உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. உபாகமம் 10:19சுமார் கி.மு. 1491

    நீங்கள் எகிப்தில் அந்நியராய் இருந்ததினால் அந்நியர்களிடம் அன்புகூருங்கள்.

  2. உபாகமம் 10:20சுமார் கி.மு. 1491

    நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து அவருக்குப் பணிசெய்யுங்கள். அவரை உறுதியாய் பற்றிக்கொண்டு, அவருடைய பெயரிலேயே ஆணையிடுங்கள்.

  3. உபாகமம் 10:21சுமார் கி.மு. 1491

    அவரே உங்கள் புகழ்ச்சி; உங்கள் கண்களால் கண்ட மகத்துவமும் பயங்கரமான அதிசயங்களைச் செய்த உங்களுடைய இறைவன் அவரே.

  4. உபாகமம் 10:22சுமார் கி.மு. 1491

    உங்கள் முற்பிதாக்கள் எழுபதுபேர்களாய் எகிப்திற்குப் போனார்கள், இப்பொழுதோ உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைப் போலாக்கினார்.

  5. உபாகமம் 11:1சுமார் கி.மு. 1491

    நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து அவருடைய நியமங்களையும், விதிமுறைகளையும், சட்டங்களையும், கட்டளைகளையும் எப்பொழுதும் கைக்கொள்ளுங்கள்.

  6. உபாகமம் 11:2சுமார் கி.மு. 1491

    உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கண்டித்தலைக் கண்டு அனுபவித்தது உங்கள் பிள்ளைகள் அல்ல, நீங்களே என்பதை இன்று நினைவிற்கொள்ளுங்கள். தமது மாட்சிமையையும், மகத்துவத்தையும், பலத்த கரத்தையும், நீட்டப்பட்ட புயத்தையும் அவர் உங்களுக்கே காண்பித்தார்.

  7. உபாகமம் 11:3சுமார் கி.மு. 1491

    எகிப்தின் நடுவில் எகிப்திய அரசனாகிய பார்வோனுக்கும், அவனுடைய முழு நாட்டுக்கும் வல்லமையான செயல்களையும் அடையாளங்களையும் நடப்பித்ததையும் நீங்களே கண்டீர்கள்.

  8. உபாகமம் 11:4சுமார் கி.மு. 1491

    எகிப்திய படைவீரர்கள் உங்களைப் பின்தொடர்கையில், அவர்களையும் அவர்களின் குதிரைகளையும், தேர்களையும் யெகோவா செங்கடலின் தண்ணீரில் மூழ்கடித்து, யெகோவா அவர்கள்மேல் நிரந்தர அழிவை வரப்பண்ணியதையும் நீங்களே கண்டீர்கள்.

  9. உபாகமம் 11:5சுமார் கி.மு. 1491

    நீங்கள் இவ்விடத்திற்கு வருமளவும் அவர் பாலைவனத்திலே உங்களுக்காகச் செய்ததைக் கண்டதும் உங்கள் பிள்ளைகள் அல்ல நீங்களே.

  10. உபாகமம் 11:6சுமார் கி.மு. 1491

    ரூபனியரான எலியாபின் மகன்களான தாத்தான், அபிராம் ஆகியோருக்கு அவர் செய்ததையும் நீங்களே கண்டீர்கள். இஸ்ரயேலர் மத்தியில் பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், அவர்களுக்கிருந்த எல்லா உயிரினங்களையும் விழுங்கிற்று.

  11. உபாகமம் 11:7சுமார் கி.மு. 1491

    யெகோவா செய்த இந்த பெரும் செயல்களையெல்லாம் உங்கள் கண்களே கண்டன.

  12. உபாகமம் 11:8சுமார் கி.மு. 1491

    நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் எல்லாவற்றையும் பதித்துகொள்ளுங்கள். அப்படிச் செய்தால்தான் நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டைக் கைப்பற்றுவதற்கு உங்களுக்குப் பெலன் இருக்கும்.

  13. உபாகமம் 11:9சுமார் கி.மு. 1491

    அப்படியே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கும், அவர்கள் சந்ததிக்கும் தருவேன் என்று வாக்களித்த பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிலே நீங்கள் நீடித்து வாழ்வீர்கள்.

