உள்ளடக்கத்திற்குச் செல்க

The First Temple பற்றிய பைபிள் வசனங்கள்: Repaired by Jehoash at the institution of Jehoiada

21 வசனங்கள் · 72 அம்சங்கள்

Repaired by Jehoash at the institution of Jehoiada பற்றிய வசனங்கள்

  1. யோவாஸ் ஆசாரியர்களைப் பார்த்து, “குடிமதிப்பின்போது வசூலிக்கப்படும் பணம், தனிப்பட்டோரின் நேர்த்திக்கடன்கள் மூலம் பெறப்படும் பணம், ஆலயத்துக்கு மக்கள் சுயவிருப்பமாகக் கொடுக்கும் பணம் ஆகியவை யெகோவாவினுடைய ஆலயத்துக்கு பரிசுத்த காணிக்கையாகக் கொண்டுவரப்படும். அவற்றையெல்லாம் சேர்த்தெடுங்கள்.

  2. ஒவ்வொரு ஆசாரியனும் பொருளாளர்கள் ஒருவனிடமிருந்து அப்பணத்தைப் பெற்று ஆலயத்தில் என்ன பழுதுகள் காணப்படுகின்றனவோ அவற்றைத் திருத்துவதற்காக அப்பணத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறினான்.

  3. ஆனால் யோவாஸ் அரசேற்று இருபத்தி மூன்று வருடங்களாகியும் ஆலயத்தில் எவ்வித திருத்த வேலைகளும் ஆசாரியர்களால் செய்யப்படவில்லை.

  4. ஆகவே யோவாஸ் அரசன் ஆசாரியனான யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் வரும்படி அழைத்து அவர்களிடம், “ஆலயத்தை ஏன் பழுதுபார்க்கவில்லை?” என்று கேட்டான். பின்பு அவன், “இனிமேல் உங்கள் பொருளாளர்களிடமிருந்து பணம் வாங்கவேண்டாம். ஆலயத்தைத் திருத்துவதற்காக அந்தப் பணத்தைக் கொடுத்துவிடுங்கள்” என்றான்.

  5. ஆசாரியர்கள் தாம் இனிமேல் மக்களிடமிருந்து பணத்தைச் சேர்ப்பதில்லை என்றும், ஆலயத்தைப் பழுது பார்ப்பதில்லை என்றும் ஒத்துக்கொண்டனர்.

  6. ஆசாரியனான யோய்தா ஒரு பெட்டியை எடுத்து அதன் மூடியில் ஒரு துவாரமிட்டு, அதை யெகோவாவின் ஆலயத்துக்கு மக்கள் வரும் வாசலில் வலதுபக்கத்தில் பலிபீடத்துக்கு அருகே வைத்தான். யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட எல்லாப் பணத்தையும், ஆலய வாசலைப் பாதுகாத்த ஆசாரியர்கள் அந்தப் பெட்டிக்குள் போட்டனர்.

  7. அந்தப் பெட்டியில் பெருந்தொகை பணம் இருப்பதைக் கண்டபோதெல்லாம், அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனாகவும் வந்து யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை எண்ணிப் பைகளில் போட்டார்கள்.

  8. இந்தத் தொகை எண்ணி முடிந்ததும் ஆலயப் பணிசெய்ய நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதை யெகோவாவின் ஆலய வேலைசெய்யும் தச்சுவேலை செய்வோருக்கும், கட்டிடவேலை செய்வோருக்கும்,

  9. கொல்லருக்கும், கல் வெட்டுவோருக்கும் கொடுத்தார்கள். பின் அவர்கள் யெகோவாவின் ஆலயத்தை திருத்துவதற்கான மரங்களையும் செதுக்கப்பட்ட கற்களையும் வாங்கியதோடு, ஆலயத்தைத் திருத்தியமைப்பதற்கு வேண்டிய மற்ற செலவுகளுக்கும் அதைப் பயன்படுத்தினர்.

  10. இப்பணம், வெள்ளிப் பாத்திரங்கள், திரிவெட்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள், எக்காளங்கள் ஆகியவற்றை செய்வதற்கோ அல்லது யெகோவாவின் ஆலயத்திற்குத் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் வேறேதும் பொருட்கள் செய்வதற்கோ செலவழிக்கப்படவில்லை.

