- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Sinai & The Law
God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.
- லேவியராகமம் 6:24சுமார் கி.மு. 1490
யெகோவா மோசேயிடம்,
- லேவியராகமம் 6:25சுமார் கி.மு. 1490
“நீ ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொல்லவேண்டியதாவது: பாவநிவாரண காணிக்கைக்கான ஒழுங்குமுறைகள் இவையே: தகன காணிக்கைக்கான மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்திலேயே பாவநிவாரண காணிக்கைக்கான மிருகமும் யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லப்படவேண்டும். இது மகா பரிசுத்தமானது.
- லேவியராகமம் 6:26சுமார் கி.மு. 1490
அதைச் செலுத்தும் ஆசாரியன் அதைச் சாப்பிடவேண்டும். அதை சபைக்கூடார முற்றத்தில் உள்ள ஒரு பரிசுத்த இடத்திலேயே சாப்பிடவேண்டும்.
- லேவியராகமம் 6:27சுமார் கி.மு. 1490
காணிக்கை இறைச்சியைத் தொடுகிற எதுவும் பரிசுத்தமாகும். அதன் இரத்தம் ஏதேனும் உடையில் தெறித்திருந்தால், அதை நீங்கள் பரிசுத்த இடத்திலே கழுவவேண்டும்.
- லேவியராகமம் 6:28சுமார் கி.மு. 1490
அது சமைக்கப்பட்ட மண்சட்டி உடைக்கப்பட வேண்டும். ஆனால் அது வெண்கலப் பானையில் சமைக்கப்பட்டால், அந்தப் பானையை நன்கு தேய்த்து தண்ணீரால் அலசவேண்டும்.
- லேவியராகமம் 6:29சுமார் கி.மு. 1490
ஆசாரியர்களின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். அது மகா பரிசுத்தமானது.
- லேவியராகமம் 6:30சுமார் கி.மு. 1490
ஆனால் எந்தவொரு பாவநிவாரண காணிக்கையின் இரத்தமும், பரிசுத்த இடத்தில் பாவநிவிர்த்தி செய்யப்படுவதற்காக சபைக் கூடாரத்திற்குள் கொண்டுவரப்பட்டால், அக்காணிக்கையைச் சாப்பிடக்கூடாது; அது எரிக்கப்படவேண்டும்.
- லேவியராகமம் 7:1சுமார் கி.மு. 1490
“ ‘குற்றநிவாரண காணிக்கைக்கான ஒழுங்குமுறைகள் இவையே: அது மகா பரிசுத்தமானது.
- லேவியராகமம் 7:2சுமார் கி.மு. 1490
தகன காணிக்கை மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்திலேயே, குற்றநிவாரண காணிக்கைக்கான மிருகமும் வெட்டிக் கொல்லப்படவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கப்படவேண்டும்.
- லேவியராகமம் 7:3சுமார் கி.மு. 1490
அதன் கொழுப்பு முழுவதும் காணிக்கையாகச் செலுத்தப்பட வேண்டும். கொழுப்பான வாலும், உள்ளுறுப்புகளை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும்.
- லேவியராகமம் 7:4சுமார் கி.மு. 1490
விலாவுக்குக் கீழ்ப்புறமாக இருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அகற்றப்பட வேண்டிய ஈரலை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும்.
- லேவியராகமம் 7:5சுமார் கி.மு. 1490
ஆசாரியன் அவற்றை யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது குற்றநிவாரண காணிக்கை.
- லேவியராகமம் 7:6சுமார் கி.மு. 1490
ஆசாரியனின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்திலேயே சாப்பிடவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
- லேவியராகமம் 7:7சுமார் கி.மு. 1490
“ ‘பாவநிவாரண காணிக்கையும், குற்றநிவாரண காணிக்கையும் ஒரே விதிமுறைப்படியே செய்யப்படவேண்டும். அவற்றைக் கொண்டு பாவநிவிர்த்தி செய்யும் ஆசாரியனுக்கே அவை சொந்தமாகும்.
