உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. உபாகமம் 11:22சுமார் கி.மு. 1491

    நீங்கள் பின்பற்றும்படி நான் கொடுக்கும் கட்டளைகளை நீங்கள் கவனமாகக் கைக்கொண்டால், அதாவது உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளில் நடந்து, அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டால்,

  2. உபாகமம் 11:23சுமார் கி.மு. 1491

    யெகோவா உங்களுக்கு முன்பாக அந்த நாட்டினர் அனைவரையும் துரத்திவிடுவார்; நீங்கள் உங்களைவிடப் பெரியதும், வலியதுமான நாடுகளை அவர்களுக்குரிய இடத்திலிருந்து துரத்துவீர்கள்.

  3. உபாகமம் 11:24சுமார் கி.மு. 1491

    நீங்கள் கால் வைக்கும் இடமெல்லாம் உங்களுடையதாகும். உங்கள் ஆட்சிக்குரிய பிரதேசம் பாலைவனம்தொடங்கி லெபனோன் வரைக்கும், ஐபிராத்து நதிதொடங்கி மத்திய தரைக்கடல் வரைக்கும் பரந்திருக்கும்.

  4. உபாகமம் 11:25சுமார் கி.மு. 1491

    உங்களை எதிர்த்துநிற்க ஒருவராலும் முடியாது. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குப்பண்ணியபடி, நீங்கள் போகும் இடமெல்லாம் உங்களைப்பற்றிய பயத்தையும், திகிலையும் முழு நாட்டிலும் வரப்பண்ணுவார்.

  5. உபாகமம் 11:26சுமார் கி.மு. 1491

    பாருங்கள்; இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் வைக்கிறேன்.

  6. உபாகமம் 11:27சுமார் கி.மு. 1491

    இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்.

  7. உபாகமம் 11:28சுமார் கி.மு. 1491

    நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்படியாமல் நீங்கள் அறியாத வேறு தெய்வங்களைப் பின்பற்றி, இன்று நான் கட்டளையிடுகிற வழியைவிட்டு விலகினால் சாபத்தைப் பெறுவீர்கள்.

  8. உபாகமம் 11:29சுமார் கி.மு. 1491

    உங்கள் இறைவனாகிய யெகோவா, நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிற்கு உங்களைக் கொண்டுவந்து சேர்க்கும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும், ஏபால் மலையின்மேல் சாபத்தையும் பிரசித்தப்படுத்துங்கள்.

  9. உபாகமம் 11:30சுமார் கி.மு. 1491

    நீங்கள் அறிந்திருக்கிறபடி அம்மலைகள் யோர்தானுக்கு அப்பால், சூரியன் மறையும் இடத்தை நோக்கி, பாதைக்கு மேற்கே, கில்காலுக்கு அருகேயுள்ள அரபாவில் கானானியர் வசிக்கும் இடங்களில் மோரேயின் பெரிய மரங்களுக்கருகில் இருக்கின்றன.

  10. உபாகமம் 11:31சுமார் கி.மு. 1491

    உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டிற்குப்போய் அதை உரிமையாக்குவதற்கு நீங்கள் யோர்தானைக் கடக்கப்போகிறீர்கள். அதை நீங்கள் கைப்பற்றி அங்கே வாழ்கிறபோது,

  11. உபாகமம் 11:32சுமார் கி.மு. 1491

    நான் உங்களுக்கு முன்பாகக் கொடுக்கும் விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படியக் கவனமாய் இருங்கள்.

  12. உபாகமம் 12:1சுமார் கி.மு. 1451

    உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, நீங்கள் உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்களுக்குக் கொடுத்திருக்கிற நாட்டில் வாழும் காலமெல்லாம், நீங்கள் கைக்கொள்ளும்படி கவனமாயிருக்கவேண்டிய விதிமுறைகளும் சட்டங்களும் இவையே:

  13. உபாகமம் 12:2சுமார் கி.மு. 1451

    அங்கே நீங்கள் வெளியேற்றும் நாடுகள் வழிபட்ட உயர்ந்த மலைகளிலும், குன்றுகளின்மேலும், படர்ந்த ஒவ்வொரு மரங்களின் கீழும் இருக்கும் தெய்வங்களின் வழிபாட்டிடங்களை எல்லாம் நீங்கள் முற்றிலும் அழித்துப்போடுங்கள்.

