Skip to content

Sickness பற்றிய பைபிள் வசனங்கள்

120 வசனங்கள் · 47 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அப்பொழுது அவர்களுடைய உள்ளம் உணவையும், சுவையான உணவையும் வெறுக்கிறது.

  2. அவர்களுடைய சதை முழுவதும் அழிந்து, முன்பு மறைந்திருந்த எலும்புகள் வெளியே தெரிகின்றன.

  3. அவர்களுடைய ஆத்துமா பிரேதக் குழியையும், அவர்களுடைய உயிர் மரண தூதுவர்களையும் நெருங்குகிறது.

  4. ஆனாலும் ஆயிரத்தில் ஒருவனான தூதன் ஒருவன் அவர்கள் பக்கத்திலிருந்து, அவர்களுக்காகப் பரிந்துபேசி, அவர்களுக்கு சரியானவற்றைச் சொல்லிக்கொடுத்து,

  5. அவர்களுக்குக் கிருபைகாட்டி, ‘நான் அவர்களுக்கு மீட்கும் பொருளைக் கண்டுபிடித்தேன். ஆகவே இவர்களைக் குழிக்குள் போவதிலிருந்து தப்பவிடும்’ என்று சொல்வானாகில்,

  6. என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நீர் என்னை சுகமாக்கினீர்.

  7. பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

  8. உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைத் தப்புவிக்க விரைவாய் வாரும்; என் புகலிடமான கன்மலையாகவும், என்னைக் காப்பாற்றும் பலமான கோட்டையாகவும் இரும்.

  9. நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால், உமது பெயரின் நிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை வழிநடத்தும்.

  10. நீரே என் புகலிடம், ஆகையால் எனக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணியிலிருந்து என்னை விடுவியும்.

  11. உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்; யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும்.

  12. இறைவனல்லாதவைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்; நான் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறேன்.

  13. நான் உமது அன்பில் மகிழ்ந்து களிகூருவேன்; ஏனெனில், நீர் என் வேதனையைக் கண்டு, என் ஆத்தும துயரத்தை அறிந்திருக்கிறீர்.

  14. நீர் என்னை என் பகைவனிடத்தில் ஒப்புக்கொடாமல், விசாலமான இடத்தில் என் பாதங்களை நிறுத்தினீர்.

  15. ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ, நான் துக்கவுடை உடுத்தி உபவாசத்துடன் என்னைத் தாழ்த்தினேன். எனது மன்றாட்டுகள் பதிலளிக்கப்படாமல் என்னிடமே திரும்பிவந்தபோது,

  16. அவர்களுடைய வியாதிப்படுக்கையில் யெகோவா அவர்களைத் தாங்குவார்; படுக்கையில் வியாதியாய் இருக்கும் அவர்களுக்குச் சுகத்தைக் கொடுப்பார்.

  17. நிச்சயமாகவே அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும், கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார்.

  18. யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்; அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்; அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும்.

  19. நீ இரவின் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய்.

  20. இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய்.

  21. உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும், அது உன்னை நெருங்காது.

  22. தாவீதின் சங்கீதம். என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைத் துதி.

  23. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; அவர் செய்த நன்மைகள் யாவற்றையும் மறவாதே.

  24. அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்; உன்னுடைய நோய்களையெல்லாம் சுகமாக்குகிறார்.

  25. சிலர் தங்களுடைய கலக வழிகளின் காரணமாக மூடராகி, தங்கள் அநியாயத்தினிமித்தம் உபத்திரவத்தை அனுபவித்தார்கள்.