உள்ளடக்கத்திற்குச் செல்க

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 வசனங்கள் · 21 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. கலாத்தியர் 5:19சுமார் கி.பி. 58

    மாம்ச இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை, அவையாவன: முறைகேடான பாலுறவு, அசுத்த பழக்கங்கள், காமவேட்கை;

  2. கலாத்தியர் 5:20சுமார் கி.பி. 58

    விக்கிரக வழிபாடு, மாந்திரீகம்; பகைமை, தகராறு, எரிச்சல் குணம், கோபம், சுயநலம், பிரிவினைகள், பேதங்கள்,

  3. கலாத்தியர் 5:21சுமார் கி.பி. 58

    பொறாமை; குடிவெறி, களியாட்டம் போன்றவைகளே. நான் உங்களை முன்பு எச்சரித்ததுபோலவே இப்பொழுதும் எச்சரிக்கிறேன். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள், இறைவனுடைய அரசில் உரிமை பெறுவதில்லை.

  4. கலாத்தியர் 5:22சுமார் கி.பி. 58

    ஆனால் ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், உண்மைத்தனம்,

  5. கலாத்தியர் 5:23சுமார் கி.பி. 58

    சாந்தகுணம், சுயக்கட்டுப்பாடு என்பனவாகும். இவைகளுக்கு முரணான எந்தவித சட்டமும் இல்லை.

  6. கலாத்தியர் 5:24சுமார் கி.பி. 58

    கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள், தங்கள் மாம்சத்தின் இயல்பை, அதன் தீவிர உணர்ச்சிகளுடனும் ஆசைகளுடனும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

  7. கலாத்தியர் 5:25சுமார் கி.பி. 58

    நாம் பரிசுத்த ஆவியானவரால் வாழ்கிறபடியால், ஆவியானவருடனேயே ஒவ்வொரு காலடியையும் எடுத்துவைப்போம்.

  8. கலாத்தியர் 5:26சுமார் கி.பி. 58

    நாம் வீண்பெருமை கொண்டவர்களாய் இருக்கக்கூடாது. மற்றவர்களை எரிச்சல் மூட்டுகிறவர்களாகவோ, ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்கிறவர்களாகவோ இருக்கக்கூடாது.

  9. கலாத்தியர் 6:1சுமார் கி.பி. 58

    பிரியமானவர்களே, யாராவது ஒரு பாவம் செய்து அகப்பட்டுக்கொண்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனை சாந்தமாக நல்வழிப்படுத்த வேண்டும். நீங்களும் கவனமாயிருங்கள். ஏனெனில், நீங்களும்கூட சோதனைக்கு உள்ளாகலாம்.

  10. கலாத்தியர் 6:2சுமார் கி.பி. 58

    ஒவ்வொருவரும், மற்றவர்களுடைய சுமைகளைச் சுமக்க உதவிசெய்யுங்கள். இவ்விதமாகவே, நீங்கள் கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றுவீர்கள்.

  11. கலாத்தியர் 6:3சுமார் கி.பி. 58

    யாராவது தன்னுடைய உண்மை நிலையை அறியாது, தன்னை ஒரு முக்கியமான ஆளாகக் கருதினால், அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான்.

  12. கலாத்தியர் 6:4சுமார் கி.பி. 58

    ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களைத் தானே சோதித்துப் பார்க்கவேண்டும். அப்பொழுது மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல், தன்னுடைய செயலின் தன்மையிலேயே ஒருவன் பெருமைப்பட முடியும்.

  13. கலாத்தியர் 6:5சுமார் கி.பி. 58

    ஒவ்வொருவனும் தன்னுடைய சுமைக்குத் தானே பொறுப்பாளி.

  14. கலாத்தியர் 6:6சுமார் கி.பி. 58

    இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கிறவர்கள், தங்களுக்கு அதைக் கற்றுக் கொடுக்கிறவர்களுடன், தங்களிடமுள்ள எல்லா நன்மைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

  15. கலாத்தியர் 6:7சுமார் கி.பி. 58

    ஏமாந்து போகவேண்டாம்: இறைவனை ஏமாற்றித் தப்பமுடியாது. ஒரு மனிதன் தான் விதைக்கிறதையே அறுவடை செய்வான்.

  16. கலாத்தியர் 6:8சுமார் கி.பி. 58

    ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்.

  17. கலாத்தியர் 6:9சுமார் கி.பி. 58

    நன்மை செய்வதில் நாம் சோர்வடையாது இருக்கவேண்டும். நாம் அதைக் கைவிடாமல் செய்யும்போது, ஏற்றகாலத்தில் அதன் அறுவடையைப் பெற்றுக்கொள்வோம்.

  18. கலாத்தியர் 6:10சுமார் கி.பி. 58

    ஆகவே நமக்குத் தருணம் கிடைக்கும்போதெல்லாம், எல்லா மக்களுக்கும் நன்மையைச் செய்வோமாக. முக்கியமாக விசுவாசிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.

  19. கலாத்தியர் 6:11சுமார் கி.பி. 58

    என் கையெழுத்தாக நான் உங்களுக்கு எவ்வளவு பெரிய எழுத்துக்களில் இதை எழுதினேன் என்று பாருங்கள்.

  20. கலாத்தியர் 6:12சுமார் கி.பி. 58

    வெளித்தோற்றத்தைக் காண்பித்து, மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற முயலுகிறவர்களே விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவினுடைய சிலுவையின் நிமித்தம், தாங்கள் துன்புறுத்தப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் ஒரே காரணத்திற்காகவே அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

  21. கலாத்தியர் 6:13சுமார் கி.பி. 58

    விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களும், மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளாமல் இருக்கிறார்களே; அப்படியிருக்க உங்கள் விருத்தசேதனத்தைக் குறித்துத் தாங்கள் பெருமிதம் கொள்வதற்காகவே, நீங்களும் அதைச் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

  22. கலாத்தியர் 6:14சுமார் கி.பி. 58

    நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைத் தவிர, வேறு எதைக் குறித்தும் பெருமைகொள்வது வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில், அந்தச் சிலுவையில், உலகத்தின் கவர்ச்சிகரமான யாவும் அறையப்பட்டவைகளாக இருக்கின்றன. இந்த உலகத்தின் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், நானும் சிலுவையில் அறையப்பட்டவனாகவே இருக்கிறேன்.

  23. கலாத்தியர் 6:15சுமார் கி.பி. 58

    ஒருவன் விருத்தசேதனம் செய்துகொள்கிறானா அல்லது அதைச் செய்யாதிருக்கிறானா என்பது முக்கியமல்ல, அவன் ஒரு புதிய படைப்பாய் வாழ்கிறானா என்பதே முக்கியம்.

  24. கலாத்தியர் 6:16சுமார் கி.பி. 58

    இந்த ஒழுங்குவிதியைப் பின்பற்றுகிறவர்களுக்கு சமாதானமும், இரக்கமும் உண்டாவதாக. இறைவனுடைய இஸ்ரயேலர்கள்மேலும் அது இருப்பதாக.

  25. கலாத்தியர் 6:17சுமார் கி.பி. 58

    இனிமேலாவது ஒருவனும் எனக்குத் துன்பம் உண்டாக்காதிருக்கட்டும். ஏனெனில் இயேசுவின் தழும்புகளை நான் என் உடலில் சுமக்கிறேனே.