உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எண்ணாகமம் 7:80சுமார் கி.மு. 1490

    அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.

  2. எண்ணாகமம் 7:81சுமார் கி.மு. 1490

    அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.

  3. எண்ணாகமம் 7:82சுமார் கி.மு. 1490

    பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்;

  4. எண்ணாகமம் 7:83சுமார் கி.மு. 1490

    சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. ஏனானின் மகன் அகீராவின் காணிக்கை இதுவே.

  5. எண்ணாகமம் 7:84சுமார் கி.மு. 1490

    பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்ட போது, அதன் அர்ப்பணிப்பிற்காகக் கொடுக்கப்பட்ட இஸ்ரயேல் தலைவர்களின் காணிக்கைகளாவன: பன்னிரண்டு வெள்ளி தட்டங்கள், பன்னிரண்டு தெளிக்கும் வெள்ளிக் கிண்ணங்கள், பன்னிரண்டு தங்கத் தட்டுகள்.

  6. எண்ணாகமம் 7:85சுமார் கி.மு. 1490

    ஒவ்வொரு வெள்ளித்தட்டங்களும் நூற்று முப்பது சேக்கல் எடையுள்ளதாயும், ஒவ்வொரு தெளிக்கும் கிண்ணமும் எழுபது சேக்கல் எடையுள்ளதாயும் இருந்தன. எல்லா வெள்ளித்தட்டுகளும் பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறையின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் எடையுள்ளதாயிருந்தன.

  7. எண்ணாகமம் 7:86சுமார் கி.மு. 1490

    நறுமணத்தூளினால் நிரப்பப்பட்ட பன்னிரண்டு தங்கத் தட்டுகளும், பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறையின்படி பத்து சேக்கல் நிறையுடையதாய் இருந்தன. தங்கத் தட்டுகள் எல்லாம் நூற்றியிருபது சேக்கல் நிறையுடையதாய் இருந்தன.

  8. எண்ணாகமம் 7:87சுமார் கி.மு. 1490

    தகன காணிக்கைக்கான மிருகங்களின் மொத்த எண்ணிக்கை பன்னிரண்டு இளம் காளைகளும், பன்னிரண்டு செம்மறியாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய பன்னிரண்டு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளுமாய் இருந்தன. அதோடு அவற்றுடன் தானிய காணிக்கையும் இருந்தது. பாவநிவாரண காணிக்கையாக பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்கள் செலுத்தப்பட்டன.

  9. எண்ணாகமம் 7:88சுமார் கி.மு. 1490

    சமாதான காணிக்கையாகப் பலி செலுத்துவதற்கான மிருகங்களின் மொத்த எண்ணிக்கை இருபத்து நான்கு எருதுகள், அறுபது செம்மறியாட்டுக் கடாக்கள், அறுபது வெள்ளாட்டுக் கடாக்கள், ஒரு வயதுடைய அறுபது செம்மறியாட்டு கடாக்குட்டிகளுமாய் இருந்தன. பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்டபின் அதன் அர்ப்பணிப்பிற்கான காணிக்கைகள் இவையே.

  10. எண்ணாகமம் 7:89சுமார் கி.மு. 1490

    மோசே யெகோவாவுடன் பேசுவதற்காகச் சபைக் கூடாரத்திற்குள் சென்றபோது, சாட்சிப்பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்திற்கு மேலாக இருக்கும், இரண்டு கேருபீன்களுக்கும் இடையில் இருந்து தன்னோடு பேசுகிற குரலைக் கேட்டான். இவ்விதமாக யெகோவா மோசேயோடு பேசினார்.

  11. எண்ணாகமம் 8:1சுமார் கி.மு. 1490

    யெகோவா மோசேயிடம்,

  12. எண்ணாகமம் 8:2சுமார் கி.மு. 1490

    “நீ ஆரோனிடம் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நீ அந்த ஏழு விளக்குகளையும் வைக்கும்போது, அவை விளக்குத்தண்டிற்கு முன்னுள்ள பகுதிக்கு வெளிச்சம் கொடுக்கவேண்டும்’ என்று சொல்” என்றார்.