  14. உபாகமம் 12:3சுமார் கி.மு. 1451

    அவர்களுடைய பலிபீடங்களை உடைத்து, அவர்களுடைய புனிதக் கற்களை நொறுக்கி, அசேரா விக்கிரகக் கம்பத்தை நெருப்பில் எரித்துப்போடுங்கள். அவர்களுடைய தெய்வங்களின் விக்கிரகங்களை வெட்டி வீழ்த்தி, அந்த இடங்களிலிருந்து அவர்களுடைய பெயர்களையே இல்லாமல் செய்துவிடுங்கள்.

  15. உபாகமம் 12:4சுமார் கி.மு. 1451

    நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவை அவர்களுடைய வழிகளில் வழிபடக்கூடாது.

  16. உபாகமம் 12:5சுமார் கி.மு. 1451

    நீங்களோ உங்கள் இறைவனாகிய யெகோவா எல்லா கோத்திரங்களிலிருந்தும் தமது உறைவிடமாகத் தெரிந்துகொண்டு, தமது பெயரை இடுகிற அந்த இடத்தையே தேடவேண்டும். அந்த இடத்திற்கே நீங்கள் போகவேண்டும்;

  17. உபாகமம் 12:6சுமார் கி.மு. 1451

    நீங்கள் அங்கேயே உங்கள் தகன காணிக்கைகள், பலிகள், உங்கள் பத்திலொரு பங்கு, நீங்கள் கொடுப்பதாக நேர்ந்துகொண்ட விசேஷ அன்பளிப்புகள், சுயவிருப்பு காணிக்கைகள், ஆட்டு மந்தை, மாட்டு மந்தை ஆகியவற்றின் தலையீற்றுகள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும்.

  18. உபாகமம் 12:7சுமார் கி.மு. 1451

    அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன், நீங்களும் உங்கள் குடும்பங்களும் சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்த எல்லாவற்றையும் குறித்து மகிழ்வீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.

  19. உபாகமம் 12:8சுமார் கி.மு. 1451

    இன்று இங்கே நாம் ஒவ்வொருவரும் நமது விருப்பப்படி நமக்குச் சரியெனப்பட்டதைச் செய்ததுபோல், அங்கே நீங்கள் செய்யக்கூடாது.

  20. உபாகமம் 12:9சுமார் கி.மு. 1451

    உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற இளைப்பாறும் இடத்திற்கும், உரிமைச்சொத்திற்கும் நீங்கள் போய்ச் சேரும்போது அப்படிச் செய்யக்கூடாது.

  21. உபாகமம் 12:10சுமார் கி.மு. 1451

    நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டிலேபோய் வாழப்போகிறீர்கள். அங்கே அவர் உங்களைச்சூழ உள்ள பகைவர்களிடத்தில் இருந்து உங்களுக்கு ஆறுதல் கொடுப்பார். நீங்கள் அங்கே பாதுகாப்பாய் வாழ்வீர்கள்.

  22. உபாகமம் 12:11சுமார் கி.மு. 1451

    பின்பு உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் வழங்கும்படி தமக்கு வசிப்பிடமாகத் தெரிந்துகொள்ளும் இடத்துக்கு நீங்கள் போவீர்கள். அங்கே நான் கட்டளையிடுகிற ஒவ்வொன்றையும் கொண்டுவர வேண்டும். உங்கள் தகன காணிக்கைகளையும், பலிகளையும், உங்கள் பத்திலொரு பங்கையும், கொடைகளையும், யெகோவாவுக்குக் கொடுப்பேன் என நீங்கள் நேர்த்திக்கடன்செய்த எல்லா உடைமைகளையும் கொண்டுவாருங்கள்.

  23. உபாகமம் 12:12சுமார் கி.மு. 1451

    அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக களிகூருங்கள். நீங்களும் உங்கள் மகன்களும், மகள்களும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் தங்களுக்கு சொந்தப் பங்கோ உரிமைச்சொத்தோ இல்லாத உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியருமான எல்லோரும் களிகூருங்கள். பலிகளுக்குரிய நிபந்தனைகள்

  24. உபாகமம் 12:13சுமார் கி.மு. 1451

    நீங்கள் விரும்பிய இடமெல்லாம் தகன காணிக்கைகளைப் பலியிடாதபடி கவனமாய் இருங்கள்.

  25. உபாகமம் 12:14சுமார் கி.மு. 1451

    உங்கள் கோத்திரங்களில் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் மட்டுமே அவற்றைச் செலுத்துங்கள். நான் கட்டளையிட்ட யாவையும் அங்கே செய்யுங்கள்.