் தீர்ப்பளிப்பார். அவர் தன் வார்த்தை என்னும் கோலினால் பூமியை அடிப்பார், தனது உதடுகளின் மூச்சால் கொடியவர்களைக் கொல்வார்.

  10. ஏசாயா 11:5சுமார் கி.மு. 713

    நீதி அவரது அரைக்கச்சையாகவும், உண்மை அவரின் இடைக்கச்சையாகவும் இருக்கும்.

  11. ஏசாயா 11:6சுமார் கி.மு. 713

    ஆட்டுக்குட்டியுடன் ஓநாய் வசிக்கும், சிறுத்தை வெள்ளாட்டுடன் படுத்துக்கிடக்கும். பசுங்கன்றும், சிங்கமும், கொழுத்த காளையும் ஒன்றாய் வாழும்; ஒரு சிறுபிள்ளை அவைகளை வழிநடத்தும்.

  12. ஏசாயா 11:7சுமார் கி.மு. 713

    பசு கரடியுடன் மேயும், அவைகளின் குட்டிகளும் சேர்ந்து படுத்திருக்கும்; மாட்டைப்போல் சிங்கமும் வைக்கோல் தின்னும்.

  13. ஏசாயா 11:8சுமார் கி.மு. 713

    பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்பின் புற்றினருகே விளையாடும்; சிறுபிள்ளை விரியன் பாம்பின் புற்றுக்குள் தன் கையை வைக்கும்.

  14. ஏசாயா 11:9சுமார் கி.மு. 713

    எனது பரிசுத்த மலையெங்கும் தீங்கு செய்பவரோ அழிப்பவரோ எவருமில்லை. ஏனென்றால் கடல் தண்ணீரினால் நிறைந்திருப்பதுபோல, பூமி யெகோவாவைப்பற்றிய அறிவினால் நிறைந்திருக்கும்.

  15. ஏசாயா 11:10சுமார் கி.மு. 713

    அந்த நாளிலே ஈசாயின் வேர் மக்களுக்கு ஒரு கொடியாக நிற்பார்; பிறநாடுகள் அவரிடம் கூடிவரும். அவர் இருக்கும் இடம் மகிமையுள்ளதாயிருக்கும்.

  16. ஏசாயா 11:11சுமார் கி.மு. 713

    அந்த நாளில் யெகோவா அசீரியா, எகிப்து, பத்ரோஸ் எத்தியோப்பியா, ஏலாம், சிநெயார், ஆமாத், தொலைதூர கடற்தீவுகள் ஆகிய இடங்களிலிருந்து தம் மக்களில் மீதமிருப்பவர்களை மீட்க இரண்டாம் முறையும் தமது கரத்தை நீட்டுவார்.

  17. ஏசாயா 11:12சுமார் கி.மு. 713

    அவர் எல்லா தேசத்தாருக்கும் ஒரு கொடியை ஏற்றி, நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ப்பார். சிதறடிக்கப்பட்டிருந்த யூதா மக்களை, பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து ஒன்றுகூட்டுவார்.

  18. ஏசாயா 11:13சுமார் கி.மு. 713

    அப்பொழுது எப்பிராயீமின் பொறாமை ஒழிந்துபோகும், யூதாவின் பகைவர் அகற்றப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமைகொள்ளவோ, யூதா எப்பிராயீமைப் பகைக்கவோ மாட்டாது.

  19. ஏசாயா 11:14சுமார் கி.மு. 713

    அவர்கள் மேற்குத் திசையில் உள்ள பெலிஸ்திய மலைச்சாரலின்மேல் திடீரெனப் பாய்வார்கள்; அவர்கள் ஒன்றிணைந்து கிழக்கிலே இருப்பவர்களையும் சூறையாடுவார்கள். அவர்கள் ஏதோமையும், மோவாபையும் கைப்பற்றுவார்கள்; அம்மோனிய மக்கள் அவர்களுக்கு அடிமைகளாவார்கள்.

  20. ஏசாயா 11:15சுமார் கி.மு. 713

    யெகோவா எகிப்தின் வளைகுடா கடலை முழுவதும் வற்றப்பண்ணுவார்; யூப்ரட்டீஸ் நதியின்மேல் ஒரு வெப்பக் காற்றுடன் தமது கரத்தை வீசி அடிப்பார். மக்கள் உலர்ந்த நிலத்தில் நடக்கக் கூடியதாக அவர் அதை ஏழு நீரோடைகளாகப் பிரிப்பார்.

  21. ஏசாயா 11:16சுமார் கி.மு. 713

    இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வரும்போது, அவர்களுக்குப் பாதை இருந்ததுபோல, அசீரிய நாட்டில் மீதமிருக்கும் அவரது மக்கள் திரும்பி வருவதற்கும், பெரும்பாதை ஒன்று இருக்கும்.

  22. ஏசாயா 12:1சுமார் கி.மு. 712

    அந்த நாளிலே நீ: “யெகோவாவே உம்மைத் துதிப்பேன். என்னில் கோபமாயிருந்தபோதிலும், உமது கோபம் தணிந்து என்னைத் தேற்றியிருக்கிறீர்.

  23. ஏசாயா 12:2சுமார் கி.மு. 712

    நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன். யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்; அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய்.

  24. ஏசாயா 12:3சுமார் கி.மு. 712

    நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய்.

  25. ஏசாயா 12:4சுமார் கி.மு. 712

    அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்; அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள், அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள்.