- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
- யாக்கோபு 1:15சுமார் கி.பி. 60
அப்பொழுது அந்த ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது; பாவம் முழு வளர்ச்சி பெறும்போது, அது மரணத்தை பிறப்பிக்கின்றது.
- யாக்கோபு 1:16சுமார் கி.பி. 60
எனக்கு பிரியமானவர்களே, ஏமாந்து போகவேண்டாம்.
- யாக்கோபு 1:17சுமார் கி.பி. 60
நல்லதும் முழுநிறைவானதுமான நன்கொடை அனைத்தும், பரலோகத்திலிருக்கின்ற பிதாவினிடத்திலிருந்தே வருகின்றன. அவரே பரலோக வெளிச்சத்தின் பிதா, அவர் இடம் மாறும் நிழலைப்போல் மாறுகிறவரல்ல.
- யாக்கோபு 1:18சுமார் கி.பி. 60
பிதா படைத்தவை எல்லாவற்றிலும், நாம் முதற்கனிகளாய் இருக்கும்படி நம்மைத் தமது சித்தத்தின்படி, சத்திய வார்த்தையின் மூலமாக நமக்கு பிறப்பைக் கொடுத்தார்.
- யாக்கோபு 1:19சுமார் கி.பி. 60
பிரியமானவர்களே, நீங்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால்: செவிகொடுத்துக் கேட்பதில் நீங்கள் துரிதமாயும், பேசுவதிலும் கோபிப்பதிலும் தாமதமாயும் இருக்கவேண்டும்.
- யாக்கோபு 1:20சுமார் கி.பி. 60
ஏனெனில், இறைவன் நம்மில் விரும்பும் நீதியான வாழ்வை மனிதனுடைய கோபம் உண்டாக்குவதில்லை.
- யாக்கோபு 1:21சுமார் கி.பி. 60
எனவே, பரவியிருக்கின்ற எல்லா ஒழுக்கக்கேட்டையும் தீமையையும் உங்களைவிட்டு அகற்றுங்கள். நீங்களோ, உங்களுக்குள் நாட்டப்பட்டிருக்கும் வார்த்தையைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த வார்த்தையே உங்களை இரட்சிக்கும் வல்லமையுடையது.
- யாக்கோபு 1:22சுமார் கி.பி. 60
வார்த்தையை கேட்கிறவர்களாய் மட்டுமில்லாமல், அதன்படி செய்யுங்கள். இல்லையெனில், நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள்வீர்கள்.
- யாக்கோபு 1:23சுமார் கி.பி. 60
வார்த்தையைக் கேட்டும் அதன்படி நடக்காதவன், தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்தும்,
- யாக்கோபு 1:24சுமார் கி.பி. 60
தன்னில் இருந்த குறையை உடனே மறந்துபோகிற மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான்.
- யாக்கோபு 1:25சுமார் கி.பி. 60
ஆனால் நமக்கு விடுதலை கொடுக்கும் இந்த முழுநிறைவான சட்டத்தைக் கூர்ந்துகவனிக்கும் மனிதன், தான் கேட்டதை மறந்துவிடாமல், அதை கைக்கொண்டு தொடர்ந்து நடக்கவேண்டும். அப்படி நடந்தால், அவன் தன் செய்கையில் ஆசீர்வதிக்கப்படுவான்.
- யாக்கோபு 1:26சுமார் கி.பி. 60
யாராவது தங்களை பக்தியுள்ளவர்கள் என்று எண்ணினாலும், அவர்கள் தங்களுடைய நாவை அடக்காவிட்டால், தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுடைய பக்தியும் பயனற்றதே.
- யாக்கோபு 1:27சுமார் கி.பி. 60
கஷ்டப்படும் அநாதைகளையும் விதவைகளையும் பராமரிக்கிறதும், உலகத்தால் கறைபடாது தங்களைக் காத்துக்கொள்வதுமே, நம்முடைய பிதாவாகிய இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிற தூய்மையான, மாசற்ற பக்தியாயிருக்கிறது.
- யாக்கோபு 2:1சுமார் கி.பி. 60
பிரியமானவர்களே, நமது மகிமையுள்ள கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறவர்களாகிய நீங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது.
