உள்ளடக்கத்திற்குச் செல்க

Grace of God பற்றிய பைபிள் வசனங்கள்

77 வசனங்கள் · 2 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆனால் இறைவன் தமது அன்பை நம்மேல் வைத்து, நாம் இன்னும் பாவிகளாய் இருக்கையிலேயே, கிறிஸ்து நமக்காக மரித்ததினாலேயே காண்பிக்கிறார்.

  2. ஆனால் இறைவனின் கிருபைவரத்திற்கும் ஆதாமின் மீறுதலுக்கும் பெரிய வித்தியாசமுண்டு. எப்படியெனில் ஒரே மனிதனுடைய மீறுதலின் காரணமாக அநேகர் இறந்தார்கள். ஆனால் இறைவனுடைய மகா கிருபையும், இன்னொரு மனிதனாகிய இயேசுகிறிஸ்து என்ற ஒரே மனிதரின் கிருபையினால் நமக்குக் கிடைக்கும் வரமும், அநேகர்மேல் அதிகமாய் நிரம்பி வழிகிறது.

  3. மேலும் இறைவனுடைய நன்கொடையின் விளைவோ, ஒரு மனிதனுடைய பாவத்தின் விளைவைப் போன்றதல்ல: அந்த நியாயத்தீர்ப்பு ஒரே பாவத்தினிமித்தம் தண்டனையைக் கொண்டுவந்தது; ஆனால் அந்த நன்கொடையோ பல மீறுதல்களை நீக்கி, நீதிமான்கள் என்ற தீர்ப்பைக் கொண்டுவந்தது.

  4. ஒரே மனிதனின் மீறுதலினாலே, மரணம் ஆளுகை செய்தது. அப்படியானால் இறைவனுடைய கிருபையின் நிறைவைப் பெற்றவர்களும், கிருபைவரத்தின் நீதியைப் பெற்றவர்களும், இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனினாலே எவ்வளவாய் வெற்றியுள்ள வாழ்வை வாழ்வார்கள்.

  5. ஆகையால், ஒரு மீறுதலின் பிரதிபலனாக, எல்லா மனிதருக்கும் தண்டனையின் தீர்ப்பு உண்டானதுபோல, ஒரு நீதிச் செயலின் பிரதிபலனாக, எல்லா மனிதருக்கும் வாழ்வைக் கொண்டுவருகிற, நீதிமான்கள் என்ற தீர்ப்பு உண்டானது.

  6. ஆகவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையின் மூலமாக, எல்லோரும் பாவிகள் ஆக்கப்பட்டார்கள். அதுபோலவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படிதலினாலே, எல்லோரும் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

  7. அதிகரிக்கும் மீறுதல்களை புரிந்துகொள்ளும்படியாக மோசேயின் சட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், பாவம் பெருகிய இடத்தில் அவரின் கிருபை இன்னும் அதிகமாய்ப் பெருகிற்று.

  8. மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது.

  9. இதுமாத்திரமல்ல நம்முடைய தந்தையாகிய ஈசாக்கின் மூலமாக ரெபெக்காள் இரட்டை பிள்ளைளைப் பெற்றாள்.

  10. ஆனால் இந்த இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும் முன்னதாகவே, மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான் என்று சொல்லப்பட்டது. அவர்கள் எந்தவித நன்மையையும் தீமையையும் செய்வதற்கு முன்னதாகவே, இறைவன் தாம் தெரிந்துகொள்வதன் நோக்கத்தை இவ்வாறு நிலைநிறுத்தினார்:

  11. அது செயல்களினால் அல்ல, அழைப்பவரின் அடிப்படையிலே இருக்கவேண்டும் என்பதே. இதனால்தான், “மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான்” என்று ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டது.

  12. அதனால்தான், “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டது.

  13. ஆகவே நாம் என்ன சொல்லுவோம்? இறைவன் அநீதியுள்ளவரா? ஒருபோதும் இல்லை.

  14. ஏனெனில் இறைவன் மோசேயிடம், “நான் யாருக்கு இரக்கம் காட்ட விருப்பமாயிருக்கிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன். யார்மேல் அனுதாபங்கொள்ள விருப்பமாய் இருக்கிறேனோ, அவர்மேல் அனுதாபங்கொள்வேன்” என்றார்.

  15. எனவே ஒரு மனிதனுடைய விருப்பத்தின்படியோ, அவனுடைய முயற்சியின்படியோ அல்ல, இறைவனுடைய இரக்கத்தின்படியே அவர் மனிதனைத் தெரிந்துகொள்கிறார்.

  16. அப்படியே தற்காலத்திலும் கிருபையினால் தெரிந்துகொள்ளப்பட்ட மீதியானவர்கள் இருக்கிறார்கள்.

  17. அவர்கள் கிருபையினால் தெரிந்துகொள்ளப்பட்டார்கள் என்றால், அது இனியும் நற்செயல்களினால் இராதே. அவர்களின் நற்செயல்களினால் தெரிந்துகொள்கிறார் என்றால், இறைவனின் கிருபை உண்மையான கிருபையாயிராதே.

  18. கிறிஸ்து இயேசுவில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

  19. நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சுத்திறனிலும், எல்லா அறிவிலும், எல்லாவகையிலும் செல்வச் சிறப்புடையவர்களாய் விளங்குகிறீர்கள்.

  20. ஏனெனில், கிறிஸ்துவைப்பற்றிய எங்களுடைய சாட்சி உங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  21. ஆகவே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், ஆவிக்குரிய வரம் யாதொன்றிலும் குறைவுபடாதிருக்கிறீர்கள்.

  22. இறைவன் கடைசிமட்டும் உங்களைப் பலமுள்ளவர்களாய்க் காத்துக்கொள்வார். அதனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து திரும்பவரும் நாளில், நீங்கள் எந்தவித குற்றமும் சாட்டப்படாதவர்களாய் இருப்பீர்கள்.

  23. ஆனால் நான் தாயின் கருப்பையில் இருக்கும்போதே என்னை வேறுபிரித்த இறைவன், தம்முடைய கிருபையினால் என்னை அழைத்து,

  24. கிறிஸ்துவை என்னில் வெளிப்படுத்த பிரியங்கொண்டார். தம்முடைய மகனின் நற்செய்தியை யூதரல்லாத மக்களுக்கு நான் அறிவிப்பதற்காக இறைவனே இப்படிச் செய்தார், அப்பொழுது அது குறித்து நான் எந்த மனிதனிடமும் ஆலோசனை கேட்கவுமில்லை,

  25. இயேசுகிறிஸ்துவின் மூலமாய் சொந்த பிள்ளைகளாக்கிக்கொள்ள நம்மை முன்குறித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார்.