Skip to content

Ishbosheth

11 வசனங்கள் · 8 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Ish-bosheth

Ishbosheth பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அவ்வேளையில் சவுலின் படைத்தளபதி நேரின் மகன் அப்னேர், சவுலின் மகன் இஸ்போசேத்தைக் கூட்டிக்கொண்டு மக்னாயீமுக்குப் போனான்.

  2. சவுலின் மகன் இஸ்போசேத் இஸ்ரயேலுக்கு அரசனானபோது அவனுக்கு நாற்பது வயது; அவன் இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான். ஆயினும் யூதா குடும்பத்தார் தாவீதைப் பின்பற்றினார்கள்.

  3. பின்பு நேரின் மகன் அப்னேர் சவுலின் மகன் இஸ்போசேத்தின் ஆட்களைக் கூட்டிக்கொண்டு மக்னாயீமிலிருந்து புறப்பட்டு கிபியோனுக்குப் போனான்.

  4. எனவே சவுலின் மகன் இஸ்போசேத்தின் பக்கத்தில் பென்யமீன் கோத்திரத்தாரில் பன்னிரண்டு பேரும், தாவீதின் பக்கத்தில் அவனுடைய மனிதரில் பன்னிரண்டு பேரும் எண்ணி விடப்பட்டார்கள்.

  5. ஆயாவின் மகள் ரிஸ்பாள் சவுலுக்கு மறுமனையாட்டியாக இருந்தாள். சவுலின் மகன் இஸ்போசேத் ஒரு நாள் அப்னேரிடம், “என் தகப்பனின் மறுமனையாட்டியுடன் ஏன் இப்படி உறவு கொண்டாய்?” என்று கேட்டான்.

  6. இஸ்போசேத் இவ்வாறு கேட்டதும் அப்னேர் கடுங்கோபங்கொண்டு, அவனிடம், “நீ இப்படி கேட்பதற்கு நான் யூதாவைச் சேர்ந்த ஒரு நாயா? இன்றுவரை உன் தகப்பன் சவுலின் வீட்டாருக்கும், அவர் குடும்பத்தாருக்கும், நண்பருக்கும் உண்மையுள்ளவனாயிருக்கிறேன். உன்னைத் தாவீதிடம் நான் ஒப்படைக்கவில்லை; ஆனாலும் இப்பொழுது ஒரு பெண்ணைச் சம்பந்தப்படுத்தி நீ என்னைக் குற்றம் சாட்டுகிறாயே;

  7. பின்பு தாவீது சவுலின் மகன் இஸ்போசேத்தினிடத்திற்கு தூதுவரை அனுப்பி, “நூறு பெலிஸ்தியரின் நுனித்தோலை விலையாகக் கொடுத்து நான் எனக்கென நியமித்துக்கொண்ட என் மனைவி மீகாளை எனக்குக் கொடுத்துவிடும்” என்று கேட்டான்.

  8. எனவே இஸ்போசேத் மீகாளை அவளின் கணவன் லாயீசின் மகன் பல்த்தியேலிடமிருந்து கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.

  9. பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்குப் போகப் புறப்பட்டார்கள். மத்தியான வேளையில் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அவனுடைய வீட்டிற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

  10. பின்பு அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எப்ரோனில் இருந்த தாவீது அரசனிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவனிடம், “இதோ உமது உயிரை வாங்கத்தேடிய, உமது பகைவனான சவுலின் மகன் இஸ்போசேத்தின் தலை. இன்றைய தினம் யெகோவா என் தலைவனான அரசருக்காக சவுலையும் அவன் பிள்ளைகளையும் பழிவாங்கினார்” என்றார்கள்.

  11. தாவீது அவனுடைய மனிதருக்குக் கட்டளையிட்டதும் அவர்கள் அந்த இருவரையும் கொன்றனர். பின்னர் அவர்களுடைய கைகளையும், கால்களையும் வெட்டி உடல்களை எப்ரோனில் உள்ள குளத்தருகில் தொங்கவிட்டார்கள். ஆனால் இஸ்போசேத்தின் தலையை எடுத்துச்சென்று எப்ரோனிலுள்ள அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.