- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
Tribe Of Benjamin பற்றிய பைபிள் வசனங்கள்
முக்கிய பைபிள் வசனங்கள்
ரெக்கேம், இர்பெயேல், தாராலா,
சேலா, ஏலேப், எபூசியப் பட்டணம் அதாவது எருசலேம், கிபியா, கீரியாத் ஆகிய பதினான்கு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். இவையே பென்யமீன் கோத்திர வம்சங்களுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துரிமை.
இஸ்ரயேல் கோத்திரத்தார் தங்கள் மனிதர் சிலரை பென்யமீன் கோத்திரத்திடம் அனுப்பி, “உங்கள் மத்தியில் நடந்த இந்தக் கொடுமையான குற்றத்தைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
கிபியாவிலிருக்கும் கொடுமையான இந்தச் செயலைச் செய்த எல்லா மனிதர்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களைக் கொலைசெய்து இஸ்ரயேலிலிருந்து இந்தத் தீமையை நீக்குவோம்” எனச் சொல்லும்படி சொன்னார்கள். ஆனால் பென்யமீனியர் தங்கள் சகோதர இஸ்ரயேலருக்குச் செவிகொடுக்கவில்லை.
மாறாக அவர்கள் தங்கள் பட்டணத்திலிருந்து ஒன்றுசேர்ந்து இஸ்ரயேல் மக்களுடன் சண்டையிடுவதற்கு கிபியாவிற்கு வந்து கூடினர்.
உடனே பென்யமீனியர் தங்கள் எல்லாப் பட்டணங்களிலிருந்தும் யுத்தத்திற்கு ஆயத்தமாக இருபத்தாறாயிரம் வாள் வீரர்களைத் திரட்டினர். அத்துடன் கிபியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு வீரர்களையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள்.
கிபியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு வீரர்களும் இடதுகை பழக்க முடையவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் மயிரிழையும் தப்பாமல் கவண் கல் வீசக்கூடியவர்கள்.
அன்றையதினம் பென்யமீனியர் அல்லாத, மற்ற இஸ்ரயேலர், தங்களுக்குள் சண்டையிடக்கூடிய வாள் வீரர்கள் நானூறாயிரம் பேரைத் திரட்டினர்.
அப்பொழுது இஸ்ரயேலர் பெத்தேலுக்குப் போய் இறைவனிடம் விசாரித்தனர். “பென்யமீன் மக்களுடன் போர்புரிய எங்களில் யார் முதலில் போகவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு யெகோவா, “யூதா முதலில் போகட்டும்” எனப் பதிலளித்தார்.
மறுநாள் காலை இஸ்ரயேலர் எழுந்து கிபியாத்திற்கு அருகே முகாமிட்டார்கள்.
இஸ்ரயேலர் பென்யமீனியருடன் எதிர்த்துப் போரிடுவதற்கு கிபியாவிலே நிலைகொண்டார்கள்.
அன்று கிபியாவிலிருந்து வெளியேவந்த பென்யமீனியர், முனையில் நின்ற இருபத்து இரண்டாயிரம் இஸ்ரயேலரை வெட்டி வீழ்த்தினர்.
ஆனால் இஸ்ரயேல் மக்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு முதல்நாள் போருக்கு நின்ற இடத்திலேயே திரும்பவும் நின்றனர்.
அன்று இஸ்ரயேலர் யெகோவாவுக்கு முன்பாக சாயங்காலம்வரை அழுது, “எங்கள் சகோதரர்களான பென்யமீனியருக்கு எதிராக போருக்கு நாங்கள் போகலாமா?” எனக் கேட்டனர். அதற்கு யெகோவா, “அவர்களை எதிர்த்துப் போங்கள்” எனப் பதிலளித்தார்.
எனவே இரண்டாவது நாள் இஸ்ரயேலர் பென்யமீனியரை எதிர்த்து நெருங்கிச் சென்றனர்.
இம்முறையும் பென்யமீனியர் கிபியாத்திலிருந்து அவர்களை எதிர்த்து வந்து, பதினெட்டாயிரம் இஸ்ரயேல் வீரர்களை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் எல்லோரும் வாள் ஏந்தியவர்கள்.
அப்பொழுது இஸ்ரயேல் மனிதரும் எல்லா மக்களும் பெத்தேலில் ஒன்றுகூடி யெகோவாவிடம் அழுது கொண்டேயிருந்தார்கள். அன்று சாயங்காலம்வரை அவர்கள் உபவாசித்து, தகனபலியையும், சமாதான பலியையும் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தினார்கள்.
பின்பு இஸ்ரயேலர் யெகோவாவிடம் ஆலோசனை கேட்டார்கள். அந்நாட்களில் இறைவனின் உடன்படிக்கைப்பெட்டி அங்கே இருந்தது.
ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமான பினெகாஸ் ஆசாரியனாக பணியாற்றி வந்தான். அப்பொழுது அவர்கள், “நாங்கள் எங்கள் சகோதரர் பென்யமீனியருடன் திரும்பவும் போருக்குப் போகலாமா, வேண்டாமா?” எனக் கேட்டார்கள். அதற்கு யெகோவா, “போங்கள்; நான் அவர்களை நாளைக்கு உங்கள் கையில் ஒப்படைப்பேன்” என உறுதியளித்தார்.
அப்பொழுது இஸ்ரயேலர் கிபியாவைச் சுற்றிலும் பதுங்கியிருந்து தாக்கும், வீரர்களை அனுப்பினார்கள்.
மூன்றாவது நாளும் இஸ்ரயேலர் பென்யமீனியரை எதிர்த்துப் போய், முன்பு செய்ததுபோல் கிபியாவுக்கெதிராகத் தங்கள் இடங்களில் நிலைகொண்டார்கள்.
பென்யமீனியர் அவர்களை எதிர்கொள்ள தங்கள் பட்டணத்தைவிட்டு வெளியே வந்தனர். அவர்கள் பட்டணத்திற்கும் அப்பாலே போய் இஸ்ரயேலரைத் தாக்கி முன்புபோலவே அவர்களைக் கொன்றார்கள். இதனால் கிட்டத்தட்ட முப்பது மனிதர்கள் வயல்வெளிகளிலும், பெத்தேலுக்கும், கிபியாவுக்கும் போகும் பாதையிலும் விழுந்தனர்.
“நாம் முன்புபோலவே அவர்களைத் தோற்கடித்து ஓடச்செய்கிறோம்” என பென்யமீனியர் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது இஸ்ரயேலரோ, “அவர்களின் பட்டணத்தைவிட்டு வெளியே பாதைக்கு ஓடிவரப்பண்ண நாம் இன்னும் பின்வாங்கி ஓடுவோம்” என்றார்கள்.
அவ்வாறு எல்லா இஸ்ரயேலரும் தங்களது இடங்களிலிருந்து போய், பாகால் தாமாரில் திரும்பவும் நிலைகொண்டார்கள். உடனே இஸ்ரயேலின் பதுங்கியிருந்து தாக்கும் வீரர்கள் கிபியாவின் மேற்கு பகுதியிலுள்ள இடத்திலிருந்து திடீரென வெளியேறி தாக்கினார்கள்.
இஸ்ரயேலின் மிகத் திறமையான பத்தாயிரம் வீரர்கள் கிபியாவின்மேல் நேரடித்தாக்குதல் செய்தனர். சண்டையோ மிகவும் கடுமையாக இருந்ததால் தங்களுக்குப் பேராபத்து நெருங்கியிருப்பதை பென்யமீனியர் அறியாதிருந்தார்கள்.