  14. உபாகமம் 11:10சுமார் கி.மு. 1491

    ஏனெனில், நீங்கள் கைப்பற்றுவதற்காக செல்லப்போகும் நாடு நீங்கள் விட்டுவந்த எகிப்து நாட்டைப்போல் இராது. எகிப்திலே நீங்கள் விதையை நாட்டி, காய்கறித் தோட்டத்திற்கு கஷ்டப்பட்டு உங்கள் காலால் நீர்ப்பாசனப் பள்ளங்களைத் தோண்டி நீர்பாய்ச்சினீர்கள்.

  15. உபாகமம் 11:11சுமார் கி.மு. 1491

    ஆனால் நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கப்போகும் நாடு, மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள நாடு, அது வானத்திலிருந்து மழைநீரால் பாய்ச்சல் பெறும் நாடு.

  16. உபாகமம் 11:12சுமார் கி.மு. 1491

    அது உங்கள் இறைவனாகிய யெகோவா பராமரிக்கும் நாடு. வருடத்தின் தொடக்கமுதல் முடிவுவரை அந்த நாட்டின்மேல் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வை தொடர்ந்து இருக்கும்.

  17. உபாகமம் 11:13சுமார் கி.மு. 1491

    இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் என் கட்டளைகளுக்கு நீங்கள் உண்மையாகக் கீழ்ப்படிந்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவருக்குப் பணிசெய்வீர்களானால்,

  18. உபாகமம் 11:14சுமார் கி.மு. 1491

    அவர் உங்கள் நாட்டிற்குக் கோடை மழையையும், இலையுதிர்காலம் மற்றும் வசந்தகால மழையையும் அதினதின் காலத்தில் அனுப்புவார். ஆகவே உங்கள் தானியத்தையும், புது திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் நீங்கள் குறைவில்லாமல் சேர்த்துக்கொள்வீர்கள்.

  19. உபாகமம் 11:15சுமார் கி.மு. 1491

    உங்கள் வளர்ப்பு மிருகங்களுக்கு வெளிகளிலே வயல்வெளிகளிலே பண்ணுவார்; நீங்களும் சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள்.

  20. உபாகமம் 11:16சுமார் கி.மு. 1491

    நீங்கள் வேறு தெய்வங்கள் பக்கம் திரும்பி, அவற்றை வழிபட்டு, அவர்களை வணங்குமாறு உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாதபடி கவனமாயிருங்கள்.

  21. உபாகமம் 11:17சுமார் கி.மு. 1491

    இல்லாவிட்டால், யெகோவாவின் கோபம் உங்களுக்கு விரோதமாக மூண்டு, மழை பெய்யாதபடி வானத்தை அடைத்துப்போடுவார். அப்போது உங்கள் நிலமும் தன் பலனைத் தராது; யெகோவா உங்களுக்குக் கொடுத்த நல்ல நாட்டிலிருந்து நீங்களும் அழிந்துபோவீர்கள்.

  22. உபாகமம் 11:18சுமார் கி.மு. 1491

    ஆகையால் நீங்கள், என்னுடைய இந்த வார்த்தைகளை உங்கள் இருதயங்களிலும், உங்கள் மனங்களிலும் பதித்துக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் கைகளிலும், நெற்றிகளிலும் அடையாளச் சின்னங்களாகக் கட்டிக்கொள்ளுங்கள்.

  23. உபாகமம் 11:19சுமார் கி.மு. 1491

    அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும் போதியுங்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், தெருவில் நடக்கும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவற்றைக்குறித்துப் பேசுங்கள்.

  24. உபாகமம் 11:20சுமார் கி.மு. 1491

    அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், முற்றத்தின் வாசல்களிலும் எழுதிவையுங்கள்.

  25. உபாகமம் 11:21சுமார் கி.மு. 1491

    ஆகையால் பூமிக்குமேல் வானம் அநேக நாட்கள் நீடித்திருக்கிறதுபோல, யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று வாக்களித்த அந்த நாட்டில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும் அநேகமாய் நீடித்திருக்கும்.