- லேவியராகமம் 7:8சுமார் கி.மு. 1490
யாருக்காகிலும் தகன காணிக்கையைச் செலுத்தும் ஆசாரியன் அதன் தோலை தனக்காக எடுத்துக்கொள்ளலாம்.
- லேவியராகமம் 7:9சுமார் கி.மு. 1490
அடுப்பில் தயாரிக்கப்பட்டதும், சட்டியில் சமைக்கப்பட்டதும், இரும்பு வலைத்தட்டியில் சுடப்பட்டதுமான தானியக் காணிக்கைகள் எல்லாம், அவற்றைச் செலுத்தும் ஆசாரியருக்கே உரியன.
- லேவியராகமம் 7:10சுமார் கி.மு. 1490
எண்ணெய் சேர்க்கப்பட்டதாயினும், சேர்க்கப்படாத உலர்ந்ததாயினும், எல்லா தானியக் காணிக்கையும் ஆரோனின் மகன்கள் எல்லோருக்கும் சமமாக உரியதாகும்.
- லேவியராகமம் 7:11சுமார் கி.மு. 1490
“ ‘ஒருவன் யெகோவாவுக்குக் கொடுக்கும் சமாதான காணிக்கையின் ஒழுங்குமுறைகள் இவையே:
- லேவியராகமம் 7:12சுமார் கி.மு. 1490
“ ‘அவன் தன் நன்றியுணர்வை வெளிப்படுத்த அதைச் செலுத்துவானாகில், இந்த நன்றிக் காணிக்கையுடன், புளிப்பில்லாமல் எண்ணெயில் பிசைந்து செய்யப்பட்ட அடை அப்பங்களையும், புளிப்பில்லாமல் செய்யப்பட்டு எண்ணெய் தடவப்பட்ட அதிரசங்களையும், சிறந்த மாவுடன் எண்ணெய் கலந்து நன்கு பிசைந்து சுடப்பட்ட அடைகளையும் அவன் செலுத்தவேண்டும்.
- லேவியராகமம் 7:13சுமார் கி.மு. 1490
நன்றி செலுத்துவதற்கான தன் சமாதான காணிக்கையுடன், புளிப்பூட்டிச் சுடப்பட்ட அடை அப்பங்களையும் அவன் காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
- லேவியராகமம் 7:14சுமார் கி.மு. 1490
அவன் ஒவ்வொரு வகையான அப்பத்திலும் ஒவ்வொன்றை யெகோவாவுக்கு அன்பளிப்பான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். சமாதான காணிக்கையின் இரத்தத்தைத் தெளிக்கும் ஆசாரியருக்கே இது உரியது.
- லேவியராகமம் 7:15சுமார் கி.மு. 1490
நன்றி செலுத்தும் சமாதான காணிக்கையின் இறைச்சியானது அது செலுத்தப்பட்ட நாளிலேயே, சாப்பிடப்பட வேண்டும். அவன் அதில் ஒன்றையும் காலைவரை விட்டுவைக்கக்கூடாது.
- லேவியராகமம் 7:16சுமார் கி.மு. 1490
“ ‘எனினும், அவனுடைய காணிக்கை ஒரு நேர்த்திக்கடனாகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கையாகவோ இருந்தால், அவன் பலிசெலுத்தும் நாளிலேயே அதைச் சாப்பிடவேண்டும். ஆனால் ஏதாவது மீதமிருந்தால் அடுத்தநாள் சாப்பிடலாம்.
- லேவியராகமம் 7:17சுமார் கி.மு. 1490
ஆனாலும், மூன்றாம் நாள்வரை விட்டுவைக்கப்பட்ட பலியின் இறைச்சி எதுவும் எரிக்கப்படவேண்டும்.
- லேவியராகமம் 7:18சுமார் கி.மு. 1490
சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும் மூன்றாம் நாளில் சாப்பிட்டால், அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அது காணிக்கை செலுத்துபவருக்கு பலனளிக்காது. ஏனெனில், அது அசுத்தமானது. அதில் எதையாவது சாப்பிடுபவன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாவான்.