உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆனால் யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் செய்த உடன்படிக்கைக்காக அவர்கள்மேல் கிருபையாயிருந்து அவர்களில் இரக்கமும், கரிசனையும் காட்டினார். இன்றுவரை அவர் தமது முன்னிலையிலிருந்து அவர்களை அழிக்கவோ, அகற்றவோ விருப்பமற்றவராகவே இருக்கிறார்.

  2. அமத்சியா யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான். ஆனாலும், தன் தந்தையான தாவீதைப்போல் செய்யவில்லை. எல்லாவற்றிலும் தன் தகப்பனான யோவாஸின் முன்மாதிரியையே பின்பற்றினான்.

  3. ஆனாலும் யெகோவாவின் கட்டளைப்படி மோசேயின் சட்ட புத்தகத்தில் எழுதியிருந்ததற்கு ஏற்றவாறு கொலைசெய்தவர்களின் மகன்களை அவன் கொல்லவில்லை. மோசேயின் சட்ட புத்தகத்தில், “பிள்ளைகளுடைய பாவங்களுக்காக பெற்றோரோ, பெற்றோரின் பாவங்களுக்காக பிள்ளைகளோ கொல்லப்படக்கூடாது. ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாவங்களுக்காகவே கொல்லப்படவேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

  4. அரச அரண்மனையின் திரவியக் களஞ்சியத்திலிருந்த யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்றும் எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பினான்.

  5. இவன் யெகோவாவின் பார்வையில் தீமைசெய்தான். இஸ்ரயேலைப் பாவத்துக்குள்ளாக்கிய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களில் ஒன்றையாகிலும் விட்டுத் திரும்பவில்லை.

  6. இவனே இஸ்ரயேலின் எல்லைகளை ஆமாத்தின் எல்லையிலிருந்து அராபாக் கடல் வரைக்கும் திரும்பப் பெற்றுக் கொடுத்தான். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தம்முடைய அடியவனாகிய இறைவாக்கினன் யோனாவைக் கொண்டு பேசியபடியே இது நடந்தது. இந்த இறைவாக்கினன் யோனா காத் ஏபேரைச் சேர்ந்த அமித்தாயின் மகன்.

  7. அடிமையானாலும், சுதந்திரவாளியானாலும் இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு கசப்பான துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு உதவியளிக்க எவருமே இல்லை என்பதையும் யெகோவா கண்டார்.

  8. இஸ்ரயேலின் பெயரை வானத்தின் கீழே முழுவதும் நீக்கிவிடுவதாக யெகோவா சொல்லாதபடியால், யோவாஸின் மகன் யெரொபெயாமின் மூலம் அவர்களைக் காப்பாற்றினார்.

  9. அவன் தனது தகப்பன் அமத்சியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான்.

  10. யெகோவா அரசனை அவன் இறக்கும்வரையும் குஷ்டவியாதியினால் வாதித்தார். குஷ்டவியாதிக்காரனான இவன் ஒரு புறம்பான வீட்டில் இருந்தான். அரசனின் மகன் யோதாம் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்து நாட்டின் மக்களை ஆட்சிசெய்தான்.

  11. இவன் தன் தந்தையர் செய்ததுபோல யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்துக்குள் வழிநடத்திய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு இவன் விலகவேயில்லை.

  12. “உன் சந்ததிகள் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ரயேலின் அரியணையில் ஆளுவார்கள்” என்று யெகூவுக்கு யெகோவா கூறிய வார்த்தை இவ்வாறு நிறைவேறிற்று.

  13. இவன் யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு இவன் தனது ஆட்சிக்காலம் முழுவதிலும் விலகவில்லை.

  14. இவனும் யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு இவன் விலகவில்லை.

  15. இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.

  16. அவன் தன் தகப்பன் உசியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான்.

  17. ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர். யோதாம் யெகோவாவின் ஆலயத்தின் மேல்வாசலைத் திரும்பக் கட்டினான்.

  18. அந்நாட்களில் யெகோவா சீரிய அரசன் ரேத்சீனையும், ரெமலியாவின் மகன் பெக்கா வையும் யூதாவுக்கு எதிராக அனுப்பத் தொடங்கினார்.

  19. ஆகாஸ் அரசனானபோது இருபது வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான். தன் முற்பிதாவான தாவீதைப்போல் அவன் தனது இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்யவில்லை.

  20. அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழிகளில் நடந்தான். இவன் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திவிட்ட நாடுகளின் அருவருப்பான வழிகளைப் பின்பற்றி, தனது மகனையும் நெருப்பிலே பலியிட்டான்.

  21. அத்துடன் ஆகாஸ் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனைத் திரவிய அறையிலும் இருந்த வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றை அசீரிய அரசனுக்கு ஒரு அன்பளிப்பாக அனுப்பினான்.

  22. யெகோவாவுக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம், புதிய பலிபீடத்துக்கும் யெகோவாவின் ஆலயத்துக்கும் நடுவில் இருந்தது. அதை ஆலயத்தின் முன் பக்கத்திலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, புதிய பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்தான்.

  23. அசீரிய அரசனை திருப்திப்படுத்துவதற்காக, ஆலய வாசலில் கட்டப்பட்டிருந்த ஓய்வுநாள் பயன்பாட்டிற்குரிய கூடாரத்தையும் எடுத்துவிட்டு, யெகோவாவின் ஆலயத்துக்கு வெளியே அமைந்திருந்த அரசர் உட்செல்லும் வாசலையும் அகற்றிவிட்டான்.

  24. யெகோவாவின் பார்வையில் தீமையானதையே இவனும் செய்தான். ஆனால் இஸ்ரயேலின் முந்தைய அரசர்கள் செய்ததுபோல செய்யவில்லை.

  25. இஸ்ரயேலர் எகிப்திய அரசனான பார்வோனின் அதிகாரத்திலிருந்து தங்களை விடுதலையாக்கிக் கொண்டுவந்த தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியாலேயே, அவர்களுக்கு இவையெல்லாம் ஏற்பட்டது. அவர்கள் வேறு தெய்வங்களையும் வணங்கி,