  11. இப்பணம் யெகோவாவினுடைய ஆலயத்தின் திருத்த வேலைகளைச் செய்த வேலையாட்களுக்கே கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை ஆலயத்தின் திருத்த வேலைகளுக்கே உபயோகித்தனர்.

  12. சிறிது காலத்தின்பின் யோவாஸ் யெகோவாவின் ஆலயத்தைப் புதுப்பிக்கத் தீர்மானித்தான்.

  13. அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒன்றாக அழைத்து அவர்களிடம், “யூதாவின் பட்டணங்களுக்குப் போய் உங்கள் இறைவனின் ஆலயத்தைத் திருத்துவதற்கு இஸ்ரயேலரிடமிருந்து வருடாவருடம் கொடுக்கப்படவேண்டிய பணத்தைச் சேகரியுங்கள். அதை இப்பொழுதே செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்களோ உடனே செயல்படவில்லை.

  14. ஆகவே அரசன் பிரதான ஆசாரியன் யோய்தாவை அழைப்பித்து அவனிடம், “யெகோவாவின் அடியவன் மோசேயினாலும், இஸ்ரயேல் சபையாலும் சாட்சிக் கூடாரத்திற்கென நியமிக்கப்பட்ட வரியை யூதாவிடத்திலும் எருசலேமிடத்திலும் இருந்து வாங்கிவரும்படி, நீர் ஏன் லேவியர்களை விசாரிக்கவில்லை?” என்று கேட்டான்.

  15. அந்த கொடியவளான அத்தாலியாளின் மகன்கள் இறைவனின் ஆலயத்தை உடைத்து, யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் இருந்த பரிசுத்த பொருட்களைக்கூட பாகாலுக்குப் கொடுத்திருந்தார்கள்.

  16. எனவே அரசனின் கட்டளைப்படி பெரிய பெட்டியொன்றைச் செய்து யெகோவாவின் ஆலய வாசலில் வெளியே வைத்தார்கள்.

  17. பாலைவனத்தில் இறைவனின் அடியவனாகிய மோசே இஸ்ரயேலரிடம் கேட்டுக்கொண்டபடி யெகோவாவுக்கென வரி கொண்டுவரப்பட வேண்டுமென்ற ஒரு அறிவித்தல் யூதாவிலும், எருசலேமிலும் பிரசித்தப்படுத்தப்பட்டது.

  18. எல்லா அதிகாரிகளும், எல்லா மக்களும் தங்கள் கொடைகளை மகிழ்ச்சியுடன் கொண்டுவந்து அந்தப் பெட்டி நிரம்பும்வரை அதற்குள் போட்டார்கள்.

  19. அந்தப் பெட்டி லேவியர்களால் அரசனின் அதிகாரிகளிடம் உள்ளே கொண்டுவரப்படும் போதெல்லாம், அதிலே அதிக அளவான பணம் இருப்பதை அவர்கள் கண்டார்கள். அரச செயலாளரும் பிரதான ஆசாரியனின் அதிகாரியும் வந்து பெட்டியிலுள்ளவற்றை எடுத்துவிட்டு, அதைத் திரும்பவும் அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைப்பார்கள். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து செய்து பெருந்தொகைப் பணத்தைச் சேகரித்தார்கள்.

  20. அரசனும், யோய்தாவும் அப்பணத்தை யெகோவாவின் ஆலயத்திற்கு வேண்டிய வேலைசெய்யும் மனிதர்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தை புதுப்பித்துக் கட்டுவதற்கென சிற்பிகளையும், தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினார்கள். அத்துடன் ஆலயத்தைத் திருத்துவதற்கான இரும்பு வேலை, வெண்கல வேலை பார்ப்போரையும்கூட கூலிக்கு அமர்த்தினார்கள்.

  21. வேலைக்குப் பொறுப்பாய் இருந்த மனிதர் கடும் உழைப்பாளிகளாய் இருந்தார்கள். அவர்களின் மேற்பார்வையில் திருத்த வேலைகள் தொடர்ந்து நடைபெற்றன. அவர்கள் இறைவனின் ஆலயத்தை அதன் முந்திய வரைபடத்தின்படி திரும்பவும் கட்டி வலுவுள்ளதாய் அமைத்தார்கள்.