- யாக்கோபு 2:2சுமார் கி.பி. 60
உங்களுடைய திருச்சபை கூடும்போது, ஒருவன் தங்கமோதிரத்தையும், பளபளப்பான உடைகளையும் அணிந்துகொண்டு வந்திருக்கிறான் என்றும், இன்னொரு ஏழை கந்தையான உடை அணிந்து அங்கு வந்திருக்கிறான் என்றும் வைத்துக்கொள்வோம்.
- யாக்கோபு 2:3சுமார் கி.பி. 60
நீங்கள் பளபளப்பான உடை அணிந்துவந்த அந்த மனிதனைப் பார்த்து, “இங்குள்ள நல்ல இருக்கையில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று, அவனுக்கு விசேஷ கவனிப்பைக் கொடுத்து, அந்த ஏழையைப் பார்த்தோ, “நீ அங்கே நில்” அல்லது, “எனது காலடியில், தரையில் உட்கார்ந்துகொள்” என்றும் சொன்னால்,
- யாக்கோபு 2:4சுமார் கி.பி. 60
நீங்கள் உங்களுக்குள்ளே வேறுபாடு காண்பிக்கிறீர்கள் அல்லவா? இதனால் நீங்கள் அவர்களைத் தீய எண்ணத்துடன் மதிப்பிடுகிறீர்களே!
- யாக்கோபு 2:5சுமார் கி.பி. 60
எனக்கு பிரியமானவர்களே, கேளுங்கள்: உலகத்தாரின் பார்வையில் ஏழைகளாய்க் காணப்பட்டவர்களை, விசுவாசத்தில் செல்வந்தர்களாய் இருக்கும்படி, இறைவன் தெரிந்துகொள்ளவில்லையா? அவர்கள் இறைவனில் அன்பாயிருக்கிறவர்களுக்கு வாக்குப்பண்ணிய அரசை உரிமைச்சொத்தாகக் கொடுக்கும்படியும், ஏழைகளையே தெரிந்துகொண்டாரே.
- யாக்கோபு 2:6சுமார் கி.பி. 60
ஆனால் நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்கள் அல்லவா உங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள்? அவர்கள் அல்லவா உங்களை நீதிமன்றத்துக்கு இழுத்துச்செல்கிறார்கள்?
- யாக்கோபு 2:7சுமார் கி.பி. 60
உங்களை உரிமையாகக் கொண்டிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய சிறப்பான பெயருக்கு அவர்கள் அல்லவா அவமதிப்பைக் கொண்டுவருகிறார்கள்.
- யாக்கோபு 2:8சுமார் கி.பி. 60
“உன்னில் அன்பாயிருப்பதுபோல், உன் அயலவனிலும் அன்பாயிரு” என்று வேதவசனத்தில் கூறப்பட்டிருக்கின்ற, இந்த அரச சட்டத்தை நீங்கள் உண்மையாகக் கைக்கொள்வீர்களானால், நீங்கள் நல்லதைச் செய்கிறவர்களாய் இருப்பீர்கள்.
- யாக்கோபு 2:9சுமார் கி.பி. 60
ஆனால் நீங்கள் பாரபட்சம் காட்டுவீர்களானால், நீங்கள் பாவம் செய்கிறீர்கள்; சட்டத்தை மீறியவர்கள் என்று மோசேயின் சட்டத்தினால் குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படுவீர்கள்.
- யாக்கோபு 2:10சுமார் கி.பி. 60
ஏனெனில், யாராவது ஒருவன் மோசேயின் சட்டத்தை முழுவதும் கைக்கொண்டு, ஒன்றில் மட்டும் தவறினால், அவன் முழு சட்டத்தையும் மீறிய குற்றவாளியாகிறான்.
- யாக்கோபு 2:11சுமார் கி.பி. 60
“விபசாரம் செய்யாதே” என்று சொன்னவர், “கொலை செய்யாதே” என்றும் சொல்லியிருக்கிறார். எனவே நீ விபசாரம் செய்யாவிட்டாலும், கொலை செய்தால், நீ மோசேயின் சட்டத்தை மீறியவனாகின்றாய்.
- யாக்கோபு 2:12சுமார் கி.பி. 60
விடுதலை அளிக்கும் சட்டத்தின் அடிப்படையிலேயே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படப் போகிறபடியால் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.