- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
- எண்ணாகமம் 7:30சுமார் கி.மு. 1490
நான்காம் நாள் ரூபன் கோத்திர மக்களின் தலைவனான சேதேயூரின் மகன் எலிசூர் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
- எண்ணாகமம் 7:31சுமார் கி.மு. 1490
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
- எண்ணாகமம் 7:32சுமார் கி.மு. 1490
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
- எண்ணாகமம் 7:33சுமார் கி.மு. 1490
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
- எண்ணாகமம் 7:34சுமார் கி.மு. 1490
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
- எண்ணாகமம் 7:35சுமார் கி.மு. 1490
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. சேதேயூரின் மகன் எலிசூரின் காணிக்கை இதுவே.
- எண்ணாகமம் 7:36சுமார் கி.மு. 1490
ஐந்தாம் நாள் சிமியோன் கோத்திர மக்களின் தலைவனான சூரிஷதாயின் மகன் செலூமியேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
- எண்ணாகமம் 7:37சுமார் கி.மு. 1490
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
- எண்ணாகமம் 7:38சுமார் கி.மு. 1490
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
- எண்ணாகமம் 7:39சுமார் கி.மு. 1490
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
- எண்ணாகமம் 7:40சுமார் கி.மு. 1490
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
- எண்ணாகமம் 7:41சுமார் கி.மு. 1490
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும் ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. சூரிஷதாயின் மகன் செலூமியேலின் காணிக்கை இதுவே.
- எண்ணாகமம் 7:42சுமார் கி.மு. 1490
ஆறாம் நாள் காத் கோத்திர மக்களின் தலைவனான தேகுயேலின் மகன் எலியாசாப் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
- எண்ணாகமம் 7:43சுமார் கி.மு. 1490
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
- எண்ணாகமம் 7:44சுமார் கி.மு. 1490
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
- எண்ணாகமம் 7:45சுமார் கி.மு. 1490
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
- எண்ணாகமம் 7:46சுமார் கி.மு. 1490
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
- எண்ணாகமம் 7:47சுமார் கி.மு. 1490
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. தேகுயேலின் மகன் எலியாசாபின் காணிக்கை இதுவே.
- எண்ணாகமம் 7:48சுமார் கி.மு. 1490
ஏழாம்நாள் எப்பிராயீம் கோத்திர மக்களின் தலைவனான அம்மியூதின் மகன் எலிஷாமா தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
- எண்ணாகமம் 7:49சுமார் கி.மு. 1490
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டிருந்தது.
- எண்ணாகமம் 7:50சுமார் கி.மு. 1490
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
- எண்ணாகமம் 7:51சுமார் கி.மு. 1490
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
- எண்ணாகமம் 7:52சுமார் கி.மு. 1490
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்;
- எண்ணாகமம் 7:53சுமார் கி.மு. 1490
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. அம்மியூதின் மகன் எலிஷாமாவின் காணிக்கை இதுவே.
- எண்ணாகமம் 7:54சுமார் கி.மு. 1490
எட்டாம் நாள் மனாசே கோத்திரத் தலைவன் பெதாசூரின் மகன் கமாலியேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.