Skip to content

Joshua

21 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Jeshua

Joshua பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:

  2. அப்பொழுது யோசதாக்கின் மகன் யெசுவாவும், அவனுடைய உடன் ஆசாரியரும், செயல்தியேலின் மகன் செருபாபேலும், அவனுடைய மனிதர்களும் சேர்ந்து இஸ்ரயேலின் இறைவனின் பலிபீடத்தைக் கட்டத் தொடங்கினார்கள். அவர்கள் இறைவனின் மனிதனான மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி, தகன காணிக்கைகளைப் பலியிடுவதற்காக பலிபீடத்தைக் கட்டினார்கள்.

  3. அவர்கள் எருசலேமுக்கு இறைவனின் ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே வேலையை ஆரம்பித்தார்கள். செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும், மீதமுள்ள அவர்களுடைய சகோதரர்களான ஆசாரியரும், லேவியர்களும், மற்றும் நாடு கடத்தப்பட்டிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்த இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் இதில் ஈடுபட்டார்கள். இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய லேவியர்கள் யெகோவாவின் ஆலயம் கட்டும் வேலையை மேற்பார்வை செய்தார்கள்.

  4. ஆனால் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரயேலின் மற்ற குடும்பத்தலைவர்களும் அவர்களிடம், “எங்கள் இறைவனுக்கு ஆலயம் கட்டுவதில் எங்களுடன் உங்களுக்குப் பங்கில்லை. பெர்சியாவின் அரசன் கோரேஸ் எங்களுக்கு கட்டளையிட்டபடி இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் தனியாக நின்றே அதைக் கட்டுவோம்” என்றார்கள்.

  5. அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும் எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத்தொடங்கினர். இறைவனின் இறைவாக்கினர்களும் அவர்களுடனிருந்து அவர்களுக்கு உதவிசெய்தனர்.

  6. செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:

  7. செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், யெசுவாவுடனும் திரும்பி வந்த ஆசாரியரும், லேவியர்களும் இவர்களே: செராயா, எரேமியா, எஸ்றா,

  8. சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா ஆகியோர். இவர்களே யெசுவாவின் நாட்களில் ஆசாரியர்களின் தலைவர்களாகவும், உடன்வேலையாட்களாகவும் இருந்தவர்கள்.

  9. யெசுவாவின் மகன் யோயாக்கீம், யொயாக்கிமின் மகன் எலியாசீப், எலியாசீப்பின் மகன் யோயதா,

  10. இவர்கள் யோசதாக்கின் மகனான யெசுவாவின் மகன் யோயாக்கீமின் நாட்களிலும் ஆளுநன் நெகேமியா, ஆசாரியனாகவும் மோசேயின் சட்ட ஆசிரியனுமான எஸ்றாவின் நாட்களிலும் பணிபுரிந்தார்கள்.

  11. பெர்சிய அரசன் தரியுவின் ஆட்சியின் இரண்டாம் வருடம், ஆறாம் மாதம் முதலாம் நாள், இறைவாக்கினன் ஆகாய் மூலம் இறைவாக்கு வந்தது. அது செயல்தியேலின் மகன் யூதாவின் ஆளுநர் செருபாபேலுக்கும், யோசதாக்கின் மகனான தலைமை ஆசாரியன் யோசுவாவுக்கும் வந்த யெகோவாவின் வார்த்தை:

  12. அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யெகோசாதாக்கின் மகன் யோசுவா என்னும் தலைமை ஆசாரியனும் மக்களில் மீதியான அனைவரும் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தங்கள் இறைவனாகிய யெகோவா இறைவாக்கினன் ஆகாயை அனுப்பியதால், அவனுடைய செய்திகளுக்கும் கீழ்ப்படிந்தார்கள். மக்களோ யெகோவாவுக்குப் பயந்தார்கள்.

  13. இவ்வாறு யெகோவா யூதாவின் ஆளுநரான செயல்தியேலின் மகன் செருபாபேலின் ஆவியையும், யெகோசாதாக்கின் மகனும் தலைமை ஆசாரியனுமாகிய யோசுவாவின் ஆவியையும், மக்களில் மீதியானோர் அனைவரின் ஆவியையும் தூண்டினார். அவர்கள் எல்லோரும், தங்கள் இறைவனாகிய சேனைகளின் யெகோவாவின் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்.

  14. “நீ யூதாவின் ஆளுநரான செயல்தியேலின் மகன் செருபாபேலிடமும், தலைமை ஆசாரியனான யெகோசாதாக்கின் மகன் யோசுவாவிடமும், மக்களில் மீதியானோரிடமும் பேசி கேட்கவேண்டியதாவது:

  15. ஆயினும் செருபாபேலே, நீ இப்பொழுது திடமனதாயிரு என யெகோவா அறிவிக்கிறார். யெகோசாதாக்கின் மகனும் தலைமை ஆசாரியனுமாகிய யோசுவாவே, நீயும் திடமனதாயிரு; நாட்டிலுள்ள மக்களே, நீங்கள் எல்லோரும் திடமனதாயிருந்து வேலையை செய்யுங்கள் என யெகோவா அறிவிக்கிறார். ஏனெனில் நான் உங்களுடனே இருக்கிறேன், என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.

  16. அதன்பின் தலைமை ஆசாரியனான யோசுவா, யெகோவாவினுடைய தூதனின் முன்னிலையில் நிற்பதை யெகோவா எனக்குக் காட்டினார். யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டுவதற்கு சாத்தானும் அவனுடைய வலதுபக்கத்தில் நின்றுகொண்டிருந்தான்.

  17. அப்பொழுது யோசுவா தூதன் முன் அழுக்கான உடை உடுத்தியவனாக நின்றான்.

  18. அவ்வேளையில் யெகோவாவினுடைய தூதன் யோசுவாவுக்குக் கொடுத்த பொறுப்புகள்:

  19. “ ‘தலைமை ஆசாரியனாகிய யோசுவாவே, நீயும் உன்னுடன் இருக்கும் ஆசாரியரும் கேளுங்கள்; வரப்போகும் நல்ல காரியங்களுக்கு அறிகுறியாயிருக்கிற நீங்களே கேளுங்கள். இதோ நான், என் அடியவராகிய கிளையைக் கொண்டுவரப் போகிறேன்.

  20. யோசுவாவின், முன்பாக நான் நிறுத்தி வைத்துள்ள கல்லைப் பாருங்கள். இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் இருக்கின்றன, அதில் நானே ஒரு கல்வெட்டினைப் பொறிப்பேன்; இந்தத் தேசத்தின் பாவங்களை ஒரே நாளில் நீக்குவேன்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.

  21. அங்கே வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து ஒரு மகுடம் செய்து அதை யெகோசாதாக்கின் மகன் யோசுவா என்னும் தலைமை ஆசாரியனின் தலையில் வை.