உள்ளடக்கத்திற்குச் செல்க

Zion

139 verses · 2 known names

இவ்வாறும் அறியப்படுகிறார்: Sion

31.7700, 35.2300 கூகுள் வரைபடத்தில் காண்க

Zion பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; “நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”

  2. சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

  3. யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; உன் வாழ்நாட்களெல்லாம் எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.

  4. சீயோனை வெறுக்கிற அனைவரும் வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.

  5. யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்:

  6. எர்மோன் மலையின் பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது; ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்; வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார்.

  7. வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

  8. எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும். யெகோவாவைத் துதியுங்கள்.

  9. பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, சீயோனை நினைத்தபோது அழுதோம்.

  10. ஏனெனில் எங்களைச் சிறைப்பிடித்தவர்கள், அங்கே எங்களைப் பாடும்படி கேட்டார்கள்; எங்களைச் சித்திரவதை செய்தவர்கள் மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தி, “சீயோனின் பாடல்களுள் ஒன்றை எங்களுக்காகப் பாடுங்கள்” என்று சொன்னார்கள்.

  11. யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். யெகோவாவைத் துதி.

  12. எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; சீயோனே உன் இறைவனைத் துதி.

  13. இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும்.

  14. சீயோனின் மகள்களே, வெளியே வாருங்கள். சாலொமோன் அரசன் மகுடம் அணிந்திருப்பதைப் பாருங்கள், அவருடைய உள்ளம் மகிழ்ச்சியுற்ற நாளான அவருடைய திருமண நாளிலேயே அந்த மகுடத்தை அவருடைய தாயார் அவருக்குச் சூட்டினாள்.

  15. சீயோனின் மகள் திராட்சைத் தோட்டத்திலுள்ள கொட்டில் போலவும், வெள்ளரித் தோட்டத்தின் குடில்போலவும், முற்றுகையிட்ட பட்டணம் போலவும் தனித்து விடப்பட்டிருக்கிறாள்.

  16. சீயோன் நியாயத்தினாலும், அங்கு மனந்திரும்புவோர் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.

  17. அநேக மக்கள் கூட்டங்கள் வந்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம், யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம். நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள். சீயோனிலிருந்து அவரது சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும்.

  18. மேலும் யெகோவா சொன்னதாவது: “சீயோனின் பெண்களோ கர்வம் கொண்டிருக்கிறார்கள்; தங்கள் கழுத்தை வளைக்காது அகங்காரமாய் நடக்கிறார்கள், அவர்கள் தங்கள் கண்களினால் மருட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்க ஒய்யாரமாய் நடந்து திரிகிறார்கள்.

  19. ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்; அவர்களின் தலைகளை யெகோவா வழுக்கையாக்குவார்.”

  20. அப்பொழுது சீயோனில் விடப்பட்டவர்களாய், எருசலேம் நகரில் மீந்திருப்பவர்கள், பரிசுத்தர்கள் என அழைக்கப்படுவார்கள்; வாழ்வதற்கென்று எருசலேமில் பேரெழுதப்பட்ட எல்லோரும் அப்படியே அழைக்கப்படுவார்கள்.

  21. யெகோவா சீயோனின் பெண்களுடைய அசுத்தத்தைக் கழுவி, அவர் எருசலேமிலிருந்து அதன் இரத்தக் கறைகளை நியாயத்தின் ஆவியாலும், நெருப்புத் தணலையொத்த ஆவியாலும் சுத்திகரிப்பார்.

  22. ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சீயோனில் வாழும் என் மக்களே, எகிப்தியர் செய்ததுபோல, உங்களைப் பிரம்பால் அடித்து, தண்டாயுதத்தை உயர்த்துகிற அசீரியருக்குப் பயப்படவேண்டாம்.

  23. இந்த நாளிலே, அவர்கள் நோபிலே தங்குவார்கள்; எருசலேம் மலையிலுள்ள சீயோன் மகளின் மேட்டுக்கு விரோதமாய், கைநீட்டி மிரட்டுவார்கள்.

  24. சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர் மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”

  25. அந்த நாட்டின் தூதுவருக்கு என்ன பதில் சொல்லலாம்? “யெகோவா சீயோனை நிலைநாட்டியிருக்கிறார். துன்புறுத்தப்பட்ட அவரது மக்கள் அங்கு அடைக்கலம் புகுவார்கள்.”