உள்ளடக்கத்திற்குச் செல்க

The Altar of Burnt Offering பற்றிய பைபிள் வசனங்கள்

150 வசனங்கள் · 30 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “பின்பு தகன பலிபீடத்தை சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின், வாசலுக்கு முன் வைக்கவேண்டும்.

  2. பின்பு தகன பலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து, பீடத்தை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும்.

  3. யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டபடியே, சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் நுழைவு வாசலுக்கு அருகே தகன பலிபீடத்தை வைத்து, அதன்மேல் தகன காணிக்கையையும், தானியக் காணிக்கையையும் செலுத்தினான்.

  4. அதன்பின் ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தத் துண்டுகளை, தலையும் கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் அடுக்கவேண்டும்.

  5. ஆகிலும், உள்ளுறுப்புகளையும், கால்களையும் காணிக்கையைக் கொண்டுவந்தவன் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர், அவையெல்லாவற்றையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடவேண்டும். இது ஒரு தகன காணிக்கை. இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.

  6. பின்பு சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்கு முன்பாக இருக்கும் நறுமண தூபபீடத்தின் கொம்புகளின்மேல், ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தைப் பூசவேண்டும். காளையின் மீதமுள்ள இரத்தத்தை, சபைக்கூடார வாசலில் இருக்கும் தகன பலிபீடத்தின் அடியிலே ஊற்றவேண்டும்.

  7. அவன் அந்த இரத்தத்தில் கொஞ்சத்தை, சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்கு முன்பாக இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளில் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தை அவன் சபைக்கூடார வாசலில் உள்ள தகன பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும்.

  8. பின்பு ஆசாரியன், பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, அதைத் தகன காணிக்கை பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தை, அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும்.

  9. பலிபீடத்தின்மேல் நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அது அணைந்துபோகக் கூடாது.

  10. பின்பு மோசே, அபிஷேக எண்ணெயை எடுத்து இறைசமுகக் கூடாரத்தையும், அதனுள் இருந்த எல்லாவற்றையும் அபிஷேகித்து அர்ப்பணம் செய்தான்.

  11. அந்த எண்ணெயில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுமுறை தெளித்து, பலிபீடத்தையும், அதிலுள்ள பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் காலையும் அர்ப்பணிக்கும்படி அபிஷேகித்தான்.

  12. மோசே அந்தக் காளையை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலில் தொட்டு, பலிபீடத்தைச் சுத்திகரிப்பதற்காக, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசினான். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். இவ்விதமாக பலிபீடத்திற்காக பாவநிவிர்த்தி செய்து அதை அர்ப்பணம் செய்தான்.

  13. யெகோவாவிடமிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த தகன காணிக்கையையும், கொழுப்பான பாகங்களையும் பட்சித்தது. மக்கள் அனைவரும் அதைக் கண்டபோது, மகிழ்ச்சியினால் ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்தார்கள்.

  14. குருடானதையோ, காயமடைந்ததையோ, முடமானதையோ அல்லது தோலில் மருவுள்ளதையோ, சொறி அல்லது சீழ்வடியும் புண்ணுள்ளதையோ யெகோவாவுக்குச் செலுத்தவேண்டாம். இவைகளில் எதையும், நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கையாக, பலிபீடத்தின்மேல் வைக்கவேண்டாம்.

  15. மோசே இறைசமுகக் கூடாரத்தை அமைத்து முடித்தபின், அதையும் அதன் பொருட்களையும், அபிஷேகித்து அர்ப்பணம் செய்தான். அத்துடன் அவன் பலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம்பண்ணி அர்ப்பணம் செய்தான்.

  16. பின்பு இஸ்ரயேலரின் தலைவர்களான, எண்ணப்பட்டவர்களுக்குப் பொறுப்பாயிருந்த கோத்திரங்களின் தலைவர்களான குடும்பத் தலைவர்கள், தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

  17. அவர்கள் ஆறு கூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு எருதுகளையும் ஒரு தலைவனுக்கு ஒரு எருதும், இரண்டு தலைவனுக்கு ஒரு வண்டியுமாக யெகோவாவுக்கு முன்பாகத் தங்கள் கொடைகளாகக் கொண்டுவந்தார்கள். இவற்றை அவர்கள் இறைசமுகக் கூடாரத்திற்குமுன் வைத்து கொடுத்தார்கள்.

  18. அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  19. “சபைக்கூடார வேலைக்கு பயன்படுத்தும்படியாக அவற்றை நீ அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளவேண்டும். அவற்றை ஒவ்வொருவனுடைய வேலைகளுக்கும் வேண்டியபடி லேவியரிடம் கொடு” என்றார்.

  20. எனவே மோசே அந்த வண்டிகளையும், எருதுகளையும் லேவியரிடம் கொடுத்தான்.

  21. அவன் இரண்டு வண்டிகளையும், நாலு எருதுகளையும் கெர்சோனியருக்கு அவர்களுடைய வேலைக்குத் தேவையான அளவு கொடுத்தான்.

  22. மெராரியருக்கு அவர்களுடைய வேலைக்குத் தேவையானபடி நாலு வண்டிகளையும் இரண்டு எருதுகளையும் கொடுத்தான். அவர்கள் எல்லோரும் ஆசாரியனாகிய ஆரோனின் மகனாகிய இத்தாமாரின் வழிகாட்டலின் கீழ் இருந்தார்கள்.

  23. ஆனால் மோசே கோகாத்தியருக்கு வண்டிகளையோ எருதுகளையோ கொடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் தாங்கள் பொறுப்பாயிருந்த பரிசுத்த பொருட்களைத் தங்கள் தோள்களிலேயே சுமக்கவேண்டும்.

  24. பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்ட போது, தலைவர்கள் தங்கள் காணிக்கைகளை அதன் அர்ப்பணிப்பிற்காகக் கொண்டுவந்து பலிபீடத்திற்கு முன்னால் வைத்தார்கள்.

  25. ஏனெனில், “பலிபீடத்தின் அர்ப்பணிப்பிற்காக ஒரு நாளைக்கு ஒரு தலைவனாக தன் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும்” என்று யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்தார்.