  13. எண்ணாகமம் 8:3சுமார் கி.மு. 1490

    ஆரோனும் அப்படியே செய்தான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் விளக்குத்தாங்கியின் விளக்குகளின் முன்பக்கம் பார்க்கும்படி அவற்றை வைத்தான்.

  14. எண்ணாகமம் 8:4சுமார் கி.மு. 1490

    அந்த குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்த விதமாவது: அதன் அடிப்பாகத்திலிருந்து நுனியிலுள்ள பூக்கள்வரை அது அடிக்கப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. யெகோவா மோசேக்குக் காட்டிய குத்துவிளக்கின் வடிவத்தைப் போலவே அது செய்யப்பட்டிருந்தது.

  15. எண்ணாகமம் 8:5சுமார் கி.மு. 1490

    திரும்பவும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:

  16. எண்ணாகமம் 8:6சுமார் கி.மு. 1490

    “நீ மற்ற இஸ்ரயேலருக்குள்ளிருந்து லேவியரைப் பிரித்தெடுத்து, சம்பிரதாய முறைப்படி அவர்களைத் தூய்மைப்படுத்து.

  17. எண்ணாகமம் 8:7சுமார் கி.மு. 1490

    அவர்களைச் சுத்திகரிக்கும்படி செய்யவேண்டியதாவது, நீ சுத்திகரிக்கும் தண்ணீரை அவர்கள்மேல் தெளிக்கவேண்டும். பின் அவர்கள் தங்கள் உடல் முழுவதையும் சவரம்செய்து தங்களது உடைகளைக் கழுவும்படி செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களைச் சுத்தப்படுத்தட்டும்.

  18. எண்ணாகமம் 8:8சுமார் கி.மு. 1490

    ஒரு இளங்காளையையும், அதனுடன் அதற்கான தானிய காணிக்கையாக எண்ணெய் கலந்து பிசைந்த சிறந்த மாவையும் அவர்களை எடுக்கும்படி செய்யவேண்டும். அதன்பின் நீயும், பாவநிவாரண காணிக்கையாக இரண்டாவது காளையை எடுத்துக்கொள்ளவேண்டும்.

  19. எண்ணாகமம் 8:9சுமார் கி.மு. 1490

    நீ லேவியரை சபைக் கூடாரத்திற்குமுன் அழைத்துவந்து, முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் அங்கே கூடிவரச்செய்யவேண்டும்.

  20. எண்ணாகமம் 8:10சுமார் கி.மு. 1490

    நீ லேவியரை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். இஸ்ரயேலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைக்கவேண்டும்.

  21. எண்ணாகமம் 8:11சுமார் கி.மு. 1490

    ஆரோன், லேவியரை இஸ்ரயேலரின் அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். அப்பொழுது அவர்கள் யெகோவாவின் வேலையைச் செய்வதற்கு ஆயத்த மாவார்கள்.

  22. எண்ணாகமம் 8:12சுமார் கி.மு. 1490

    “லேவியர் அக்காளைகளின் தலையில் தங்கள் கைகளை வைக்கவேண்டும். அதன்பின் ஒரு காளையைப் பாவநிவாரண காணிக்கையாக யெகோவாவுக்குச் செலுத்தி, இன்னொன்றை லேவியருக்கான பாவநிவிர்த்தி செய்யும்படி, தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.

  23. எண்ணாகமம் 8:13சுமார் கி.மு. 1490

    ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் முன்பாக லேவியரை நிறுத்தி, யெகோவாவுக்கு அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கவேண்டும்.

  24. எண்ணாகமம் 8:14சுமார் கி.மு. 1490

    இவ்விதம் நீ லேவியரை இஸ்ரயேலருக்குள் இருந்து வேறுபிரிக்க வேண்டும். லேவியர் எனக்குரியவர்களாக இருப்பார்கள்.

  25. எண்ணாகமம் 8:15சுமார் கி.மு. 1490

    “நீ லேவியரைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபின், அவர்கள் சபைக் கூடாரத்தில் தங்கள் வேலையைச் செய்வதற்கு வரவேண்டும்.