- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
The Second Temple பற்றிய பைபிள் வசனங்கள்
முக்கிய பைபிள் வசனங்கள்
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “யெகோவாவின் ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்பும் காலம் இன்னும் வரவில்லை” என இந்த மக்கள் சொல்கிறார்கள்.
அப்பொழுது இறைவாக்கினன் ஆகாய் மூலம் யெகோவாவின் வார்த்தை வந்தது.
“என் ஆலயம் இடிபாடாய்க் கிடக்கையில் நீங்கள் மட்டும் உங்கள் அலங்காரமான வீடுகளில் வாழும் காலமா இது?”
இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது: “உங்களுக்கு நடப்பதைப் பற்றி கவனமாய் யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் அதிகமாய் விதைத்திருக்கிறீர்கள், மிகக் கொஞ்சமாய் அறுவடை செய்கிறீர்கள்; நீங்கள் சாப்பிடுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் திருப்தியடைவதில்லை; நீங்கள் குடிக்கிறீர்கள், ஒருபோதும் உங்கள் தாகமோ தீருவதில்லை. உடைகளை உடுத்திக்கொள்கிறீர்கள், என்றாலும் குளிர் உங்களைவிட்டுப் போவதில்லை. நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் அதை ஓட்டையான பைகளிலேயே போடுகிறீர்கள்.”
மலைகளில் ஏறிப்போய் மரங்களை வெட்டிவந்து ஆலயத்தை கட்டுங்கள், அதில் நான் மகிழ்ந்து, நான் கனம்பண்ணப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
நீங்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகமான அறுவடை, ஆனால் அது மிகக் கொஞ்சமாக மாறிற்று. நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததையும் நான் ஊதிவிட்டேன். ஏனென்றால் என் ஆலயம் பாழடைந்து கிடக்கையில் நீங்கள் உங்கள் வீடுகளைப் பற்றியே அதிக கருத்தாய் இருக்கிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
ஆகவே உங்களின் அலட்சியத்தால் வானம் பனியைப் பெய்யாமலும், நிலம் விளைச்சலை கொடுக்காமலும் போயிற்று.
நான் வயலின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புதுத் திராட்சை இரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளையும் எல்லாவற்றின்மேலும், மனிதர்மேலும், மந்தைகள்மேலும், உங்கள் கைகளின் முயற்சிகள்மேலும் வறட்சியை வருவித்தேன்.
இந்த ஆலயத்தின் முந்திய மகிமையை கண்டவர்கள் யாராவது, உங்களுக்குள்ளே இருக்கிறார்களா? இப்பொழுது இது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? உங்களுக்கு இது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை அல்லவா?
எல்லா நாடுகளையும் அசைப்பேன், எல்லா மக்களாலும் விரும்பப்படுகிறவர் வருவார், நான் இந்த ஆலயத்தை என் மகிமையால் நிரப்புவேன்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
‘வெள்ளியும் என்னுடையதே, தங்கமும் என்னுடையதே,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
‘ஆயினும் முந்திய ஆலயத்தின் மகிமையைவிட இந்த ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ‘இந்த இடத்திலே நான் என் சமாதானத்தைக் கொடுப்பேன்,’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.”
“ ‘இப்போதாவது, இதை மிகக் கவனமாய் சிந்தியுங்கள். யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி, அஸ்திபாரம் போட்டும் ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்படும் முன்பு நிலைமை எவ்வாறு இருந்தது என சிந்தித்துப் பாருங்கள்.
நான், நீங்கள் கையிட்டுச் செய்த பயிர்களை இலைசுருட்டி வியாதியினாலும், பூஞ்சண வியாதியினாலும், பனிக்கட்டி மழையினாலும் அழித்தேன். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை,’ என யெகோவா அறிவிக்கிறார்.
களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் ஏதாவது மீதியாயிருக்கிறதா? திராட்சைக்கொடியும், அத்திமரமும், மாதுளஞ்செடியும், ஒலிவமரமும் இதுவரை காய்க்கவில்லையே. “ ‘ஆனால், இன்றுமுதல் உங்களை நான் ஆசீர்வதிப்பேன்.’ ”
என்னுடன் பேசிய தூதனிடம் நான், “ஐயா, இவை என்ன?” என்று கேட்டேன்.
அதற்கு அவன், “இவைகள் என்ன என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான். நான், “தெரியாது ஐயா” என்றேன்.
எனவே அவன் என்னிடம், “செருபாபேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: உன் வலிமையினாலும் அல்ல; உன் வல்லமையினாலும் அல்ல. என்னுடைய ஆவியானவராலேயே ஆகும்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
“மாபெரும் மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலின் முன்பாக நீ சமனான தரையாவாய். அவன்முன் ஒன்றும் தடையாயிருக்காது. அதன்பின், ‘இறைவன் ஆசீர்வதிப்பாராக! இறைவன் ஆசீர்வதிப்பாராக!’ என்ற மக்களின் ஆர்ப்பரிப்புடன் செருபாபேல் ஆலயத்தின் தலைக்கல்லைக் கொண்டுவந்து கட்டிடத்தை முடிப்பான் என்றான்.”
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
“செருபாபேலின் கைகளே இந்த ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டன; அவனுடைய கைகளே இதைக் கட்டியும் முடிக்கும். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
“இது சிறிய செயல்களின் நாளாய் இருந்தாலும் அதை அவமதிக்க வேண்டாம், ஏனெனில் இறைவன் தமது வேலையின் ஆரம்பத்திலும் மகிழ்ச்சிகொள்கிறார். செருபாபேலின் கையில் தூக்குநூலைக் காணும்போது மனிதர் யாவரும் அகமகிழ்வார்கள். நீ கண்ட இந்த ஏழு கண்களும் பூமியைச் சுற்றிப் பார்த்துக் கண்காணிக்கிற யெகோவாவின் கண்களாகும் என்றான்.”
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சேனைகளின் யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரமிட்ட நாட்களில் இருந்த இறைவாக்கினர்களான ஆகாய், சகரியாவினால் சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்பொழுது நினைவுகூருங்கள். ‘ஆலயம் கட்டப்படும்படிக்கு உங்கள் கைகள் பெலனடையட்டும்’ என்று சொன்னார்கள்.
அந்த நாட்களுக்கு முன்னர் மனிதனுக்கோ, சுமை சுமக்கும் மிருகத்திற்கோ கூலி கொடுக்கப்படவில்லை. ஒருவனாலும் தன் எதிரியின் நிமித்தம், பாதுகாப்பாகத் தன் தொழிலுக்குச் செல்லவும் முடியாதிருந்தது. ஏனெனில், ஒவ்வொருவனையும் அவன் அயலவனுக்கு எதிராக, நானே திருப்பிவிட்டிருந்தேன்.