Skip to content

The Vine பற்றிய பைபிள் வசனங்கள்

66 வசனங்கள் · 42 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி, அவர்களுடைய நாட்டிலிருந்த மரங்களை முறித்தார்.

  2. உன் மனைவி உன் வீட்டிற்குள் கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.

  3. அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன; திராட்சைக்கொடிகள் பூத்து நறுமணம் வீசுகின்றன. என் அன்பே, எழுந்து வா; என் அழகே, என்னோடு வா” என்று சொல்கிறார்.

  4. நம்முடைய திராட்சைத் தோட்டங்கள் பூத்திருக்கின்றன, அவற்றைப் பாழாக்குகின்ற நரிகளையும் குள்ளநரிகளையும் நமக்காகப் பிடியுங்கள்.

  5. பள்ளத்தாக்கின் புதுத் தளிர்களைப் பார்க்கவும், திராட்சைக்கொடிகள் மொட்டு விட்டிருக்கின்றனவா என்று பார்க்கவும், மாதுளை மரங்கள் பூத்திருக்கின்றனவா என்று பார்க்கவும் நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.

  6. “நான் அந்தப் பனைமரத்தில் ஏறுவேன்; அதின் பழத்தைப் பிடித்துக்கொள்வேன்” என்றேன். உனது மார்பகங்கள் திராட்சைக் குலைகள்போல் ஆவதாக, உன் சுவாசத்தின் வாசனை ஆப்பிள்போல் மணம் கமழ்வதாக,

  7. அவர் அதைக் கொத்தி கற்களை நீக்கிப் பண்படுத்தினார்; உயர்ந்தரக திராட்சைக் கொடிகளை அங்கு நட்டார். அவர் அதற்கு நடுவிலே காவற்கோபுரம் ஒன்றைக் கட்டி, திராட்சை இரசம் பிழியும் ஆலையொன்றையும் அமைத்தார். அது நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று எதிர்பார்த்தார், ஆனால் அதுவோ புளிப்பான பழங்களையே கொடுத்தது.

  8. எல்லாம் வல்ல யெகோவாவின் திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பமே. யூதாவின் மனிதர்தான் அவரின் மகிழ்ச்சியின் தோட்டம். அவர் நீதியை எதிர்பார்த்தார், ஆனால் இரத்தம் சிந்துதலையே கண்டார்; நியாயத்தை எதிர்பார்த்தார், ஆனால் முறைப்பாட்டையே கேட்டார்.

  9. எஸ்போன் வயல்களும் சிப்மாவின் திராட்சைக் கொடிகளும் வாடுகின்றன. நாடுகளின் ஆளுநர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட திராட்சைக் கொடிகளை மிதித்துப் போட்டார்கள். இவை ஒருகாலத்தில் யாசேர்வரை நீண்டு பாலைவனத்தை நோக்கிப் பரந்திருந்தன. அவைகளின் துளிர்கள் வெளியே படர்ந்து கடல்வரை சென்றிருந்தன.

  10. சிப்மாவின் திராட்சைக் கொடிகளுக்காக யாசேர் அழுவதுபோல் நானும் அழுகிறேன். எஸ்போனே, எலெயாலேயே, நான் உன்னை என் கண்ணீரால் நனைக்கிறேன்! உனது பழங்கள் விளைந்து முதிரும் காலத்திலும், உனது அறுவடையின் காலத்திலும் இருக்கும் மகிழ்ச்சியின் சத்தம் அடங்கிற்று.

  11. ஏனெனில் அறுவடைக்குமுன், திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது, யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும், படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார்.

  12. நான் உன்னை திறமையானதும், தவறாது பலன் தருவதுமான சிறந்த திராட்சைக் கொடியாக நாட்டியிருந்தேனே. அப்படியிருக்க நீ எப்படி எனக்கு விரோதமாக ஒரு பயனற்ற காட்டுத் திராட்சையாக மாறினாய்?

  13. “ ‘நான் அவர்களின் அறுவடையை எடுத்துச் செல்வேன் என்று யெகோவா அறிவிக்கிறார். திராட்சைக்கொடியில் திராட்சைப் பழங்களோ, அத்திமரத்தில் அத்திப்பழங்களோ இருக்கமாட்டாது. அவைகளின் இலைகளும் வாடிவிடும். நான் அவர்களுக்குக் கொடுத்தவை அவர்களைவிட்டு எடுபட்டுப் போகும்.’ ”

  14. நீ திரும்பவும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத் தோட்டங்களை நாட்டுவாய். விவசாயிகள் அவைகளை நாட்டி அவைகளின் பலனை அனுபவிப்பார்கள்.

  15. “அந்நாட்களில் மக்கள், “ ‘தந்தையர் புளித்த திராட்சைக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயிற்று’ என்று இனி ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.

  16. ஆனால் ஒவ்வொருவனும் தன்தன் பாவத்திற்காக சாவான். புளிப்பான திராட்சைப் பழத்தைத் தின்பவன் எவனோ, அவனுடைய பற்களே கூசிப்போகும்.”

  17. “மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?

  18. ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?

  19. அது எரிபொருளாக நெருப்பிலே போடப்பட்டு, அதன் இரு முனைகளும் எரிந்து நடுப்புறமும் கருகிப்போன பின் அது எதற்காவது பயன்படுமோ?

  20. முழுமையாக இருக்கும்போதே அது ஒன்றுக்கும் உதவவில்லையே, நெருப்பு அதை எரித்து அது கருகிப்போன பின்னர் அது எதற்குத்தான் பயன்படப்போகிறது?

  21. “ஆதலால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. காட்டு மரங்களின் நடுவிலுள்ள திராட்சைக்கொடியின் தண்டை நான் நெருப்புக்கு எரிபொருளாக ஒதுக்கியதுபோலவே, எருசலேமில் வாழும் மக்களையும் நான் நடத்துவேன். அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.

  22. என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறினாலும், நெருப்பு தொடர்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும். இவ்வாறு நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

  23. அது துளிர்த்து, தாழ்ந்து படரும் திராட்சைக்கொடியாகியது. அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேராகத் திரும்பின. அதன் வேர்கள் கீழ்நோக்கிப் போனது. இவ்விதமாய் அது ஒரு திராட்சைக்கொடியாகி கிளைகளைவிட்டுச் செழிப்பான கொப்புகளைப் படரவிட்டது.

  24. “ ‘தந்தையர் திராட்சைக் காய்களைத் தின்ன பிள்ளைகளின் பற்கள் கூசியது: என்று இஸ்ரயேல் நாட்டைக்குறித்து, நீங்கள் சொல்லும் பழமொழியின் அர்த்தம் என்ன’?

  25. தனது காதலர்களினால் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும், அவளுடைய திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் நான் பாழாக்குவேன். நான் அவற்றை புதர்க் காடாக்குவேன், காட்டு மிருகங்கள் அவற்றை அழித்துப்போடும்.